Published:Updated:

விநாயகர் சதுர்த்தி விழா! கரூரில் ரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலையைக் கரைக்க கலெக்டர் தடை!

துரை.வேம்பையன்
விநாயகர் சதுர்த்தி விழா! கரூரில் ரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலையைக் கரைக்க கலெக்டர் தடை!
விநாயகர் சதுர்த்தி விழா! கரூரில் ரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலையைக் கரைக்க கலெக்டர் தடை!


 

\

'விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, கரூர் மாவட்டத்தில் ரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளைக் குடிநீருக்கு ஆதாரமான நீர்நிலைகளில் கரைக்கக் கூடாது' என்று மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தடை விதித்திருக்கிறார்.

இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,  'தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின்போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளைச் செய்து, அவற்றை வழிபட்ட பிறகு, நீர்நிலைகளில் கரைக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக ரசாயனப் பூச்சுகளுடன்கூடிய விநாயகர் சிலைகளைச் செய்து, வழிபட்ட பின்னர், அவற்றை நீர்நிலைகளில் கரைப்பதால், நீர்நிலைகள் மாசுபடுகின்றன. எனவே, கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கடைப்பிடித்து விநாயகர் சதுர்த்தியை பாரம்பர்ய வழக்கப்படி சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்டதும்/சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயனக் கலவை அற்றதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். இத்தகைய சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம். ரசாயன வர்ணம் (பெயின்ட்) பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.


ஏரிகளிலும் மற்ற நீர்நிலைகளிலும் விநாயகர் சிலைகளைக் கரைக்காமல் காவல்துறை மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் ஆலோசனையின்படி கரூர் மாவட்டத்தில் அத்தகைய சிலைகளைக் கரைப்பதற்கு கண்டறியப்பட்டுள்ள இடங்களான, காவிரி ஆற்றின் கரையில் உள்ள தவிட்டுப்பாளையம், வாங்கல், நெரூர், மாயனூர் மற்றும் குளித்தலை கடம்பர் கோயில் அருகிலும், அமராவதி ஆற்றில் அரவக்குறிச்சி, ராஜபுரம் ஆகிய இடங்களில் குடிநீர் ஆதாரம் பாதிக்கா வண்ணம் அவற்றிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால் விநாயகர் சிலைகளைக் கரைக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.