Published:Updated:

மனிதன் மாறி விட்டான்!

மனிதன் மாறி விட்டான்!

பிரீமியம் ஸ்டோரி
மனிதன் மாறி விட்டான்!

35. ஒரு முகம் எந்த விகிதத்தில் இருந்தால், அது வசீகரமாக இருக்கும்?

விடை: 1.6 மடங்கு நீளம் : 1 மடங்கு அகலம்.

1.6 : 1 என்பது முக்கியமான விகிதாசாரம். தங்க விகிதம் என்பது இதுதான். 'ஃபிபினாக்ஸி தொடர்’ என்பது இந்தத் தங்க விகிதத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். சூரியகாந்தி மலரின் இதழ் அடுக்குகளின் விகிதாசாரமும் இப்படி ஒரு விகிதத்தில்தான் அமைந்து இருக்கின்றன. ஒருவகையில் நாம் அனைவருமே தங்க மனிதர்கள்தாம். டாவின்ஸி அவருடைய புகழ்பெற்ற ஓவியங்களை இந்த விகிதத்தில் அமைத்ததைப் பற்றி 'டாவின்ஸி கோட்’ புத்தகத்தில் டான் ப்ரௌன் குறிப்பிடுகிறார்.

36. ஓர் இயக்கம் மலரக் காரணம்?

விடை: அவரோடு இணையும் இரண்டாம் நபர்.

இதுவும் ஆய்வின்மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இரண்டாவது நபர்தான் மற்றவர்களை அந்த இயக்கத்தில் இணையத் தூண்டுகிறார். ஒருவர் மட்டுமே இருந்தால், அது கோட்பாடாகவே இருக்கும். இயக்கமாக ஆகாது.  

37. உலகம் சுற்றுகிறது. ஆனால், நம் தலை ஏன் சுற்றுவதில்லை?

விடை: நம்மைச் சுற்றியுள்ள எல்லாப் பொருள்களுமே சுற்றுவதால்.

எல்லாப் பொருள்களும் நம்முடன் சேர்ந்து சுற்றுவதால் இது நமக்குத் தெரிவதில்லை.

 38. தூங்கும்போது செலவாகும் கலோரிகளைவிட, தொலைக்காட்சி பார்க்கும்போது செலவாகும் கலோரிகள்...

விடை: குறைவு.

இதிலிருந்து தொடர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது உடலுக்கு எவ்வளவு கெடுதல் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

 39. முகரும் தன்மை நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுகிறது என்ற தகவல்...

விடை: சரி.

வீட்டில் எரிவாயு கசிவதை முகர்தல் மூலமே கண்டுபிடிக்கிறோம். உணவு கெட்டுப்போனதையும், விஷம் கலந்ததையும் கண்டுபிடிக்க மூக்கே உதவுகிறது. ஓர் அறையில் எலி செத்துக் கிடந்தால் எங்குக்கிடக்கிறது? என்பதைக் கண்கள் துழாவ மூக்கே முன்மொழிகிறது.  

மனிதன் மாறி விட்டான்!

40. உங்கள் நண்பர்களோடு தேநீர் சாப்பிடும்போது...

விடை: தேநீர் சாப்பிட அழைத்தவர் பணம் தரவேண்டும் என எண்ணுவீர்கள்.

அழைத்தவர் பணம் அளிப்பதே பண்பாடு. எப்போதும் நாம் கொடுத்தால் ஏதோ நாம் மேலானவர்கள் என்கிற எண்ணம் ஏற்படும். அதை மற்றவர்கள் விரும்பமாட்டார்கள். ஒருமுறைகூட கொடுக்காவிட்டால், ஒரு முறைக்கு​மேல் யாரும் கூப்பிடமாட்டார்கள்.

 41. உங்களிடம் ஒருவர் புதிய இடத்துக்கு அடையாளம் கேட்கிறார். அவரிடம் எப்படி வழி சொல்வீர்கள்?

விடை: நேரத்தையும் முக்கிய அடையாளமான வேறோர் இடத்தையும் வைத்து.

விரிவடைந்த சாலைகள், வேகமான ஊர்திகள், வழுக்கிச் செல்லும் வழிகள், தங்க நாற்கரங்கள் ஆகியவற்றால் இன்று நேரமே தூரத்தைத் தீர்மானிக்கிறது. முக்கியமான அடையாளத்தைச் சொன்னால்தான் துல்லியமாக விசாரித்து இடத்தை அடைய முடியும்.

 42. உங்கள் வீட்டுக்கு முக்கிய மனிதர் விருந்துக்கு வருகிறார். அவர் மெதுவாகச் சாப்பிடுபவர். அவரோடு அமர்ந்து சாப்பிடும்போது...

விடை: அவர் சாப்பிடும் வரை சாப்பிடுவீர்கள்.

முக்கியமான மனிதர்கள் சாப்பிடும் வரை நாமும் மெதுவாகச் சாப்பிடுவதுதான் பண்பாடு.

 43. உங்கள் குழந்தைகளோடு விளையாடுகிறீர்கள்.  

விடை: சிலநேரம் ஜெயித்தும் சிலநேரம் தோற்றும் விளையாடுவீர்கள்.

எப்போதும் நம் திறமையைக் காட்டி வெற்றி பெற்றால் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை குறைந்துவிடும். 'வேண்டும்’ என்றே எப்போதும் தோற்றால், வாழ்க்கையில் வேறு எங்கு தோற்றாலும் விரக்தி வந்துவிடும். எனவே, குழந்தைகளிடம் சில நேரங்களில் தோற்பதும் சில நேரங்களில் ஜெயிப்பதும் அவர்கள் திறமையை மேம்படுத்திக்கொள்ள உதவும்.  

44. நீங்கள் ஒரு நிறுவனத்துக்குப் பணிக்குச் சேர நேர்காணலுக்குச் செல்கிறீர்கள். முதலாளி காந்தியவாதி...

விடை: பணியாளர்கள் உடை அணியும் பாணியில் உடை அணிவீர்கள்.

பணியாளர்கள் உடையில் செல்வதைத்தான் முதலாளி எதிர்பார்ப்பார். முதலாளியைப்போல உடை அணிந்தால் கூழைக் கும்பிடு போடுகிறவர்கள் என்று எண்ணுவார். அவரைப்போல உடை அணிவதை யாரும் விரும்பமாட்டார்கள்.

 45. ஒரு சர்க்கரைக் கட்டியை நாக்கின் பின்புறம் நீங்கள் வைத்தால்...

விடை: சுவையே தெரியாது.

இனிப்புச் சுவையின் மொட்டுகள் நாக்கின் நுனியில்தான் இருக்கின்றன. ஆகவே, உள்ளே வைத்து விழுங்கினால் தெரியாது.  கசப்புச் சுவை மொட்டுகள் நாக்கின் இறுதியில் இருக்கின்றன. எனவே, விழுங்கினாலும் கசப்பிலிருந்துத் தப்பிக்க முடியாது.

46. நீங்கள் கடிகாரம் வாங்கச் செல்கிறீர்கள். ரூ.1,000/-க்கு  ஒரு கடிகாரத்தைத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் நண்பர் பக்கத்துக் கடையில் அதே கடிகாரம் ரூ.900/-க்கு கிடைப்பதாகச் சொல்கிறார். நீங்கள் அந்தக் கடைக்குச் சென்று கடிகாரம் வாங்குகிறீர்கள். அடுத்த வாரம் ஒரு கடையில் ரூ.1,10,000/-க்கு வைர மோதிரம் தேர்வு செய்து பில் போடப் போகிறீர்கள். அப்போது அதே நண்பர் இன்னொரு கடையில் அதே மோதிரம் ரூ.1,09,900/-க்குக் கிடைப்பதாகச் சொல்கிறார்.

விடை: 100 ரூபாய் குறைவாகக் கிடைக்கும் கடையில்தான் வாங்குவீர்கள்.

எந்தவிதத்தில் பார்த்தாலும் 100 ரூபாய் முக்கியமானதுதான். எனவே, நாம் விகிதாசாரப்படி பார்க்காமல் தொகையின் அளவைப் பார்க்க வேண்டும். 'பேபர்ஸ் விதி’ என்கிற ஒன்று இருக்கிறது. அதில் நாம் ஒட்டுமொத்த அளவோடு ஒப்பிட்டுத்தான் வாங்குவதா, இல்லையா? என்று முடிவு செய்கிறோம். ஆனால் அது சரியான அணுகுமுறை அல்ல.

 47. சில ஊர்களில் திருவிழாக்களின்போது வேல்களையும், ஈட்டிகளையும், வாயில் குத்திக்கொள்கிறார்கள். இவர்களுக்கு...

விடை: வலியைப் பற்றியே நினைக்காமலும் பேசாமலும் இருந்தால் வலி நம்மைத் தாக்குவதில்லை.

மன இயலில் 'கதவுக் கட்டுப்பாடு’ என்று ஒரு கோட்பாடு உண்டு. வலியைத் தாங்குபவர்கள் உற்சாக மனநிலையில் இருந்தால், அவர்கள் மூளையில் இருந்து ஒரு தகவல் பறந்து, வலி உண்டாக்கும் வழிகளை அடைத்துவிடுகிறது. அதனால்தான் அலகு குத்தும்போது அருகில் இருப்பவர்கள் உற்சாகக் குரல் கொடுப்பார்கள். அந்தக் கொண்டாட்டத்தின் காரணமாக வலி தோன்றுவதில்லை. மனமே வலியைத் தீர்மானிக்கிறது.  

  48. அளவுக்கு அதிகமாக கண் விழித்து தொடர்ந்து படித்தாலோ அல்லது உழைத்தாலோ...

விடை: இழந்த உடல் நலத்தைப் பின்னர் முறையான தூக்கத்தால் ஈடுகட்ட முடியும்.

தூக்கத்தை இழந்தால் ஈடுகட்ட முடியாது. ஆனால் தூக்கமின்மையால் ஏற்படும் சில பிரச்னைகள் மறுபடியும் சகஜமாக தூங்க ஆரம்பித்ததும் சரியாகிவிடும்.

- அறிவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு