Published:Updated:

``144 தடை..’’ - வரலாறு தெரியுமா? #MyVikatan

Chennai during 144
Chennai during 144 ( Vikatan Team )

பல்வேறு நாளிதழ்களிலும்,சினிமாவிலும் ஊரடங்கு குறித்து கேள்விப்பட்டுள்ளோம். அதுகுறித்த சில தகவல்கள்..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"நீங்கள் ஜனநாயகத்தை நூறு வழிகளில் வரையறுக்கலாம். ஆனால் சுயக்கட்டுப்பாடுடைய சமுதாயமே ஜனநாயகம் என்பது ஒரு வரையறையாகும்" என்றார் நேரு.

நாடெங்கும் கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு தற்போது அமலில் உள்ளபோது மக்கள் அனைவரும் சுயக்கட்டுப்பாட்டுடன் ஒத்துழைத்து வருவது பாராட்டுக்குரியது. பல்வேறு நாளிதழ்களிலும், சினிமாவிலும் ஊரடங்கு குறித்து கேள்விப்பட்டுள்ளோம். தற்போது அதுகுறித்த சில தகவல்கள்..

Chennai during 144
Chennai during 144

#ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு உத்தரவு (curfew) என்பது பிரெஞ்சு மொழியில் இருந்து வந்தது. "'couvre-feu'" என்பது "நெருப்பை மூடுவது" என்று பொருள். அனைத்து விளக்குகளையும், மெழுகுதிரிகளையும் அணைக்கும் நேரத்தை இது குறிக்கப் பயன்பட்டது. இச்சொல் பின்னர் curfeu என்ற சொல்லாக இடைக்கால ஆங்கிலத்திலும், பின்னர் 'curfew" என்ற சொல்லாக நவீன ஆங்கிலத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிரிட்டீஷ் இந்தியாவில், இந்திய விடுதலை இயக்க வீரர்களை ஒடுக்கும் வகையில் இச்சட்டங்கள் இயற்றப்பட்டது குறுப்பிடத்தக்கது.

ஒவ்வொரு முறை அசாதாரண சூழல் ஏற்படும் போதெல்லாம் இச்சட்டம் பயன்படுகிறது.

#முதல் ஊரடங்கு உத்தரவு

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1861ஆம் ஆண்டில் பரோடாவில் ஒரு கலவரம் ஏற்பட்டது. அக்கலவரத்தை ஒடுக்குவதற்கு ஐ.பி.எஸ் அதிகாரியான ராஜ் ரத்னா E.F. டீபோ என்ற காவல் அதிகாரி நியமிக்கப்பட்டார். அவர் மக்கள் கூடுவதை தடுக்க 144-வது பிரிவை வடிவமைத்தார். அதன் மூலம் பரோடா மாநிலத்தில் அந்த நேரத்தில் மொத்தக் கலவரத்தையும் குறைத்தார். குற்றங்களை குறைத்தற்காக அம்மாகாண அரசர் கெய்க்வாட்டிடம் தங்கப்பதக்கம் பெற்றார். பின் ஆங்கில அரசு சுதந்திர போராட்ட காலத்தில் அடிக்கடி இதனை பயன்படுத்தியது. சிறுசிறு மாற்றங்களுடன் தொடர்ந்து தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Chennai during 144
Chennai during 144

#குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144

* பாதுகாப்பு அச்சுறுத்தல் அல்லது கலவரத்தின் அவசர நிலைகளில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 144 தடை உத்தரவு அமலாக்கப்படுகிறது.

* பொதுபாதிப்பு, உயிர்சேதம், போராட்டம், வன்முறை, சாதி சண்டை, கலவரம், நோய் பாதிப்பு போன்ற காரணங்களுக்காக பிறப்பிக்கலாம்.

* பிரிவு 144 நடைமுறைப்படுப்பட்ட பகுதியில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடத்தில் கூடுவது சட்ட விரோதமாக கருதப்படுகிறது.

* இக்கால கட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்போர் ஒப்படைக்க வேண்டும்.

* குறிப்பிட்ட மக்களால் பொது அமைதிக்கும், பொது ஒழுங்கிற்கும் பங்கம் ஏற்படும் என்று யூகம் வந்தால், அந்தந்த இடங்களில் பிரிவு 144-ஐ அரசாங்கம் நடைமுறைப்படுத்தும்.

#தண்டனை

இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 188. பொது ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட கட்டளைக்குக் கீழ்ப்படியாமை:-

இந்த தடையை மீறி நடந்தால், இந்திய தண்டனை சட்டத்தின் 188–ம் பிரிவின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படும். தடையை மீறியதால் மக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துவோருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.200 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தடை உத்தரவை யாரும் மீறினால், மனித உயிருக்கு சேதம், சுகாதாரக் கேடு, கலவரம் ஏற்பட்டு பொது அமைதி குலைந்துபோனால் அவர்களுக்கு 6 மாத ஜெயில் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Chennai during 144
Chennai during 144

#நடைமுறை

144 தடை உத்தரவு காலம் இரு மாதங்களும், அதிகபட்சம் 6 மாதங்கள் வரையும் நீட்டிக்கலாம். நிலைமை சீரானவுடன் எப்போது வேண்டுமானாலும் நீக்கிக்கொள்ளலாம். ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகத் தலைமை அமல்படுத்த வேண்டுமானால், அதற்கு அரசின் அனுமதி அவசியம்.

டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகை, நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், பிரதமர் இல்லம், விமான நிலையங்கள் போன்ற பகுதிகளில் 144 தடை உத்தரவு எல்லாக் காலங்களிலும் அமலில் உள்ள வகையில், அது நீட்டிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.

பிரதமர், மாநில முதல்வர், மாவட்ட ஆட்சியர் அல்லது மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் இருப்பவர்கள், அவர்கள் நிர்வாகம் செய்யும் பகுதிக்குள்ளான இடங்களில் குறிப்பிட்ட நபருக்கு எதிராகவோ, குறிப்பிட்ட நகரத்திற்கு எதிராகவோ இந்த ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கலாம்.

#கடைசியாக...

தேர்தல் காலங்களில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க இச்சட்டம் போடப்படும். இந்தியாவில், காஷ்மீரில் அதிகப்படியாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 2012 ல் பரமக்குடியில், 2013ல் தருமபுரியில் போடப்பட்டது. சுகாதார விழிப்புணர்வு டெங்கு காரணமாக, கடலூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chennai during 144
Chennai during 144

#நமது கடமை

விலகியிருப்பதும் வீட்டிலிருப்பதும் நம் முக்கியக் கடமை. வருமுன் காவாதான் வாழ்க்கை எனும் குறளின் பொருளாக குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோள் போர் போல் அழிந்துவிடும் என்ற வள்ளுவனின் வாக்கிற்கிணங்க வரும் முன் காப்போம். நோய் பரவுவதை தடுப்போம்.

-மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு