Published:Updated:

`ஐ.ஏ.எஸ்னா சேவை செய்யலாம்னு நென்னச்சேன்.. ஆனால்!’ - ராஜினாமா செய்த முன்னாள் கலெக்டர்

கலிலுல்லா.ச

`மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்; அவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நம்மில் பலர் வேலைக்கு வருகிறோம்.'

Kannan Gopinathan
Kannan Gopinathan

கேரளா வெள்ளத்தை நம்மால் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் அனைத்தும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டின. அந்த நேரத்தில் யூனியன் பிரதேசமான தாத்ரா நாகர் ஹவேலியில் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் கண்ணன் கோபிநாதன். கேரளா வெள்ள நிவராணத்துக்காக, தான் ஒரு ஐ.எ.ஏஸ் அதிகாரி என்றும் யாரிடமும் கூறாமல், மக்களோடு மக்களாக அவர்களுக்கு உதவினார் கண்ணன். இதனால் மக்கள் மத்தியில் அவர் ஹீரோவாக வலம்வந்தார்.

Kannan Gopinathan
Kannan Gopinathan

இதற்கிடையே, தாத்ரா நாகரில் மின்சார மற்றும் எரிசக்திதுறை செயலாளராக இருக்கும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய உள்துறை செயலாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், `என் பெயர் கண்ணன். 2012 பேட்ச். நான் ஐ.ஏ.எஸ் பொறுப்பிலிருந்து விலகுகிறேன். என்னுடைய ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது ராஜினமாவுக்கான காரணம் குறித்து வெளிப்படையாகக் கூறப்படவில்லை. இது தொடர்பாக மலையாள மனோரமா செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அவர், `மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்; அவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நம்மில் பலர் வேலைக்கு வருகிறோம்.

Kannan Gopinathan
Kannan Gopinathan

ஆனால், அப்படியிருக்கும்போது, என் குரல் அங்கே மதிப்படுவதில்லை; குரலுக்கான முக்கியத்துவம் இல்லை என்றபோது நான் ராஜினாமா செய்ய முடிவு செய்தேன். என்னால் எனது மனசாட்சிக்கு விரோதமாகச் செயல்பட முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 20-ம் தேதி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``சிவில் பணிகளில் இருப்பது சக குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பாகும் என்று நான் ஒருமுறை நினைத்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.