Published:Updated:

காவல் துறையினர் எவரையும் சந்தேகம் கொண்டு கைது செய்ய அதிகாரம் உண்டா? | Doubt of Common Man

நம் வாசகருக்கும் காவல்துறையின் செயல்பாடு குறித்த சந்தேகம் ஒன்று எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.

காவல் துறையினர் எவரையும் சந்தேகம் கொண்டு கைது செய்ய அதிகாரம் உண்டா? | Doubt of Common Man

நம் வாசகருக்கும் காவல்துறையின் செயல்பாடு குறித்த சந்தேகம் ஒன்று எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.

Published:Updated:
விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் தாஸ் என்ற வாசகர், "காவல் துறை அதிகாரிகள் சாதாரணமாக எவரையும் சந்தேகம் கொண்டு கைது செய்ய அதிகாரம் உண்டா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

காவல் துறை அதிகாரிகளின் அதிகார வரம்புகள் பற்றி நாம் முழுமையாக அறிந்திருப்பதில்லை. திரைப்படங்களில் பார்ப்பதை வைத்தும், செய்திகள் படிப்பதை வைத்தும் தான் காவல்துறையின் செயல்பாடுகளைப் பற்றி ஒரு யோசனையை நாம் வைத்திருக்கிறோம். அதைப் பற்றிய சந்தேகங்களும், குழப்பங்களும் நம்மிடையே நிறையவே இருக்கின்றன. நம் வாசகருக்கும் காவல்துறையின் செயல்பாடு குறித்த சந்தேகம் ஒன்று எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைதாணை
கைதாணை
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நம் வாசகரின் கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ளத் தமிழ்நாடு காவல் பயிற்சியகத்தின் முன்னாள் முதல்வர் திரு.சித்தண்ணன் அவர்களிடம் கேட்டோம். அவர் கூறியதாவது, "வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறை அதிகாரிகள் ஒருவரைக் கைது செய்ய முடியாது. பொதுவாக ஒருவரைக் கைது செய்ய கைதாணை (Arrest Warrant) வேண்டும் என்பதைப் பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால், குற்ற விசாரணை முறை சட்டம் 41A-வில் குறிப்பிட்டுள்ள சில சூழ்நிலைகளில் மட்டும் காவல் அதிகாரிகள் கைதாணை இல்லாமல் ஒருவரைக் கைது செய்ய முடியும். அதன்படி சாதாரண சந்தேகத்தின் அடிப்படையில் இல்லாமல், நியாயமான காரணம் இருந்தால் மட்டுமே கைதாணை இன்றி ஒருவரைக் கைது செய்ய முடியும். உதாரணமாக, ஒருவர் ஏதோ ஒரு பொருளோ அல்லது சொத்தோ வைத்திருக்கிறார். சந்தேகத்தின் பெயரில் காவல் அதிகாரிகள் விசாரிக்கும்போது அது அவருடையது என்பதற்கான போதுமான, உண்மையான காரணங்களைக் கூறா விட்டாலோ அல்லது அவர் கூறுவது அதிகாரியைத் திருப்திப்படுத்தும் வகையில் இல்லாவிட்டாலோ, அது திருட்டு சொத்தாக இருக்கலாம் என்று முடிவு செய்வதற்கு நியாயமான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் காவல் அதிகாரிகள் அவரைக் கைது செய்யலாம்.

Arrest Warrant
Arrest Warrant

அதே போல், ஒருவர் குற்றச் செயலில் ஈடுபட ஆயுதங்கள் வைத்திருக்கிறார் என்பது போன்ற ஆதாரங்கள் இருந்தாலும் காவல் துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்யலாம். இதைப் போன்ற நியாயமான காரணங்கள் இருந்தால் மட்டுமே ஒருவரைக் கைது செய்ய முடியும். எடுத்த எடுப்பிலேயே வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரைக் கைது செய்வதற்கு ஒரு காவல்துறை அதிகாரிக்கு எந்தவொரு அதிகாரமும் கிடையாது. இதைத் தவிர்த்து, குற்ற விசாரணை முறைச் சட்டம் 50-ன் படி ஒருவரைக் கைது செய்யும் போது என்ன காரணத்திற்காக அவர் கைது செய்யப் படுகிறார் என்பதைக் கைதாகுபவருக்குத் தெரிவிக்க வேண்டும்." என்று கூறி முடித்தார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man