Published:Updated:

`ரூ.15 லட்சத்துக்கு மேல் ஊழல் செய்தால் மட்டும் புகாரளியுங்கள்!' - சர்ச்சையைக் கிளப்பிய பாஜக எம்.பி

ஜனார்தன் மிஸ்ரா, பாஜக எம்.பி
News
ஜனார்தன் மிஸ்ரா, பாஜக எம்.பி ( Twitter/@Janardan_BJP )

``பஞ்சாயத்து தலைவர்கள் குறித்து குற்றம்சாட்டுபவர்களிடம், `ரூ. 15 லட்சம் வரை ஊழல் செய்திருந்தால் என்னிடம் வராதீர்கள்; அதற்கு மேல் ஊழல் செய்திருந்தால் மட்டுமே என்னிடம் புகாரளியுங்கள்' என்று சொல்லுவேன். காரணம்...'' - பாஜக எம்.பி சர்ச்சைப் பேச்சு!

சர்ச்சையான கருத்துகளைப் பேசி நெட்டிசன்களிடம் சிக்கிக் கொள்வதை பல்வேறு அரசியல் தலைவர்களும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி ஜனார்தன் மிஸ்ரா, `ரூ.15 லட்சத்துக்கு மேல் ஊழல் செய்தவர்களைப் பற்றி மட்டும் என்னிடம் புகாரளியுங்கள்' என்று பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய ஜனார்தன் மிஸ்ரா, ``கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள் பலரும் ஊழல் செய்துவருவதாக மக்கள் என்னிடம் புகாரளிக்கிறார்கள். அப்படிப் புகாரளிப்பவர்களிடம், `ரூ. 15 லட்சம் வரை ஊழல் செய்திருந்தால் என்னிடம் வராதீர்கள்; அதற்கு மேல் ஊழல் செய்திருந்தால் மட்டுமே என்னிடம் புகாரளியுங்கள்' என்று விளையாட்டாகச் சொல்லுவேன். காரணம், பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் போட்டியிட ரூ.7 லட்சம் செலவாகும். அடுத்த தேர்தலில் போட்டியிட இன்னொரு 7 லட்சம் ரூபாய் தேவைப்படும். அதிகரித்து வரும் பணவீக்கத்தால் கூடுதலாக 1 லட்சம் ரூபாய் செலவாகலாம். அதனால், 15 லட்சத்துக்கு மேல் ஊழல் செய்தால் மட்டும் புகாரளியுங்கள். இதுதான் இன்றைய சூழ்நிலை'' என்று பேசியிருந்தார். இவ்வாறு ஜனார்தன் மிஸ்ரா பேசியது குறித்த வீடியா சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``கிராம பஞ்சாயத்தில் ஊழல் செய்வது குறித்து விளையாட்டாகப் பேசி, ஊழலை நியாயப்படுத்துகிறார் ஜனார்தன் மிஸ்ரா. கிராமங்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் ஊழலை நாட்டின் ஆளுங்கட்சியான பா.ஜ.க-வின் எம்.பி-யே ஆதரித்து பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என ஜனார்தன் மிஸ்ராவுக்கு எதிராகக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. மேலும், பல்வேறு தரப்பினரும் ஜனார்தன் மிஸ்ராவின் பேச்சுக்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.