Published:Updated:

துறைமுகம், ஆட்டோமொபைல், சாஃப்ட்வேர்: தென்னிந்தியாவின் தொழில் சிகரம் சென்னை! | #MadrasDay2022

மெட்ராஸ் டே

சென்னையில் என்னதான் இல்லை?! இங்கு எல்லாமே இருக்கிறது. தமிழகத்தின் சரிபாதி மக்கள் தொகை சென்னையில்தான் வாசம் செய்கிறது. அதற்குக் காரணம் இங்குள்ள வளர்ச்சி. வாழவைக்கும் சென்னை என்று சும்மாவா சொன்னார்கள்! சென்னை வளர்ச்சியின் கதை என்பது மிக நெடியது.

துறைமுகம், ஆட்டோமொபைல், சாஃப்ட்வேர்: தென்னிந்தியாவின் தொழில் சிகரம் சென்னை! | #MadrasDay2022

சென்னையில் என்னதான் இல்லை?! இங்கு எல்லாமே இருக்கிறது. தமிழகத்தின் சரிபாதி மக்கள் தொகை சென்னையில்தான் வாசம் செய்கிறது. அதற்குக் காரணம் இங்குள்ள வளர்ச்சி. வாழவைக்கும் சென்னை என்று சும்மாவா சொன்னார்கள்! சென்னை வளர்ச்சியின் கதை என்பது மிக நெடியது.

Published:Updated:
மெட்ராஸ் டே

சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் புதிதாக வந்திறங்கும் கால்களுக்கு வேண்டுமானால் சென்னையின் பரபரப்பும் அதன் பிரம்மாண்டங்களும் மிரட்சியை ஏற்படுத்தலாம். ஆனால், வந்திறங்கிய எந்தக் கால்களும், எத்தனை பெரிய நெருக்கடிகள் வந்தபோதும் சென்னையை விட்டு வெளியேறியதே இல்லை என்பதுதான் சென்னையின் மிக முக்கியமான அடையாளமும் வெற்றியும். அப்படி என்னதான் இந்த சென்னையில் இருக்கிறது?

சென்னையில் என்னதான் இல்லை! இங்கு எல்லாமே இருக்கிறது. தமிழகத்தின் சரிபாதி மக்கள் தொகை சென்னையில்தான் வாசம் செய்கிறது. அதற்குக் காரணம் இங்குள்ள வளர்ச்சி. வாழவைக்கும் சென்னை என்று சும்மாவா சொன்னார்கள்! சென்னை வளர்ச்சியின் கதை என்பது மிக நெடியது. பலரின் தியாகமும் வியர்வையும் இதில் கலந்திருக்கிறது. சென்னையின் பூர்வகுடிகளில் ஆரம்பித்து, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வந்து குடியேறிய மக்களும் சரிசமமாக சென்னையின் வளர்ச்சியில் பங்கெடுத்துக்கொண்டார்கள்.

சென்னை ரிப்பன் மாளிகை
சென்னை ரிப்பன் மாளிகை

மெட்ராஸ் மாகாணம், சென்னையாக மாறிய வரலாறு பல ஆச்சர்யங்களை உள்ளடக்கியது. இன்று முகம்சுளிக்க வைக்கிற கூவ நதியிலிருந்துதான், அன்று சென்னையின் வளர்ச்சி ஆரம்பமானது. இந்த நதியின் அருகில் இருக்கும் சிம்ப்சனில்தான் முதல் கார், முதல் பேருந்து தயாரிக்கப்பட்டது.

மெள்ள மெள்ள நதியையொட்டிய பகுதிகள் மக்களின் பிரதான வசிப்பிடங்களாக மாறின. அதன் பிறகு, தொழிற்புரட்சிக் காலத்தில் சென்னையில்தான் பிரதான தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. அதற்குக் காரணம் இயற்கை கொடுத்த உட்கட்டமைப்பு கொடை. சென்னையை சூழ்ந்திருந்த கடல் துறைமுகத்தைக் கொடுத்தது. இதனால் வர்த்தகத்துக்கான மையமாக சென்னை மாறியது. இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் புள்ளியாக மெட்ராஸ் மாகாணம் விளங்கியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால் ஆங்கிலேயர் காலத்திலிருந்தே சென்னை தொழில்துறையில் கொடிகட்டிப் பறந்தது. நாட்டிலேயே பிற மாகாணங்கள் பொறாமைப்படும் அளவுக்கு மெட்ராஸ் வளர்ந்தது. 1836-ல் அப்போதிருந்த சில தொழிலதிபர்கள் சேர்ந்து சென்னை தொழில் வர்த்தக சபையை நிறுவினர். அதன் பிறகு வர்த்தக ரீதியிலான தொழில்கள் வளர ஆரம்பித்தன.

பெரிய துறை நிறுவனங்கள் மட்டுமல்லாமல் சிறுகுறு தொழில் நிறுவனங்களும் சென்னையின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகித்தன. இந்தியாவின் முதல் தொழிற்பேட்டை 1958-ம் ஆண்டு கிண்டியில் அமைந்தது. 1965-ல் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) அமைக்கப்பட்டது. 1971-ல் முதலீட்டாளர்களுக்கு விரிவான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக தமிழ்நாடு மாநிலத் தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் (SIPCOT) அமைக்கப்பட்டது.

மெட்ராஸ்
மெட்ராஸ்

சென்னையில் பிரதானமாக இருந்த தொழில் குழுமம், முருகப்பா குழுமம். இதுதான் இந்தியாவில் முன்னணி சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாக இருந்தது. அதன் பிறகு காலங்கள் மாற, இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி மையங்கள் சென்னையில்தான் அமைந்தன. முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான மாருதி சுசூகி, ஹுண்டாய், அசோக் லேலண்ட், பிஎம்டபிள்யூ, நிசான், ஃபோர்ட் ஆகியவையும், ராயல் என்ஃபீல்ட், டெய்ம்லர், யமஹா, ஹீரோ ஹோண்டா போன்ற நிறுவனங்களும் சென்னையில் அமைந்தன. இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையாக சென்னை வேகமாக வளர்ந்தது.

கால மாற்றத்தில் கணினி நுழைந்த பிறகு, தகவல் தொழில்நுட்பத் துறையின் வாய்ப்புகளையும் சென்னை சுவீகரித்துக்கொண்டது. சென்னையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு தொழில்துறைக்குப் பேர்போனதாக மாறியது. பழைய மாமல்லபுரம் சாலையெங்கும் சாஃப்ட்வேர் நிறுவனங்கள் அமைந்தன.

முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஐபிஎம், ஹெச்.சி.எல், ஹெச்பி, டெக் மஹிந்திரா, விப்ரோ போன்றவை சென்னையில் தங்களுடைய பிரதான அலுவலகங்களை அமைத்தன. இதனால் சென்னை மாநகரில் சிறப்பு பொருளாதார மண்டலங்களும், தொழில்நுட்ப பூங்காக்களும் பெருமளவில் தொடங்கப்பட்டன.

இவை மட்டுமல்ல... மக்களைக் காக்கும் மருத்துவத்திலும் சென்னை இந்தியாவிலேயே முன்னோடி நகரமாகத் திகழ்கிறது என்றால் மிகையில்லை. மருத்துவச் சேவை சென்னையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக இருக்கிறது.

சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை
சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை

மருத்துவச் சேவைக்காக இந்தியாவுக்கு வருவோரில் 40 சதவிகிதத்தினர் சென்னையைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர். அந்த அளவுக்கு தரமான மேம்பட்ட சுகாதார வசதிகளை வழங்குகிறது சென்னை மாநகரத்தில் அமைந்துள்ள மருத்துவமனைகள்.

தி.நகரானது வியாபாரிகளின் மையமாக மாறியது. ஆசியாவிலேயே மிகப்பெரிய எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களின் சந்தை ரிச்சி ஸ்ட்ரீட்டில் அமைந்தது.

மொத்தத்தில் காலத்துக்கேற்ப சென்னையின் தொழில்வளர்ச்சி மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது; தொடர்ந்து மக்களை வரவேற்றுக்கொண்டே இருந்தது. வெறுங்கையோடு வந்த பலருக்கும் சென்னை அள்ளி அள்ளிக் கொடுத்து வருகிறது.

மெட்ராஸ் குறித்து உங்களுக்கு எந்தளவு தெரியும்? சுவாரஸ்யமான ஒரு குவிஸ் உங்களுக்காக... இங்கே க்ளிக் செய்யவும்!