Published:Updated:

நடத்துனர் அடிக்கும் கட்டணக் கொள்ளை எந்த கணக்கில் வரும்? - வாசகர் வாய்ஸ்

ஒரு சில பேருந்துகளில் ரூ.1, ரூ.2 சில்லறை பிரச்சனை இருக்கும். பயணிகளிடம் பின்னர் தருவதாக சொல்வார். நாமும் வாங்காமல் இறங்கி விடுவோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அண்மையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், “ஒரு அரசுப் பேருந்து 1.கி.மீ இயக்க ரூ.96.75 செலவாகிறது. இதில் வரவு ரூ.37.60. ஆக நஷ்டம் ரூ.59.15 . அதேபோல், ஒரு ரூபாய் வருமானம் கிடைக்கையில், போக்குவரத்து பணியாளர்களுக்கு ஊதியம், முன்னாள் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் என ரூ.2 ரூபாய் செலவாகிறது” என புள்ளி விபரத்தை தெரிவித்தார். என்னுடைய கேள்வி, சில கண்டக்டர்கள் அடிக்கும் சில்லரை கொள்ளை, எந்த பிரிவில் வரும் என்பதுதான்.

அண்மையில் சேலத்தில் மகளிருக்கு வழங்கும் இலவச டிக்கெட்டை, காசுக்கு விற்றிருக்கிறார் ஒரு கன்டெக்டர். ஒரு சில பேருந்துகளில் ரூ.1, ரூ.2 சில்லறை பிரச்சனை இருக்கும். பயணிகளிடம் பின்னர் தருவதாக சொல்வார். நாமும் வாங்காமல் இறங்கி விடுவோம்.

டிக்கெட்
டிக்கெட்

கடந்த 7-08-2021-ந்தேதி தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி சென்ற அரசுப் பேருந்தில், நான் எப்போதும்வென்றான் பேருந்து நிறுத்தத்தில் ஏறினேன். எப்போதும்வென்றான்-கோவில்பட்டிக்கு 2 முழு, 2 அரை டிக்கெட் கட்டணம் எவ்வளவு? என்று நடத்துனரிடம் கேட்டேன். ரூ.80 என்றார். ரூ.100 கொடுத்தேன். 20 ரூபாயும், டிக்கெட்டையும் மடித்தபடி கொடுத்தார். கூட்ட நெரிசல் என்பதோடு, நின்று கொண்டு பயணித்ததால், டிக்கெட்டை வாங்கி பர்சில் வைத்துக் கொண்டேன். என்னருகே இருந்த மற்றொரு குடும்பமும் இதேபோல், ரூ.80-க்கு டிக்கெட் வாங்கியது.

பேருந்தை விட்டு இறங்கி ரயில் நிலையத்திற்கு சென்றபிறகு, எதேச்சையாக பர்சில் இருந்த டிக்கெட்டை பார்த்தபோது, ரூ.76-க்கு டிக்கெட் வழங்கிவிட்டு, என்னிடம் ரூ.80 வசூலித்தது தெரியவந்தது. முழு கட்டணம் ரூ.25, அரை கட்டணம் ரூ.13. எனவே 4 டிக்கெட்டுக்கு ரூ.76-க்கு பதில் ரூ.80 வசூலித்து மோசடி செய்திருக்கிறார் அந்த நடத்துனர்.

இப்படி ரூ.4 ஏமாந்திட்டோமே என்ற மன உறுத்தல் இன்னமும் இருக்கிறது. என்னை போன்ற பயணிகள் நஷ்டப்பட்ட பணம் எந்த கணக்கில் வரும்…?!

-அ.ஹரிகரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு