பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் மேலும் 2 வார காலம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப் போடுகிறோம், வாகனங்களைப் பறிமுதல் செய்கிறோம் என அரசாங்கம் புள்ளி விவரம் சொல்கிறது. ஆனால், சென்னை போன்ற பெரு நகரில் இப்போதும் சாலையில் மக்கள் மாஸ்க் அணியாமல் சகஜமாகச் சென்று கொண்டுதான் இருக்கிறார்கள்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்காக காலைப் பொழுதில் அப்படியே தி.நகர் பக்கம் சென்று, ஒரு சாலைச் சந்திப்பில் நின்று அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் பேச்சுக் கொடுத்தேன். "என்னங்கே ரோட்ல மக்கள் நடமாட்டம் அதிகமா இருக்கே...? நீங்க கேட்க மாட்டீங்களா?" என்றேன்.
"கொஞ்ச நேரம் நீங்களே நின்னு பாருங்க...ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணம் சொல்வாங்க... நீங்களே அசந்து போவீங்க.. அத்தனையும் ஏற்றுக்கொள்ளும் ரகமாக இருக்கும்.." என்றார்.
சிலர் மாஸ்க் அணிந்து செல்ல, ஒரு சிலர் மாஸ்க் இல்லாமல் சென்றனர். முதலில் இருசக்கர வாகனத்தில் மாஸ்க் இல்லாமல் வந்த தனியார் நிறுவன செக்யூரிட்டியைப் பிடித்து விசாரித்தார்.
"எனக்கு கால்ல அடிபட்டிருக்கு...அதனாலே மெடிக்கல்ல மருந்து வாங்கப் போய்கிட்டிருக்கேன்.."
"அதுக்காக முகத்தில மாஸ்க் போடக் கூடாதா?"
"மருந்துவாங்கும் போது மாஸ்க்கும் வாங்கணும்..அதுக்காகத்தான் போய்கிட்டிருக்கேன்..."
*****
அடுத்து வந்த ஒருவரை நிறுத்தி விசாரிக்கும்போது...சட்டென்று பாக்கெட்டிலிருந்து மாஸ்க் எடுத்து மாட்டிக்கொண்டு சென்றார்.
*****
அடுத்து ஒருவர் மாஸ்க் அணிந்தும்... கூட வந்தவர் மாஸ்க் அணியாமலும் வந்தார்.
அவரை விசாரித்தால் எனக்கு "காலில் வாதம் இருக்கு.. டாக்டர் தினமும் கொஞ்ச தூரம் நடக்கச் சொன்னார். அதனால் நடக்கிறேன்" என்றவர் மாஸ்க் விவகாரத்திற்கு வரவே இல்லை.
*****
"டியோ பைக்கில் வேகமாக வந்த இளைஞனை நிறுத்தி விசாரித்தால், நீங்க போட்டிருந்தது மாதிரிதான் நானும் மாஸ்க் போட்டிருந்தேன்.. எங்கேயோ விழுந்திடுச்சி..."என்றான் அப்பாவியாய்..!

நடந்து சென்ற இன்னொரு நரைமுடி ஆசாமியை நிறுத்தி விசாரித்தபோது.. "மாஸ்க்-ஐ பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்தார். இதுல ஒரு சைடு அறுந்து போச்சும்மா... அதை தைக்கத்தான் டெய்லர்கிட்ட போய்கிட்டு இருக்கேன்மா.."
"ஊரடங்குல எல்லா கடையும் மூடியிருக்கே? எந்த டெய்லர் உங்களுக்கு தச்சுக் கொடுக்காங்க?" என்று அந்த போலீஸ் கேட்க, "அங்கிட்டு ஒரு டெய்லர் இருக்கார்" என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.
*****
இந்த நேரத்தில் 2 பெண்மணிகள் மாஸ்க் அணியாமல் வந்தனர். போலீஸார் விசாரித்ததைப் பார்த்ததும் தங்களது சேலை முந்தானையை உடனடி மாஸ்க்-காக மாற்றி பாவ்லா காட்டினர். பக்கத்தில் உள்ள வங்கியில் தூய்மைப் பணி செய்பவர்களாம். அவர்களே மாஸ்க் அணியாமல் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டனர்.
*****
லுங்கி கட்டியபடி வந்த ஒரு ஆசாமி, "என் வண்டி பஞ்சர் ஆயிடுச்சு அதான் மெக்கானிக் இருக்காரான்னு பார்க்க வந்தேன். "
"சரிப்பா.. அதுக்காக மாஸ்க் போடாமலா வருகிறது?" "இல்ல மேடம்... ஏ.சி சார் எனக்கு நல்ல பழக்கம். என்னை அவருக்கு நல்லா தெரியும்."
"அவருக்கு தெரியுறது இருக்கட்டும்...கொரோனாவுக்கு உங்களைத் தெரியாமப் பாத்துக்கங்க சார்.." என்று கடிந்து கொண்டு அனுப்பி வைத்தார்.
கொரோனாவுக்கு உங்கள தெரியாமப் பார்த்துக்கங்க.. என அந்தப் பெண் காவலர் சொன்ன வார்த்தை இன்னமும் என் மூளையின் அடி இடுக்கில் ஆக்கிரமித்து நிற்கிறது..
இதை மற்றவர்களும் உணர்ந்தால் உங்களுக்கும் நல்லது..! நாட்டுக்கும் நல்லது.!!
-சி.அ.அய்யப்பன்-சென்னை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.