Published:Updated:

உலகளவில் நம்பகத்தன்மை இல்லாதவர்கள் அரசியல்வாதிகள்தான்! அதிர்ச்சி உண்மை #VikatanInfographics

கருத்துக்கணிப்பு முடிவுகளில் அரசியல்வாதிகள் மிகவும் நம்பத்தகாதவர்களாக கருதப்படுகிறார்கள். அதாவது, மூன்றில் இரண்டு பங்கு பொதுமக்கள் (67%) அரசியல்வாதிகள் பொதுவாக நம்பத்தகாதவர்கள் என்றும் 10-ல் 6 பேர் (57%) அரசாங்க அமைச்சர்களை நம்பத்தகாதவர்கள் என்று கூறுகின்றனர்.

World most trustworthy profession
World most trustworthy profession

சமீபத்தில் இப்சோஸ் என்னும் அரசு சாரா தனியார் அமைப்பு உலகின் மிகவும் நம்பகமான தொழில் புரிபவர்கள் யார் என்று இந்தியா உட்பட 22 நாடுகளில் 16-64 வயதுடையவர்களிடம் ஆன்லைனில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது.

Scientist
Scientist

இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவில் விஞ்ஞானிகள்தான் நம்பகமானவர்கள் என்று 10-ல் 6 நபர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வரிசையில் உலகளவில் குறைந்தளவு நம்பகமானவர்களாக அரசியல்வாதிகள் இடம்பிடித்துள்ளனர்.

அர்ஜென்டினா, ஜெர்மனி, ஹங்கேரி, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, சவுதி அரேபியா, மெக்ஸிகோ, போலந்து, ரஷ்யா, சுவீடன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் விஞ்ஞானிகள் மிகவும் நம்பகமானவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

உலகளவில் 60 விழுக்காடு பொதுமக்கள் மிக நம்பகமானவர்கள் விஞ்ஞானிகள் என்று தெரிவித்துள்ளனர். அதற்கு அடுத்ததாக 56 விழுக்காடு மக்கள் மருத்துவர்கள் நம்பகமானவர்கள் என்றும், அதைத்தொடர்ந்து 52 விழுக்காடு மக்கள் ஆசிரியர்கள் நம்பகமானவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

Doctors
Doctors

மேலும், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் நாட்டவர்கள் மருத்துவர்கள் மிகவும் நம்பகமானவர்கள் என்று தெரிவித்துள்ளனர். பிரேசில் மற்றும் அமெரிக்காவில் உள்ளவர்கள் ஆசிரியர்கள் மிகவும் நம்பகமானவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

உலகளவில் ஆயுதப்படை வீரர்கள் நான்காவது (43 விழுக்காடு) இடத்தில் உள்ளனர். சீனா (72%), இந்தியா (70%) மற்றும் அமெரிக்கா (60%) அளவுக்கும் அதே நேரத்தில் ஜெர்மனி (24%) மற்றும் தென் கொரியா (18%) அளவுக்கும் ஆயுதப்படையினரை நம்புகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஆயுதப்படை வீரர்களை மிகவும் நம்பகமான தொழிலாகப் பார்க்கிறார்கள், அதேபோல் சீனாவில் காவல்துறையினர் கருதப்படுகின்றனர்.

38 விழுக்காடுகளுடன் காவல்துறை ஐந்தாவது இடத்தில் உள்ளது. சீனா (80%), ஆஸ்திரேலியா (56%), பிரான்ஸ் (53%), கனடா (52%), இத்தாலி (50%) மற்றும் மெக்சிகோ (11%) என்று பொதுமக்கள் காவல்துறையினரை நம்பகமானவர்கள் என்று கருதுகின்றனர்.

ஆயுதப்படை வீரர்கள்
ஆயுதப்படை வீரர்கள்

உலகின் அதிக மற்றும் குறைந்த நம்பகமான தொழில் புரிவோர்கள் பட்டியலைப் பின்வரும் படத்தில் காணலாம்.

Trustworthy  Professions
Trustworthy Professions

37 % மக்கள் சாதாரண மனிதர்களை நம்பகமானவர்கள் என்றும். அடுத்ததாக 32% மக்கள் நீதிபதிகளையும் 25% மக்கள் வழக்கறிஞர்களையும் நம்பகமானவர்கள் என்று கருதுகின்றனர். 24 விழுக்காடு மக்கள் செய்தி வாசிப்பாளர்களை நம்புகின்றனர். 23% மக்கள் பொதுத்துறை பணியாளர்களை நம்பகமானவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

22% மக்கள் தொழிலதிபர்களையும், 21% பத்திரிகையாளர்கள் மற்றும் மதகுருமார்களை நம்பகமானவர்கள் என்றும். 20% பொதுமக்கள் வங்கியாளர்களையும், 13% விளம்பரத் துறை நிர்வாகிகளையும் நம்பகமானவர்கள் என்று கருதுகின்றனர்.

உலகளவில் குறைந்த நம்பகமானவர்களாகக் கடைசி இரண்டு இடத்தில் இருப்பவர்கள் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள்தான்.

கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்ட அனைத்து நாடுகளிலும், அரசியல்வாதிகள் மிகவும் நம்பத்தகாத தொழிலாகக் கருதப்படுகிறார்கள். அதாவது, மூன்றில் இரண்டு பங்கு பொதுமக்கள் (67%) அரசியல்வாதிகள் பொதுவாக நம்பத்தகாதவர்கள் என்றும் 10-ல் 6 பேர் (57%) அரசாங்க அமைச்சர்களை நம்பத்தகாதவர்கள் என்றும் கூறுகின்றனர்.

கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்ட 22 நாடுகளில் 9 நாடுகள் அதிக நேர்மறை மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. அதாவது பட்டியலிடப்பட்ட தொழில்கள் நிகர நேர்மறை மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. சீனா அதிக மதிப்பெண்களையும் இந்தியா மூன்றாம் இடத்தையும் கொண்டுள்ளது.

ஸ்வீடன், அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளும் நேர்மறையான மதிப்பெண்களைக் காட்டுகின்றன. இந்த நாட்டின் குடிமக்கள் கருத்துக்கணிப்பில் உள்ளடக்கப்பட்ட பெரும்பாலான தொழில்களை நம்புகிறார்கள்.

மீதமுள்ள பதிமூன்று நாடுகளும் எதிர்மறை மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. இதன் பொருள் இங்குள்ள மக்களுக்கு பெரும்பாலான தொழில்களின் மீதுள்ள அவநம்பிக்கையைக் குறிக்கின்றது. அதிலும், அர்ஜென்டினா, தென் கொரியா மற்றும் ஹங்கேரி ஆகியவை குறியீட்டில் முதல் மூன்று நாடுகளாகும். இந்த மூன்று நாடுகளும் வாக்கெடுப்பில் உள்ள மற்ற நாடுகளைவிட மிகவும் எதிர்மறையானவை, அவை ஒட்டுமொத்தமாக எதிர்மறை மதிப்பெண்களைக் கொண்டுள்ளன.