Published:Updated:

`திருமாவளவனுக்குள் ஒரு கலைஞன் ஒளிந்திருக்கிறார்’ - ரகசியம் சொல்லும் போட்டோ ஷூட் டீம்!

திருமாவளவன்

``தொண்டர்களுக்காக புளூ கலர் தீமில் போட்டோக்களை எடுத்தோம். எங்கள் ஆசைக்காக பிரெளன் கலர் ஆடையில் கூலிங் கிளாஸோடு இன்னும் ஸ்டைலிஷாக சில படங்களை எடுத்திருக்கிறோம்'' - திருமாவளவன் போட்டோ ஷூட் ரகசியங்கள்!

`திருமாவளவனுக்குள் ஒரு கலைஞன் ஒளிந்திருக்கிறார்’ - ரகசியம் சொல்லும் போட்டோ ஷூட் டீம்!

``தொண்டர்களுக்காக புளூ கலர் தீமில் போட்டோக்களை எடுத்தோம். எங்கள் ஆசைக்காக பிரெளன் கலர் ஆடையில் கூலிங் கிளாஸோடு இன்னும் ஸ்டைலிஷாக சில படங்களை எடுத்திருக்கிறோம்'' - திருமாவளவன் போட்டோ ஷூட் ரகசியங்கள்!

Published:Updated:
திருமாவளவன்
சமூக வலைதளங்களில் சினிமா நடிகர், நடிகைகளின் போட்டோ ஷூட்தான் எப்போதும் ஹிட் அடிக்கும். ஆனால், தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஹிட் அடித்திருப்பது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான தொல்.திருமாவளவனின் போட்டோ ஷூட்!
திருமாவளவன்
திருமாவளவன்

முழுக்க முழுக்க நீல நிற தீமில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை திருமாவின் ஆதரவாளர்கள் கொண்டாடிவருகின்றனர். `கபாலி’ படத்தில் வரும், ``நான் கோட் போடுறதுதான் உன் பிரச்னைனா... நான் கோட் போடுவேண்டா... ஸ்டைலா... கெத்தா!'' என்ற வசனத்தைப் பதிவிட்டு திருமாவின் புகைப்படங்களைப் பகிர்ந்துவருகின்றனர்.

நீல நிறப் பின்னணியில், நீல நிறத்தில் கோட்சூட் அணிந்துகொண்டு கையில் புத்தர் அட்டைப்படம்கொண்ட புத்தகத்தோடு திருமாவளவன் எடுத்திருக்கும் புகைப்படம் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. போட்டோ ஷூட்டுக்கு திருமா தயாராகும் வீடியோ ஒன்றும் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது பற்றித் தெரிந்துகொள்ள இந்த போட்டோக்களை பதிவு செய்த புகைப்படக் கலைஞர் குணசீலனிடம் பேசினேன். ``திருமா அண்ணனை பல்வேறு நிகழ்ச்சிகளில் புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன். நான், அவரைப் பின்பற்றி வளர்ந்தவன் என்பதால், அவரைத் தனியாக போட்டோ ஷூட் செய்ய வேண்டும் என்கிற ஆசை இரண்டு ஆண்டுகளாக இருந்துவந்தது. திருமா அண்ணனின் உதவியாளர் அகரன், எனக்கு நல்ல நண்பர். அவரிடம் எப்போது பேசினாலும் `தலைவரை வைத்து ஒரு போட்டோ ஷூட் பண்ணணும்' என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். சமீபத்தில் அகரனிடம் பேசும்போது `தலைவரின் பிறந்தநாள் வருது. அதையொட்டி ஒரு போட்டோ ஷூட் பண்ணலாமா?' என்று அவரே கேட்டார். நானும், `கண்டிப்பா பண்ணிருவோம். முயற்சி பண்ணுங்க' என்றேன்.

இந்த விஷயம் தொடர்பாக திருமா அண்ணனிடம் `உங்களை போட்டோ ஷூட் செய்ய குணா ஆர்வமாக இருக்கிறார்' என்றிருக்கிறார் அகரன். இதற்கிடையில் காஸ்ட்யூம் டிசைனர் சத்யாவைத் தொடர்புகொண்டு இந்த விஷயத்தைச் சொன்னேன். அவர் குஷியாகிவிட்டார். அதன் பிறகு திருமா அண்ணனைச் சந்திக்க வாய்ப்பு பெற்றுக் கொடுத்தார் அகரன். அப்போது, அண்ணனிடம் சில புகைப்படங்களைக் காட்டி, `இது மாதிரி பண்ணலாம்’ என்றோம். நாங்கள் காட்டிய ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, `சரி நிச்சயம் பண்ணலாம்’ என்றார். `எவ்வளவு நேரம் ஆகும்?' என்று திருமா அண்ணன் கேட்க, `ஒன்றரை மணி நேரம் ஆகும்’ என்றோம்.

குணசீலன்
குணசீலன்

ஆனால், ஒன்றரை மணி நேரத்தில் போட்டோ ஷூட்டை முடித்துவிட முடியாது என்று எங்களுக்குத் தெரியும். இருந்தும், அதற்கு மேல் நேரம் கேட்டால் போட்டோ ஷூட் மிஸ் ஆகிவிடுமோ என்ற பயத்தில் அப்படிச் சொன்னோம். அவரை ஸ்டைலாகக் காட்ட வேண்டும் என்பதை மட்டும் நானும் சத்யாவும் முன்னரே முடிவு செய்தோம். அவர் பின்பற்றும் அம்பேத்கர், புத்தர் ஆகியோரைக் கொண்டு தீம் வடிவமைத்தோம்.

ஆகஸ்ட் 8-ம் தேதி காலை வேளையில் சத்யாவின் ஸ்டூடியோவில் போட்டோ ஷூட்டை தொடங்கினோம். ஒன்றரை மணி நேரம் என்று சொல்லியிருந்தோம். ஆனால், கிட்டதட்ட ஐந்து மணி நேரம் ஆகிவிட்டது. எங்களின் ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, எந்தவொரு சலிப்புமில்லாமல் போஸ் கொடுத்தார். மக்கள் பணியிலிருப்பதால் கடந்த 30 ஆண்டுகளாகவே, தினமும் நான்கு மணி நேரம் மட்டுமே தூக்கத்துக்காக ஒதுக்குவார் திருமா அண்ணன். அப்படி நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் அவர், எங்களுக்காக நேரம் ஒதுக்கியது மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் பல நடிகர், நடிகைகளைப் புகைப்படம் எடுத்திருக்கிறேன். திருமா அண்ணனுக்குள்ளும் ஒரு நல்ல கலைஞன் இருக்கிறார் என்பதை அவரைப் புகைப்படம் எடுத்ததன் மூலம் தெரிந்துகொண்டேன். தொண்டர்களுக்காக புளூ கலர் தீமில் போட்டோக்களை எடுத்தோம். எங்கள் ஆசைக்காக பிரெளன் கலர் ஆடையில் கூலிங் கிளாஸோடு இன்னும் ஸ்டைலிஷாக சில படங்களை எடுத்திருக்கிறோம். அது இன்னும் வெளியாகவில்லை. இந்தப் புகைப்படங்கள் எடுத்த பிறகு வி.சி.க தொண்டர்கள் பலரும் என்னை அழைத்துப் பாராட்டிவருகிறார்கள். என் வாழ்நாளில் இந்த போட்டோ ஷூட்டை மறக்கவே மாட்டேன்'' என்று நெகிழ்கிறார் குணசீலன்.

சத்யா NJ, ஆடை வடிவமைப்பாளர்
சத்யா NJ, ஆடை வடிவமைப்பாளர்

போட்டோ ஷூட்டின் தீம், திருமாவளவனின் ஆடைகளை வடிவமைத்த ஆடை வடிவமைப்பாளர் சத்யா என்.ஜே-விடம் பேசினோம். ``சினிமா நடிகர்களைவைத்து நிறைய போட்டோ ஷூட் செய்த எனக்கு, இது புது அனுபவமாக, மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது. பல லட்சம் தொண்டர்களுக்குத் தலைவராகவும், எம்.பி-யாகவும் இருக்கும் திருமா சாருக்கு போட்டோ ஷூட் செய்யும்போது கூடுதல் பொறுப்புகள் எங்களுக்கு இருந்தன. அவர் இதற்கு முன்பாக நிறைய கோட், சூட் போட்டிருக்கிறார். ஆனால், நாங்கள் எடுத்த போட்டோ ஷூட்டில் அவர் அணிந்திருக்கும் கோட் சூட் ஃபிட்டாக இருக்க வேண்டுமென நினைத்தேன். போட்டோ ஷூட் செய்வதற்கு நான்கு நாள்களுக்கு முன்பாக, நேரம் வாங்கி, நேரில் சென்று கோட், சூட்டுக்கான அளவுகளை எடுத்துக்கொண்டோம்.

திருமா சார், அம்பேத்கரைப் பின்பற்றுவதால் நீல நிறம்தான் தீம் என்பதை முடிவு செய்தோம். போட்டோவில் திருமா சார் மரத்தால் ஆன ஃப்ரேமில் கண்ணாடி அணிந்திருப்பார். அந்த ஐடியா அம்பேத்கரிடமிருந்து எடுக்கப்பட்டதுதான். கோட்சூட் எப்படியிருக்க வேண்டுமென்கிற ஐடியாவையும் அம்பேத்கரிடமிருந்தே எடுத்துக்கொண்டோம். திருமா சார் அமர்ந்திருக்கும் சேரிலுள்ள குஷன் வேறு நிறத்திலிருந்தது. அதைச் சிவப்பு நிறத்துக்கு மாற்றினோம். காரணம் வி.சி.க கட்சிக் கொடியின் நிறத்தில் நீலம் மட்டுமல்லாமல் சிவப்பு நிறமும் இருக்கும். அவரது பிறந்தநாளை ஒட்டி இந்தப் புகைப்படங்கள் வெளியாகப் போகின்றன என்பதால், தொண்டர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற முடிவில் இது போன்று சின்னச் சின்ன விஷயங்களைச் சேர்த்தோம். ஒரு சின்ன க்ளூ கொடுத்தவுடனேயே, அதைச் சரியாகப் பிடித்துக்கொண்டு அவரே போஸ் கொடுத்தார். அது என்னை ஆச்சர்யப்படுத்தியது'' என்றார் சத்யா.

நான் நிறைய கலைஞர்களோடு இணைந்து போட்டோ ஷூட் செய்திருக்கிறேன். அதில் நாசர் சார், விவேக் சாருக்கு அடுத்து, என் உதவி பெரிதும் தேவைப்படாமலேயே போஸ் கொடுத்தது திருமா சார்தான்! அவருக்குள் ஒரு கலைஞன் ஒளிந்துகொண்டிருக்கிறார்.
சத்யா

மேலும், ``எப்போதும் போட்டோ ஷுட்டுக்கு முன்பு, இரண்டு முறை காஸ்ட்யூம் ட்ரையல் பார்ப்பேன். ஆனால், திருமா சார் நேரமில்லாமல் உழைத்துக்கொண்டிருப்பதால், ஷூட்டுக்கு முன்பாகத்தான் ட்ரையல் பார்த்தோம். சின்னச் சின்ன தவறுகள் இருந்ததை அப்போதே சரிசெய்தோம். எப்போதும் அவரைச் சுற்றி தொண்டர்கள் இருந்துகொண்டேயிருக்கிறார்கள். அவரைச் சந்திக்க ஆட்கள் வந்துகொண்டயிருக்கிறார்கள். அவ்வளவு பிஸியான தலைவரை, பெரிய தலைவரை வைத்து போட்டோ ஷூட் செய்தது எனக்கு மிக மிக மகிழ்ச்சியாக அமைந்தது'' என்று உற்சாகத்துடன் விடைபெற்றார் சத்யா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism