Published:Updated:

"கலைஞரிடம் எனக்குப் பிடித்த விஷயம் என்னன்னா?" - கிரேஸ் பானு

கருணாநிதி

முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திருநங்கை கிரேஸ்பானு

"கலைஞரிடம் எனக்குப் பிடித்த விஷயம் என்னன்னா?" - கிரேஸ் பானு

முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திருநங்கை கிரேஸ்பானு

Published:Updated:
கருணாநிதி
2019, ஆகஸ்ட் 7

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் தி.மு.கவின் தலைவராகவும் இருந்த கருணாநிதி இறந்து ஓராண்டாகி விட்டது. சென்ற ஆண்டில் இந்த நாளில் அவரின் இறுதி மரியாதைக்கு அணியணியாக மக்கள் குவிந்துகொண்டேயிருந்தனர். அவர் விரும்பியபடி அண்ணா சமாதியருகே அடக்கம் செய்வதில் இருந்த சிக்கல் நீதிமன்றம் வழியாகத் தீர்க்கப்பட்டது. இந்திய அளவிலான அரசியல் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரின் கண்ணீரோடு கடல் அலையின் ஓசை கேட்க அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் சமாதியில் ``ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டது.

கிரேஸ் பானு
கிரேஸ் பானு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றும் பணிகளை திராவிடக் கட்சிகள் செய்தன. அதில் கருணாநிதியின் பங்கும் அளப்பரியது. எந்தவொரு விஷயத்திலும் முற்போக்கு சமூகச் சிந்தனையின் பார்வையோடு அணுகியவர். உடல் ஊனமுற்றவர்களை கேலியாகப் பேசிக்கொண்டிருந்த சமூகத்தில் `மாற்றுத்திறனாளிகள்' என அர்த்தம் பொதிய பதிவு செய்தவர். திருநங்கைகளின் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளுமே வலியும் வேதனையும் நிறைந்தது. அந்த நிலைமையை மாற்றுவதற்கான நல்ல முயற்சியை மேற்கொண்டார் கருணாநிதி. அதுபற்றியும் கருணாநிதியின் நினைவுகள் பற்றியும் திருநங்கை கிரேஸ்பானு நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
திருநங்கைகளை கேலி, கிண்டல் செய்யும் சமூகச் சூழலில் திருநங்கைகளுக்கு மரியாதை ஏற்படுத்தும் விதமாகக் கலைஞரின் பணிகள் இருந்தன.
கிரேஸ் பானு
கருணாநிதி
கருணாநிதி

``இந்தியா முழுக்க திருநங்கைகள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மற்ற மனிதர்களைப் போல சமமாக நடத்தப்படுகிறார்களா என்றால் பெரிய கேள்விக்குறிதான். அந்த நிலையில், தமிழ்நாட்டில் திருநங்கைகளின் விடுதலைக்கான, நல்ல மாற்றத்திற்கான நல்ல முயற்சியைத் தொடங்கி வைத்தவர் தி.மு.க தலைவராக இருந்த கலைஞர்தான். இதை யாராலும் மறுக்க முடியாது. திருநங்கைகளை கேலி, கிண்டல் செய்யும் சமூகச் சூழலில் திருநங்கைகளுக்கு மரியாதை ஏற்படுத்தும் விதமாகக் கலைஞரின் பணிகள் இருந்தன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், சட்டமன்றத்தில் பேசியதும், திருநங்கைகளுக்கான நல வாரியம் அமைக்கும் முடிவை உடனே எடுத்தவர் அன்றைய முதல்வராக இருந்த கலைஞர். திருநங்கைகள் நல வாரியம் மூலம், வாக்கு அளிக்கும் உரிமையிலிருந்து தொடங்கி பல விஷயங்கள் எங்களுக்குக் கிடைத்தன. அதைவிடவும் சமூகத்தில் மரியாதையும் கிடைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவ்வளவு பெரிய தலைவர், இதைக் கவனித்து பாராட்டுகிறாரே என்று அந்தப் பாராட்டுகள் கிடைக்கும்போதெல்லாம் பெருமையாக இருக்கும்.
கிரேஸ் பானு
கருணாநிதி
கருணாநிதி

எனக்கு தனிப்பட்ட முறையில் கலைஞரிடம் பிடித்த விஷயம் என்பது, பாராட்டை எதிர்பார்ப்பது எல்லா மனிதர்களின் இயல்பு. அதிலும் ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து ஒருவர் முன்னேறி, பலரும் வியக்கும் அளவுக்கு ஒன்றைச் செய்துவிட்டு பாராட்டு கிடைத்தால், அவர் அடையும் உற்சாகத்தை அளவிடவே முடியாது. அப்படியான பாராட்டுகளை எப்போதும் அளிப்பவராக கலைஞர் இருந்தார். 2014 ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் எழுதுவதற்காக நீதிமன்றத்தில் போராடி வென்றபோதும் சரி, பிரித்திகா யாசினி காவல் துறையில் நுழைந்து சாதித்தபோது, சரி கலைஞரின் பாராட்டுகள் வருவது ஒருமுறை கூட நின்றதில்லை. அதேபோல, திருநங்கைகளுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக, நீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்தபோது உடனே பாராட்டியவர் கலைஞர். அந்தக் குணம் அவருக்கு இயற்கையாகவே இருந்தது. அவ்வளவு பெரிய தலைவர், இதைக் கவனித்து பாராட்டுகிறாரே என்று அந்தப் பாராட்டுகள் கிடைக்கும்போதெல்லாம் பெருமையாக இருக்கும். எனக்கு மட்டுமல்ல, பல திருநங்கைகளுக்கும் அவரின் பாராட்டுகள் ஊக்கமளித்து, உற்சாகமாக இயங்க வைத்தது.

திருநங்கைகளுக்கு கலைஞர் செய்த நல்ல பணிகளுக்காகத்தான் அவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது பல திருநங்கைகளும் பார்க்கச் சென்றனர். இந்திய அரசியலில் என்ன நடந்தாலும் உடனே அதற்குச் சரியான எதிர்வினையாற்றுகிற ஆற்றல் மிகுந்த தலைவரை ரொம்பவே மிஸ் பண்றேன்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism