Published:Updated:

`பரதநாட்டியம்தானேம்மா...' டு `என்னது வள்ளுவரா..?' - திண்டுக்கல் சீனிவாசன் அடிக்கடி உளறுவது ஏன்?!

``எங்க அமைச்சர் இயல்பான மனிதர். எம்.ஜி.ஆர் காலத்துலேயே அ.தி.மு.க-வின் பொருளாளராகச் செயல்பட்டவர். அம்மாவின் அன்புக்குரியவர்’’ - அமைச்சர் சீனிவாசன் அடிக்கடி உளறுவது ஏன்?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில், எதிர்க்கட்சித் தலைவர் தொடங்கி முதலமைச்சர் வரை உளறிக் கொட்டி, மீம்களில் இடம்பெறுவது தொடர்கதையாகி ருகிறது. அதிலும், ஜெயலலிதா இருந்தபோது வாயே திறக்காத அ.தி.மு.க அமைச்சர்கள் அனைவரும், அவரது மறைவுக்குப் பிறகு கட்டுப்பாடின்றி உளறிவருகிறார்கள். குறிப்பாக, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறல் மன்னனாகத் திகழ்ந்துவருகிறார். 2021-ம் ஆண்டு தொடங்கி ஐந்து நாள்களே ஆன நிலையில் பல உளறல் பேச்சுகளை நிகழ்த்தி அ.தி.மு.க-வினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.

திண்டுக்கல் சீனிவாசனின் வைரல் உளறல்களைப் பின்வருமாறு காணலாம்!

2017-ம் ஆண்டு திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் சீனிவாசன், ``துணை முதல்வர் பன்னீர்செல்வம், டெல்லிக்குச் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துவந்தார்'' என்றார். பிரதமர் மோடி என்று சொல்வதற்கு பதிலாக மாற்றிப் பேசியது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. மற்றொரு முறை `பிரதமர் நரசிம்மராவ்' என்றும் உளறியிருக்கிறார் அமைச்சர்.

திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்
Vikatan

அதே ஆண்டு நடைபெற்ற மற்றொரு பொதுக்கூட்டத்தில், ``மன்னிச்சுக்குங்க மக்களே... அம்மா இட்லி சாப்பிட்டாங்க, சட்னி சாப்பிட்டாங்கனு நாங்க சொன்னது எல்லாமே பொய்தான். சசிகலா குடும்பத்தோட நெருக்கடி காரணமாகத்தான் அப்படிச் சொன்னோம்" என்று அமைச்சர் அடித்த அந்தர் பல்டியில் அ.தி.மு.க தலைமையே ஆடிப்போனது.

ஈஷா யோகா மையம் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட `நதிகளைக் காப்போம்' நிகழ்ச்சியில், பாடகி சுதா ரகுநாதனை, பரதநாட்டியக் கலைஞர் என்று மேடையில் குறிப்பிட்டு பின்னர், ``ஆமா... நீங்க பரதநாட்டியம்தானேம்மா'' என்று கேட்க, ``இல்லை பாடகர்’’ என சுதா ரகுநாதன் சொல்ல, ``ஓ... பாடகரா’’ என்று அமைச்சர் சீனிவாசன் கேட்டபோது அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

2018-ம் ஆண்டு அ.தி.மு.க பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ``அம்மா கொள்ளை அடிச்ச காசை, டி.டி.வி.தினகரனும், அவரோட குடும்பத்தினரும் பங்குபோட்டுக்கிட்டாங்க..." என்று உளறி, `மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு வெளியில பேசுறீங்க' என்ற மீம் டெம்ப்ளேட்டுக்கு வேலை கொடுத்தார் அமைச்சர். மற்றொரு விழாவில் பேசும்போது ``அம்மா ஆட்சியைவிட இப்போ சிறப்பான ஆட்சி நடத்திக்கிட்டிருக்கோம்" என்று பேசி, தன் சொந்தக் கட்சித் தொண்டர்களிடமே சிக்கித் தவித்தார்.

கஜா புயலின்போது செய்தியாளர்களைச் சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், சிட்னியைச் சேர்ந்த விஞ்ஞானியும், தமிழக அமைச்சருமான செல்லூர் ராஜூவே அதிர்ந்துபோகும் அளவுக்கு ஒரு யோசனையைக் கூறினார். ``விமானங்கள் மூலம் மின் கம்பங்களை நட வேண்டும்'' என்பதுதான் அந்த யோசனை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2019-ல் நடந்த எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர்,``மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை வாஜ்பாய் அறிவித்திருக்கிறார். மிகவும் அருமையான பட்ஜெட்" என்றார். கூட்டத்திலிருந்த அ.தி.மு.க நிர்வாகிகள், 'என்னது வாஜ்பாயா?' என்று ஷாக் ஆகி நின்றனர்.

மோடியின் பேரன் ராகுல் காந்தி.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்
`குடிமராமத்து நாயகன்' முதல் `ஞானப்பழம் தந்த பழனிசுவாமி' வரை -முதல்வரை வெட்கப்படவைக்கும் அமைச்சர்கள்!

2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "நரேந்திர மோடி ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார்கள், அவருடைய பேரனான ராகுல் காந்தி, மற்றொரு பக்கம் போட்டியிடுகிறார்கள்" என்று கூறி அங்கிருந்த தொண்டர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரவைத்தார். 'வாஜ்பாய் பிரதமர்' என்று சொன்னதைக்கூடப் பொறுத்துக்கொண்ட பா.ஜ.க -வினர், `மோடியின் பேரன் ராகுல் காந்தி' என்று சொன்னதைக் கேட்டதும் கொதித்துவிட்டனர்.

நாடாளுமன்றத் தேர்தலின்போது வாக்கு சேகரிப்பின் ஒரு பகுதியாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பா.ம.க வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்துப் பேசிய அமைச்சர், ``நமது வேட்பாளர் சோலைமுத்துவுக்கு வாக்களியுங்கள்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் பிரதமராக ஆசைப்படுபவர்களின் பட்டியலைச் சொல்லும்போது மம்தா, சரத்பவார் என்று சொல்வதற்கு பதிலாக, 'மம்தா, சரத்குமார்' என்றார். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட, 'இப்போது சரியாகக் கூறுகிறேன் பாருங்கள்' என்ற தொனியில் சரத்பாபு என்றார் மனிதர். 'நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்லும் கட்சியிலிருந்துகொண்டு, நடிகர்களைப் பிரதமராக்கிவிடுவார்போல' என்று மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டன.

ஸ்டாலின் தற்போது பேசும் அனைத்துக் கூட்டங்களிலும் உளறிக்கொட்டிவருகிறார். அதனால் அ.தி.மு.க கூட்டணிக் கட்சியான பா.ம.க-வின் `ஆப்பிள்' சின்னத்துக்கு வாக்களியுங்கள்.
தேர்தல் பொதுக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன்

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பா.ம.க-வினர், `ஆப்பிள் இல்லை மாம்பழம்’ என்று கூறினர். மேடையிலிருந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், இதைக் கேட்டதும் அப்செட் ஆகிவிட்டார்.

திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்

2020-ம் ஆண்டு இறுதியில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் ரூ.2,500 பொங்கல் பரிசு குறித்துப் பேசிய அமைச்சர், ``பொங்கல் பரிசுத் திட்டத்தை முதல்வர் அறிவிச்சதுக்கு திட்றாங்க... தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஸ்டாலினுடைய அப்பா செய்தால் அவர்கள் புத்தரின் வாரிசு, இயேசுவின் வாரிசு. ஆனால் அதே திட்டங்களை நாம் செய்தால் இயேசுநாதரைச் சுட்ட கோட்சேவின் வாரிசு என்ற மாதிரி... எதைச் செய்தாலும் தப்பு தப்பு என்கிறார்கள்" என்றார். அங்கிருந்தவர்கள் பலரும் அமைச்சர் பேசியதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

2021-ம் ஆண்டு தொடக்கத்தில் அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சீனிவாசன், `` `நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.' என்று அந்த காலத்தில் ஔவையார் பாடினார்'' என்று சொல்ல மேடையிலிருந்த நிர்வாகி ஒருவர் ``இதைச் சொன்னது வள்ளுவர்'' என்றார். ``என்னது வள்ளுவர் சொன்னாரா??'' என்று ஷாக் ஆன அமைச்சர், ``நம்ம என்ன எழுதி வச்சா பேசுறோம்... ஔவையாரும் சொல்லியிருக்காங்க, வள்ளுவரும் சொல்லியிருக்காரு. கருத்து ஒண்ணுதானே'' என்று பேசிச் சமாளித்தார்.

திண்டுக்கல் சீனிவாசன்,
திண்டுக்கல் சீனிவாசன்,
``மோடிக்கு இரட்டை இலைச் சின்னத்துல ஓட்டுப் போடுங்க!'' - 2019-ன் டாப் அரசியல் உளறல்கள்

திண்டுக்கல் மாவட்டம் கோம்பையான்பட்டியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்துப் பேசினார். அப்போது கூட்டத்தில் மதுபோதையிலிருந்த ஒருவர் `எனக்குப் பொங்கல் பரிசு கூப்பன் கிடைக்கவில்லை' என அமைச்சரிடம் தெரிவித்தார். இதைக் கேட்டுச் சிரித்த அமைச்சர், ``பொங்கல் பரிசுக்குக் கொடுக்கப்படும் பணம் மீண்டும் நமக்குத்தான் வரும். இது போன்ற நபர்களால், டாஸ்மாக் கடை மூலம் அரசுக்கே பொங்கல் பரிசுப் பணம் வந்துவிடும்'' என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.

மற்றொரு விழாவில், ``தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதாமல் மருத்துவர் ஆக வேண்டும் என்பதற்காகவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்திருக்கிறார்'' என்று உளறி, கஷ்டப்பட்டுப் படித்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் கோபத்துக்கு உள்ளானார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

இப்படி, தொடர்ச்சியாக உளறி சர்ச்சைகளில் சிக்கிவருகிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இது குறித்து அவரது ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம்.

``எங்க அமைச்சர் இயல்பான மனிதர். எம்.ஜி.ஆர் காலத்துலேயே அ.தி.மு.க-வின் பொருளாளராகச் செயல்பட்டவர். அம்மாவின் அன்புக்குரியவர். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்த அரசியல் தலைவர்களில், மிகக் குறைந்த நபர்களே இன்றும் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கிறார்கள். அதில் எங்கள் தலைவர்தான் முக்கியமானவர். தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ஐ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான், அவரது மகன் செந்தில்குமார்தான் பழநி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர். இருப்பினும், 72 வயதிலும் திண்டுக்கல் மாவட்ட அரசியலைக் கட்டுக்குள் வைத்திருப்பவர் எங்கள் அமைச்சர்தான். வயது மூப்பின் காரணமாகப் பேசும்போது சில விஷயங்களைத் தவறாகச் சொல்லிவிடுகிறாரே தவிர அவர் ஆளுமைமிக்க அரசியல்வாதி என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது'' என்கிறார்கள் உறுதியாக.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு