Published:Updated:

மிஸ்டர் கழுகு: தி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க!”

மு. க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
மு. க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்

ஸ்டாலினிடம் பொங்கிய உதயநிதி

மிஸ்டர் கழுகு: தி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க!”

ஸ்டாலினிடம் பொங்கிய உதயநிதி

Published:Updated:
மு. க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
மு. க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்

‘‘எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க!’’ - ‘ஜெயம்’ ரவியின் குரல் சத்தமாக ஒலிக்க, திரும்பிப் பார்த்தால் செல்போனில் வீடியோவைப் பார்த்தவாறே அலுவலகத்துக்குள் நுழைந்தார் கழுகார்.

‘‘இது... ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தின் ‘ஃபேமஸ்’ டயலாக் ஆயிற்றே. தீபாவளியை முன்னிட்டு திரைப்பட ரசிகர் கூட்டமே ‘பிகில்’, ‘கைதி’ என தியேட்டர் பக்கம் குவிந்துகொண்டிருக்கும் நேரத்தில், பழைய படத்தை ஆர்வமாகப் பார்க்கிறீரே?’’ என்று கேட்டோம்.

மு. க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்
மு. க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்

“ஓ... ‘பிகில்’ கதை வேறு இருக்கிறதா... அதைப் பற்றி பிறகு பேசுகிறேன். முதலில் ஆரம்பித்த கதையைத் தொடர்கிறேன். ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தில் அப்பா பிரகாஷ்ராஜைப் பார்த்து உச்சக்கட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பில் மகன் ‘ஜெயம்’ ரவி பேசும் இந்த டயலாக், இப்போது ஆழ்வார்பேட்டை வீட்டில் அப்பா மு.க.ஸ்டாலினைப் பார்த்து ‘எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க’ என்று மகன் உதயநிதி தரப்பிலிருந்து அதே வேகத்தில் வந்து விழுந்ததாம். இதைத் தொடர்ந்து அங்கு பிரளயமே வெடித்துவிட்டதாக அறிவாலய வட்டாரம் கலகலத்துப்போய் கிடக்கிறது.’’

‘‘அடடே!’’

‘‘அக்டோபர் 24-ம் தேதி காலையில், விக்கிரவாண்டி - நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கின. ஆரம்பத்திலிருந்தே தி.மு.க பின்னடைவில் இருந்ததைக் கண்டு, ஸ்டாலின் குடும்பம் அப்செட்டாம்! விக்கிரவாண்டியில் இருந்த தி.மு.க நிர்வாகி களிடம் நிலவரங்களைக் கேட்டபடி இருக்க, அன்பகத்தில் ரியாக்‌ஷனோ வேறுமாதிரி இருந்ததாம்.’’

‘‘சொல்லும்!’’

‘‘அன்பகத்தில் கூடியிருந்த இளைஞர் பட்டாளம், ‘தோல்விக்குக் காரணமே சீனியர்கள்தான்’ என்று சூடாக விவாதித்துள்ளது. `நாடாளுமன்றத் தேர்தலில் நமக்குக் கிடைத்த வெற்றி மமதையில், கட்சியின் சீனியர்கள் பலரும் அலட்சியத்துடன் இருந்தார்கள். அதுவே தோல்விக்குக் காரணமாகி விட்டது’ என்று டென்ஷனுடன் பேசியுள்ளனர்.

உதயநிதியின் காதுகளுக்கும் இந்தத் தகவல்கள் சென்றுள்ளன. குறிப்பாக, ‘விழுப்புரம் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி தரப்பினரின் தன்னிச்சையான செயல்பாடுகள்தான் இத்தனைக்கும் காரணம்’ என்று புகார் வாசிக்கப் பட்டதாம். அதன் எதிரொலிதான் அன்று மாலையே ஆழ்வார்பேட்டை இல்லத்தில் அந்த ஆக்ரோஷ டயலாக் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்!’’

‘‘காட்சிகளை அப்படியே விவரியும்!’’

‘‘ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட ஒருசிலர் மட்டுமே கலந்துகொண்ட அவசர மீட்டிங் அந்த இல்லத்தில் நடைபெற்றதாம். விக்கிரவாண்டி தொகுதியைப் பற்றி முதலில் பேசப்பட்டதாம். ‘வேட்பாளர் அறிவிப்பிலிருந்தே குளறுபடிகள் ஆரம்பமாகிவிட்டன. பொன்முடி சொன்னார் என்பதற்காக, வெளியூர் வேட்பாளரை களத்தில் இறக்கினீர்கள். அவரை ஜெயிக்கவைக்க வேண்டிய பொறுப்பும் அவருக்குத்தானே இருந்திருக்கவேண்டும். அதே தொகுதியைச் சேர்ந்த வேறு சிலரின் பெயரை தொகுதி நிர்வாகிகள் சொல்லியும் கேட்காமல், சீட் வழங்கினீர்கள். அந்த வாய்ப்பை அவர் ஒழுங்காகப் பயன்படுத்தினாரா? சீனியர் என்கிற கெத்திலேயே அலட்சியமாகச் செயல்பட்டுள்ளார். எனக்கு அங்கிருந்து வந்த தகவல்கள் எதுவுமே பாசிட்டிவ்வாக இல்லை’ என்று உதயநிதி தரப்பு உறுமலுடன் ஆரம்பித்ததாம்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘ஸ்டாலின் ரியாக்‌ஷன்?’’

‘‘அமைதியோ... அமைதி. ‘ஜெகத்ரட்சகன், எ.வ.வேலு என்று சீனியர்களையெல்லாம் அங்கு அனுப்பினீர்கள். அவர்களை ஒருங்கிணைக்க வேண்டியவர், அதைச் செய்யவில்லை. இதுதான் தோல்விக்கான முதல்படி. உங்களைச் சுற்றி உள்ளவர்களை நீங்கள் கண்காணியுங்கள். அவர்கள் உங்களிடம் ஒருமாதிரி நடந்துகொண்டு, மாவட்டத்தின் பிற நிர்வாகிகளிடம் அதிகாரத் தோரணையில் நடந்துகொள்கிறார்கள். இதற்கு நீங்களே இடம்கொடுத்துவிட்டீர்கள். எல்லா தப்பும் நீங்கதான் செஞ்சீங்க. இதே நிலை நீடித்தால், வரும் சட்டமன்றத் தேர்தலில் மிகவும் சிக்கலாகிவிடும்’ என்று புகார்களை அடுக்கிக்கொண்டேபோனதாம் உதயநிதி தரப்பு.’’

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

‘‘அடேங்கப்பா!’’

‘‘எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., பொன்முடி உள்ளிட்ட சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு, ‘இவர்களுக்கு சீனியர் என்ற மரியாதையை நாம் கொடுக்கலாம். ஆனால், முழுப்பொறுப்பையும் கொடுக்கும்போது சரியாகச் செய்கிறார்களா எனப் பார்க்கவேண்டாமா? நாங்குநேரிக்கு

ஐ.பெரியசாமியை பொறுப்பாளராக அறிவித்தீர்கள். ஆனால், காங்கிரஸின் பாசத்துக்குரிய அந்தத் தொகுதிகூட பறிபோய்விட்டது. காங்கிரஸ் வேட்பாளரே, ‘என்னிடம் வாங்கிய பணத்தை, தி.மு.க நிர்வாகிகள் ஒழுங்காக செலவு செய்யவில்லை’ என்று நம் ஆட்களிடம் புலம்பியுள்ளார். இனியும் இந்த விஷயத்தில் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டாம்’ என்று வார்த்தைகளில் கறார்காட்டியதாம் உதயநிதி தரப்பு.’’

“பயங்கரமான பாய்ச்சலாக இருக்கிறதே!’’

‘‘துரைமுருகன், தனியாக லாபி செய்கிறார். அவர் பேச்சைக் கேட்டு `வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு என, விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் அறிவித்தீர்கள். அதனால்தான், தி.மு.க - அ.தி.மு.க என்று இருந்த தேர்தல் யுத்தம், பா.ம.க - தி.மு.க யுத்தமாக மாறியது. இந்த விஷயத்தில் பதிலடி கொடுக்க வேண்டிய துரைமுருகன் வாயே திறக்கவில்லை. சீனியராக இருப்பவர் பதில் அறிக்கை கொடுத்திருக்க வேண்டாமா?’ என்றும் உதயநிதி தரப்பில் பொங்கினார்களாம்.’’

“இடைத்தேர்தல் தோல்வி, தோல்விதான். ஆனாலும், இதற்காக மட்டுமா இப்படி உக்கிரநிதியானார்கள்?”

“கருணாநிதி இருக்கும் வரை ஸ்டாலினுக்கு பெரிதாக வேலை இருந்ததில்லை. ஸ்டாலினைப் பொத்திப் பொத்திதான் வளர்த்தார். எல்லாவற்றையும் கருணாநிதியே முடித்துவிடுவார். அப்படியே வளர்ந்ததால், தனிப்பட்ட வகையில் முடிவுகளை எடுப்பதில் தலைவர் தடுமாறுகிறார் என்கிறார்கள் பக்கத்தில் இருந்து அவரை கவனிப்பவர்கள். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு முடிவுகளை தனித்து எடுத்தாலும், அதில் ஏகப்பட்ட குறுக்கீடுகள் இருக்கின்றனவாம். அதுதான் பல சமயங்களில் தோல்வியை நோக்கித் துரத்துவதாக உணர்கிறாராம் உதயநிதி. தானும் அப்படியே இருந்துவிட்டால், எதிர்காலத்தில் பெரிய ஆளுமையாக வர முடியாது. குறிப்பாக, தன் தாத்தா கருணாநிதியாக வரவே முடியாது என்பதுதான் அவருடைய பயமாம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“பொறுப்பான பிள்ளை... ஆகா... ஆகா!’’

“ஆரம்பத்தில் சொன்ன ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்திலும் இப்படித்தான் அப்பாவே பார்த்துப் பார்த்துச் செய்வார். அதனால்தான் கடைசியில் ‘எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க’ என்று அப்படிப் பொங்குவார் ‘ஜெயம்’ ரவி’’ என்று கழுகார் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வெளியே பட்டாசுகள் படபடவென வெடிக்கும் சத்தம் பலமாகக் கேட்டது.

மிஸ்டர் கழுகு: தி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க!”

‘‘எடப்பாடி தலைமையில் இப்படியொரு வெற்றியைப் பெற்றுவிட்டார்களே என்பது, தி.மு.க வட்டாரத்தை ஏகத்துக்கும் கடுப்பாக்கி யிருப்பதுடன் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ‘நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி, மோடி எதிர்ப்பலையால் கிடைத்த வெற்றி மட்டுமே’ என்றும் தி.மு.க தரப்பு யோசிக்க ஆரம்பித்து விட்டதாம். ‘இந்த நேரத்தை கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டு, மாவட்டச் செயலாளர்களாக உள்ள சில சீனியர்களை மாநிலப் பொறுப்புக்குக் கொண்டுவந்து அமர்த்திவிட்டு, அடுத்த தலைமுறைக்கு மாவட்டச் செயலாளர் பதவியை வழங்கிவிடலாம்’ என்ற திட்டத்தில் இருக்கிறதாம் உதயநிதி தரப்பு. மேலும், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே தமிழகம் முழுவதும் தி.மு.க-வுக்குச் சாதகமான தொகுதிகள் எவை, பாதகமான தொகுதிகள் எவை என்பதை இப்போதே கணக்கெடுக்க முடிவுசெய்துவிட்டனர்.’’

‘‘அ.தி.மு.க-வில் என்ன நடக்கிறது?’’

‘‘தேர்தல் முடிவு தந்த உற்சாகத்துடன் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் கொண்டாட்ட நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் மாட்டிக்கொண்டார். அதுவே பழனிசாமிக்கு வசதியாகிவிட்டது. இந்தக் கொண்டாட்டங்களை ஒற்றைத் தலைவராக முன்னெடுத்தார்.’’

‘‘இதற்குத்தானே ஆசைப்பட்டார் எடப்பாடி?’’

‘‘கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இருக்கும்போது இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது சர்வசாதாரண மாகவே நடக்கும். காரணம், ஆளுங்கட்சியின் முழுபலத்தையும் அவர்கள் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு இணையாக வேலை பார்த்து வெற்றியைச் சுவைத்துவிட்டார் எடப்பாடி என்று அரசியல் நோக்கர்கள் பேச ஆரம்பித் துள்ளனர். அதுவும் நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் தோல்வியைச் சந்தித்திருக்கும் சூழலில் நடந்த இந்த இடைத்தேர்தல் வெற்றி அவரைப் பொறுத்தவரை இமாலய வெற்றி என்றும் பாராட்டுகிறார்கள்.’’

“எடப்பாடி காட்டில் கனமழை என்று சொல்லும்!’’

“மற்றொருபுறம் சத்தமில்லாமல் வேறு ஒரு வேலையிலும் இறங்கி யுள்ளார் முதல்வர். அ.தி.மு.க தரப்பில் தேர்தல் செலவுகளுக்காகக் கொடுக்கப்பட்ட பணம், சில இடங்களில் பதுக்கப் பட்டுவிட்டதாம். பணத்தைப் பதுக்கியவர்கள் யார், களத்தில் ஒழுங்காகப் பணியாற்றாத அமைச்சர்கள் யார் என்றெல்லாம் பட்டியல் தயார்செய்யச் சொல்லியுள்ளாராம். விரைவில் கல்தா கொடுக்கவும் தீர்மானித்து விட்டாராம்.’’

‘‘ஓஹோ!’’

‘‘அதேபோல் அரசுத் துறைகள் சிலவற்றிலும் அதிகாரிகள் மாற்றப்பட இருக்கிறார்களாம். முதல்வர் கைவசம் உள்ள துறையிலும்கூட மாற்றம் உண்டாம்’’ என்றபடியே கழுகார் சிறகு விரிக்க முயல... நாம் ‘உய்ய்ய்ய்ய்’ என்று குரல்கொடுத்தோம்.

“அட, ‘பிகில்’ மறந்துவிட்டேனே. ‘படத்தில் அரசியல் இல்லை’ என்றுதான் அனைவருமே பேசிக்கொண்டுள்ளனர். ஆனால், குறியீடுகளாக ஆங்காங்கே அரசியலைக் குத்திவைத்துள்ளார் விஜய். ‘மெர்சல்’ படம் வெளியான நேரத்தில் ‘ஜோசப் விஜய்’ என்று பா.ஜ.க-வின் ஹெச்.ராஜா ட்வீட் செய்து உசுப்பேற்றினார். அதற்கு, ‘ஜோசப் விஜய்’ என்று தன்னுடைய ஒரிஜினல் பெயரிலேயே பதிலறிக்கை வெளியிட் டார் விஜய். தற்போது திரைமொழியிலும் பதிலளிக்கும் வகையில், படம் முழுக்க கிறிஸ்துவராகவே வருகிறார். அதிலும் ‘சி.எம்’ ஆக வேறு வருகிறார்.’’

“அரசியல் இல்லை என்றீர்... பிறகென்ன சி.எம்?’’

“அவருடைய பெயர் ‘கேப்டன் மைக்கேல்’. அதைத்தான் சுருக்கி `சி.எம்’ என்கிறார்கள். படம் முழுக்க கிறிஸ்துவ வாடை வீசுகிறது. இடையில், ‘பிராமணக் குடும்பம்’ பற்றிய காட்சிகளையும் வைத்து யாருக்கோ பதில் சொல்லி யிருக்கிறார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது வடக்கு - தெற்கு என ஏதோ பூடகமாக விஜய் அரசியல் பேசுவதுபோல்தான் தெரிகிறது.’’

“வெளிப்படையாகவே பேச வேண்டியதுதானே?’’

“வெளிப்படையாக அரசியல் ஏதும் பேசாத சூழலிலேயே தியேட்டரில் சிறப்புக் காட்சிகளுக்கு கெடுபிடி காட்டினார்கள். ஒருவழியாக, ‘எடப்பாடி அப்பா மாதிரி’ என்றெல்லாம் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் பேசி சமாளித்தார். இதுவே வெளிப்படையாக மோதினால், ‘மோடி எங்கள் டாடி’ என்று டெல்லி வரை போனாலும் தப்பிப்பது முடியாத காரியம்” என்று சிறகை விரித்துப் பறந்தார்.

உலக அதிகார மையங்களுடன் மோடி!

திகாரம்மிக்க உலகத் தலைவர்களை உறுப்பினர்களாகக்கொண்ட ‘ஜே.பி.மோர்கன் இன்டர்நேஷனல்’ அமைப்பின் கூட்டம், பிரதமர் மோடியின் இல்லத்தில் அக்டோபர் 22-ம் தேதி நடைபெற்றது. பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி ப்ளேர், ஆஸ்திரேலியா முன்னாள் பிரதமர் ஜான் ஹோவர்ட், அமெரிக்க முன்னாள் உள்துறைச் செயலாளர் காண்டலீசா ரைஸ், அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் இயக்குநர் ராபர்ட் கேட்ஸ் போன்ற உலகின் அதிகார மையங்கள், மோடி வீட்டில் அன்றைய தினம் கூடின. குறிப்பாக, சர்வதேச அரசியலில் ஆதிக்கம் செலுத்திவரும் அமெரிக்க முன்னாள் உள்துறைச் செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கருடன் மோடி சகஜமாக உரையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின. இதை முன்வைத்து, ‘ஈராக் போர்க் குற்றவாளிகளுடன் மோடி எதற்காக உரையாடுகிறார்?’ என்று காங்கிரஸ் வட்டாரங்கள் சர்ச்சையைக் கிளப்ப, ‘2005-ம் ஆண்டு தனக்கு விசா தர மறுத்த காண்டலீசா ரைஸையே, பிரதமரான தன் வீட்டுக்கு வரவழைத்ததில் இருக்கிறது மோடியின் ராஜதந்திரம்’ என்று மார்தட்டுகிறது பா.ஜ.க தரப்பு.

மிஸ்டர் கழுகு: தி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க!”

“இந்தியாவின் பொருளாதாரத்தை 5.5 டிரில்லியன் டாலராக உயர்த்துவது குறித்து ஆலோசித்தோம்’’ என்று மோடி கூறினாலும், சீனாவின் பொருளாதார ஆதிக்கம், இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை, ஐ.நா-வில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து இவையெல்லாம் விவாதிக்கப்பட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விளையாட்டுத் துறையில் ‘ஃப்ராங்க்’ வசூல் வேட்டை!

சென்னை மண்டல தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுக் கழகத்தின் உயர் அதிகாரியின் வசூல்வேட்டை எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது என்கிற புலம்பல்கள், அந்தத் துறையில் சற்று அதிகமாகவே கேட்க ஆரம்பித்துள்ளது. சென்னையில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீச்சல்குளங்கள், விளையாட்டு மைதானங்களைப் பராமரிக்கும் கீழ்நிலை அதிகாரிகளைக் கூப்பிட்டு வார மாமூல் வசூலிக்கிறாராம். `இதென்ன புதுப்பழக்கம்?’ என அதிகாரிகள் கேட்டால், ‘இன்னும் ஆறு மாசத்துல ரிட்டயர்டு ஆகப்போறேன். அதனால்தான்’ என்று ‘ஃப்ராங்க்’காகவே மனம் திறக்கிறாராம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism