அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ரம்யா பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரம்யா பாண்டியன்

இயக்குநர் லிங்குசாமி, தெலுங்கில் ‘தி வாரியர்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

தனுஷ், ஆர்யா, விஜய் ஆண்டனி, சந்தானம் உள்ளிட்டோரின் தேதிகளை வாங்கிவைத்திருக்கும் மதுரை ஃபைனான்ஸியர் அன்புச்செழியன், இந்த வருடத்தில் வரிசையாகப் படங்களைத் தொடங்கவிருக்கிறார். அதற்காக, தினமும் மணிக்கணக்கில் கதை கேட்டுவருகிறார் அன்புச்செழியன். அவர் கேட்டு ஓ.கே செய்யும் கதைகளை, அடுத்தபடியாக இயக்குநர் சுப்ரமணிய சிவா கேட்கிறார். இருவரின் அபிப்பிராயங்களையும் பெறுகிற கதைகளை அன்புச்செழியனின் மகள்தான் இறுதியாக முடிவுசெய்கிறாராம்.

‘டான்’ மெஹா ஹிட் அடித்தும், படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்திக்கு அடுத்தகட்ட வாய்ப்புகள் அமையவில்லை எனக் கோடம்பாக்கம் முழுக்க டாக். ‘இயக்குநரின் வெற்றியாகத் தயாரிப்பாளர்கள் யாரும் பார்க்கவில்லை’, ‘அதிர்ஷ்ட வெற்றி’ என்றெல்லாம் ஏதேதோ பேசப்பட்டது. உண்மையில், தனக்கு வந்த பல வாய்ப்புகளையும் ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு, சைலன்ட்டாக விஜய்க்கு கதை சொல்லியிருக்கிறார் சிபி. ‘ஒன்லைன் ஓகே’ என விஜய் சொல்ல, கதையை டெவலப் செய்யும் வேலைகளில் சிபி தீவிரமாக இருக்கிறாராம்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

இயக்குநர் லிங்குசாமி, தெலுங்கில் ‘தி வாரியர்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். ஹீரோ, ராம் பொத்தினேனியின் பிசினஸை இந்தப் படத்தின் மூலம் கணிசமாக எகிறவைத்திருக்கிறாராம் லிங்குசாமி. படத்தில் இடம்பெற்ற ‘புல்லட்’ பாடலும் பெரிய ஹிட் அடிக்க, பெரிய பிசினஸ் கொண்ட ஹீரோக்கள் வரிசையில் ராம் இடம்பிடித்திருக்கிறாராம். இதனால், தமிழ் இயக்குநர்களுக்கு, தெலுங்கில் நல்ல வரவேற்பு உருவாகியிருக்கிறது.

கலைப்புலி தாணு, நேரம் கிடைக்கிறபோதெல்லாம் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வான விவேக் ஜெயராமனைச் சந்தித்துப் பேசுகிறாராம். இதைவைத்து ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் படத் தயாரிப்பில் இறங்கப்போவதாகவும், அஜித், விஜய் போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டில் படங்களைச் செய்யப்போவதாகவும் பரபரப்பு கிளம்பிவிட்டது. விசாரித்த வகையில், ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் படத் தயாரிப்பில் இறங்கும் ஐடியாவில் இல்லையாம். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தைப்போல் படங்களை வாங்கி ரிலீஸ் செய்யும் திட்டத்தைத்தான் ஆலோசித்துவருகிறார்களாம்

உஷ்...

இனிஷியல் இசை அமைப்பாளர், வரிசையாக ஹிட் கொடுப்பது என்னவோ உண்மைதான். அதற்காக அவருடைய சம்பளத்தைத் திடீரென ‘6.5 சி’ என உயர்த்தியிருப்பதுதான் திரையுலகையே அதிரவைத்திருக்கிறது. ‘இஷ்டம்னா வாங்க… இல்லைன்னா போங்க’ என ஆதங்கப்பட்டவர்களிடம் கூலாகச் சொன்னாராம் இனிஷியல் இசை அமைப்பாளர்!