ஆசிரியர் பக்கம்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

“என் கையில கேமரா தரத் தயங்கினவங்க இன்னிக்கு ஆச்சர்யமா பார்க்குறாங்க!”

வளர்மதி
பிரீமியம் ஸ்டோரி
News
வளர்மதி

மொபைல் போட்டோகிராபியில் கலக்கும் வளர்மதி

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியைச் சேர்ந்தவர் வளர்மதி. மொபைல் போட்டோகிராபியில் கலக்கும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்கள். ஆண்ட்ராய்டு போனை வைத்து இப்படி யெல்லாம் புகைப்படம் எடுக்க முடியுமா என்று அதிசயிக்கும் அளவுக்கு இருக்கிறது வளர்மதியின் ஒவ்வொரு க்ளிக்கும்.

``விளையாட்டா ஆரம்பிச்ச போட்டோகிராபி, இன்னிக்கு எனக்குப் பெரிய அடையாளமா மாறியிருக்கு” - உற்சாகம் குறையாமல் பேசுகிறார் வளர்மதி.

``அப்பா டாக்ஸி டிரைவர். அம்மா ஹோம் மேக்கர். நான் ப்ளஸ் டூ படிச்சிக்கிட்டிருந்தப்போ, கேமரா உள்ள ஒரு பட்டன் செல்போனை எங்கப்பா வாங்கிக் கொடுத்தார். பார்க்குற புழு, பூச்சிகளையெல்லாம் போட்டோ எடுத்து கேலரியை நிறைச் சேன். நான் காலேஜ் சேர்ந்ததும் அப்பா எனக்கு ஒரு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்தார். இன்டர்நெட் வசதி, கேமரா குவாலிட்டி எல்லாமே நல்லா இருந்ததால இன்னும் நல்லா போட்டோ எடுக்கணும்னு ஆர்வம் வந்துச்சு. ஆனா, அப்பவும் என் ஃபோகஸ் பூச்சிகள் மேலதான் இருந்துச்சு. ஆனா, இந்த முறை ஒரு பூச்சியை போட்டோ எடுக்கறதுக்கு முன்னால அந்தப் பூச்சியைப் பத்தின விஷயங்களை இன்டர்நெட்ல படிச்சுத் தெரிஞ்சுகிட்டு, அதோட வாழ்க்கை சுழற்சியை புகைப் படமாக்கினேன். கிட்டத்தட்ட டாகுமென்ட்ரி மாதிரி இருந்த தால என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் பாராட்டினாங்க” - புகைப்பட ஆர்வத்துடன் பூச்சிகளைப் படம் பிடித்த கதையும் சேர்த்துப் பேசுகிறார் வளர்மதி.

“என் கையில கேமரா தரத் தயங்கினவங்க இன்னிக்கு ஆச்சர்யமா பார்க்குறாங்க!”

``என் போட்டோக்களையும், ஆர்வத்தையும் பார்த்த என் ஃபிரெண்ட்ஸ், `நீ எடுக்கிற போட்டோஸ்லாம் ரொம்ப நல்லா இருக்கு. அதை கேலரியிலேயே வெச்சுக்கிறதால பிரயோஜனம் கிடையாது. சோஷியல் மீடியாவுல போடு’னு சொன்னாங்க. நான் எடுக்கும் போட்டோக் களை பொதுவெளியில பதிவிடணும்னா இன்னும் பக்காவா பண்ணணும்னு நினைச் சேன். மொபைல் போன்ல `macro photography’ பண்ண என்னென்ன எக்யூப்மென்ட்ஸ்லாம் பயன்படுத்தலாம்னு இன்டர்நெட்ல தேடி னேன். 350 ரூபாய் கொடுத்து மொபைல் மேக்ரோ லென்ஸ் வாங்கினேன். அதை எப்படி முறையா பயன்படுத்தறதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஃபேஸ்புக்ல `வளர்மதி போட்டோகிராபி'னு ஒரு அக்கவுன்ட் ஓப்பன் பண்ணி அதுல நான் எடுக்கிற படங் களை ஷேர் பண்ண ஆரம்பிச்சேன். அடுத்து இன்ஸ்டாகிராம்ல ஷேர் பண்ணேன். என் னுடைய எம்.எஸ்ஸி படிப்பு முடிஞ்சது. அப்பாவுக்கு நான் பேங்க் ஆபீஸர் ஆகணும்னு ஆசை. ஆனா, எனக்கு படிப்புல பெருசா ஆர்வம் இல்லை.

ஒரு பப்ளிகேஷன்ல வேலைக்குச் சேர்ந் தேன். ஆனா, ஒரு வாரத்துக்கு மேல என்னால அங்கே வேலை பார்க்க முடியலை. ஏன்னா வேலைக்குச் சேர்ந்த இடம் அழகு ததும்ப பச்சைப் பசேல்னு பசுமையா இருந்துச்சு. நிறைய பூக்கள், பூச்சிகள்னு ரம்மியமா இருந்த அந்த இடத்தைப் பார்த்ததும் எனக்கு போட்டோ எடுக்கணும்னுதான் தோணுச்சே தவிர, வேலையில ஈடுபாடு வரலை. `நான் வேலைக்குப் போகலை. போட்டோகிராபரா ஆகப் போறேன்’னு வீட்ல சொன்னேன். அப்பா ஷாக் ஆகிட்டாரு.

“என் கையில கேமரா தரத் தயங்கினவங்க இன்னிக்கு ஆச்சர்யமா பார்க்குறாங்க!”
“என் கையில கேமரா தரத் தயங்கினவங்க இன்னிக்கு ஆச்சர்யமா பார்க்குறாங்க!”
“என் கையில கேமரா தரத் தயங்கினவங்க இன்னிக்கு ஆச்சர்யமா பார்க்குறாங்க!”

வெடிங் போட்டோகிராபி ட்ரை பண்ண லாம்னு, திருநெல்வேலி, தூத்துக்குடியில உள்ள ஸ்டூடியோக்களுக்கு வேலை கேட்டுப் போனேன். `பொண்ணு கையில கேமரா தர மாட்டோம். ஈவென்ட்டுக்கு ஒரு பொண் ணைக் கூப்பிட்டுப் போறது செட் ஆகாது. வேணும்னா எடிட்டர் வேலை தர்றோம்’னு சொன்னாங்க. `நீங்க கேமரா தரலைன்னா என்ன என் கையில மொபைல் இருக்கு... இதை வெச்சே என்னை நான் நிரூபிப்பேன்'னு மனசுக்குள்ள ஒரு வெறி வந்துச்சு’’ என்கிற வளர்மதியின் வளர்ச்சி அங்கிருந்து அசுர வேகம் எடுத்திருக்கிறது.

`‘யூடியூப் சேனல் ஆரம்பிச்சேன்.போட்டோ கிராபி பத்தி இன்னும் நிறைய படிச்சு தெரிஞ்சுகிட்டு நான் கத்துக்கிட்டதை யூடியூப் வீடியோவா பகிர்ந்தேன். பெருசா சக்சஸ் ஆகலை. துணி துவைக்கிறது, பல் துலக்குற துன்னு நாம டெய்லி யூஸ் பண்ற சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் மொபைல் லயே கிரியேட்டிவ்வா படம்பிடிச்சேன். அதை என் சகோதரிகள் உதவியோட மேக்கிங் வீடியோவாவும் இன்ஸ்டாவுல ரீல்ஸ் வெளியிட் டேன். அதுக்கு செம்ம ரெஸ்பான்ஸ்... அதைப் பார்த்துட்டு அமேஸான் மாதிரியான வெப் சைட்ல பிசினஸ் பண்ற சின்னச் சின்ன கம்பெனிங்க என்னை கான்டாக்ட் பண்ணி, `உங்க வொர்க் ரொம்ப நல்லா இருக்கு. எங் களுக்கு எங்க புராடக்ட்ஸை போட்டோ ஷூட் பண்ணித் தர முடியுமா?ன்னு கேட் டாங்க. ‘அப்போதான் எனக்கு புராடக்ட் போட்டோ ஷூட்’னு தனியா ஒரு விஷயம் இருக்குறதே தெரிய வந்துச்சு.

“என் கையில கேமரா தரத் தயங்கினவங்க இன்னிக்கு ஆச்சர்யமா பார்க்குறாங்க!”
“என் கையில கேமரா தரத் தயங்கினவங்க இன்னிக்கு ஆச்சர்யமா பார்க்குறாங்க!”
“என் கையில கேமரா தரத் தயங்கினவங்க இன்னிக்கு ஆச்சர்யமா பார்க்குறாங்க!”
“என் கையில கேமரா தரத் தயங்கினவங்க இன்னிக்கு ஆச்சர்யமா பார்க்குறாங்க!”
“என் கையில கேமரா தரத் தயங்கினவங்க இன்னிக்கு ஆச்சர்யமா பார்க்குறாங்க!”
“என் கையில கேமரா தரத் தயங்கினவங்க இன்னிக்கு ஆச்சர்யமா பார்க்குறாங்க!”
“என் கையில கேமரா தரத் தயங்கினவங்க இன்னிக்கு ஆச்சர்யமா பார்க்குறாங்க!”

முதல்ல ஒரு சோப் கம்பெனிக்கு ஷூட் பண்ணிக் கொடுத்தேன். 6,000 ரூபாய் தந்தாங்க. மொபைல் போட்டோகிராபியில இவ்வளவு சம்பாதிக்க முடியுமான்னு ஆச்சர்யமா இருந்துச்சு” என்று சொல்லும் வளர்மதி, கடந்த ஏழு மாதங்களில் அந்தப் பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங் களுக்கு செல்போனை வைத்தே `புராடக்ட் போட்டோகிராபி’ செய்து கொடுத்திருக்கிறார். 500, 1000 ரூபாயில் ஆரம்பித்து தற்போது பல ஆயிரங்களில் புராஜக்ட் எடுக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் வளர்மதி.

`` எந்த புராடக்ட்டை ஷூட் பண்ணணுமோ அதை கொரியர்ல அனுப்பிருவாங்க. வீட்லயே வெச்சு ஷூட் பண்ணி எடிட் பண்ணி மெயில் பண்ணிருவேன். வீட்ல இருந்தே மாசம் 15,000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கேன். `நான் பயந்த மாதிரி இல்லை. நீ நிச்சயமா நல்லா வருவ. நீ ஸ்டூடியோ வைக்கிறதுக்கு நான் ஹெல்ப் பண்றேன்’னு அப்பா சொன்னபோது ஏதோ பெருசா சாதிச்ச சந்தோஷம். என் கையில கேமரா தரத் தயங்கினவங்க இன்னிக்கு ஆச்சர்யமா பார்க்கு றாங்க. சீக்கிரமே பெரியளவுல ஸ்டூடியோ ஓப்பன் பண்ணணும். புராடக்ட் போட்டோ கிராபியில பெரிய ஆளாகணும்’’ - லட்சியம் சொல்லி முடிக்கும் வளர்மதியின் வார்த்தை களில் அவ்வளவு உறுதி.