Published:Updated:

இது புதுசு - சீக்கிய டர்பன் ஹெல்மெட்; குழந்தைகளுக்காக வடிவமைத்து கவனம் ஈர்த்த அம்மா!

சீக்கிய டர்பன் ஹெல்மெட்
News
சீக்கிய டர்பன் ஹெல்மெட்

எந்த இடத்திலும் டர்பனுக்கு ஏற்ற வகையில் ஹெல்மெட் கிடைக்கவில்லை. இறுதியாக இவரே தன் மகன்களுக்காக டர்பன் ஹெல்மெட்டை வடிவமைத்துள்ளார்.

Published:Updated:

இது புதுசு - சீக்கிய டர்பன் ஹெல்மெட்; குழந்தைகளுக்காக வடிவமைத்து கவனம் ஈர்த்த அம்மா!

எந்த இடத்திலும் டர்பனுக்கு ஏற்ற வகையில் ஹெல்மெட் கிடைக்கவில்லை. இறுதியாக இவரே தன் மகன்களுக்காக டர்பன் ஹெல்மெட்டை வடிவமைத்துள்ளார்.

சீக்கிய டர்பன் ஹெல்மெட்
News
சீக்கிய டர்பன் ஹெல்மெட்

`தலைக்கவசம் உயிர்க் கவசம்’ என்பதை நாம் அறிவோம். பெரியவர்களுக்கான தலைக்கவசத்தையே நாம் பார்த்திருப்போம். குழந்தைகளின் பாதுகாப்பும் முக்கியம் என்று கூறினாலும், அவர்களுக்கேற்ற வகையில் தலைக்கவசம் இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான்.

Sikh helmet
Sikh helmet

கனடாவைச் சேர்ந்த சீக்கிய பெண் டினா சிங். இவர் தனது குழந்தைகளுக்கு ஹெல்மெட் தேடி கடை கடையாகச் சென்றுள்ளார். எந்த இடத்திலும் சீக்கிய டர்பனுக்கு ஏற்ற வகையில் ஹெல்மெட் கிடைக்கவில்லை. இறுதியாக இவரே தன்னுடைய மகன்களுக்காக ஹெல்மெட்டை வடிவமைத்துள்ளார்.

இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``என் குழந்தைகளுக்கு ஸ்போர்ட்ஸ் ஹெல்மெட்களில் பாதுகாப்பு இல்லை என்று அறிந்ததும் நான் கவலை அடைந்தேன். குழந்தைகளுக்குத் தாயாக அவர்களுக்கு நம்பிக்கையானதைச் செய்ய முடிவெடுத்தேன். இந்த யோசனை, என் வாழ்க்கையை மாற்றிவிட்டது.   

சீக்கிய டர்பன் கொண்ட உங்கள் குழந்தைகளுக்கு எப்படி ஹெல்மெட் பொருத்துகிறீர்கள்..? இங்கே www.sikhhelmets.com என்ற வலைத்தள பக்கத்தைப் பாருங்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்த ஹெல்மெட்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு 2023-ல் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இவருடைய பதிவு தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.