
லாபம் இல்லைன்னாலும், அன்றாட செலவுக்கு காசு கிடைக் குதுன்னு அம்மா தொடர்ந்து இட்லி வியாபாரம் பண்ணிட்டு இருந்தாங்க.
“பாட்டி, அம்மா, இப்போ நான்... இப்படி மூணு தலைமுறையா இந்தக் கிரா மத்துல இட்லி வியாபாரம் பண்றோம். இந்த ஊரையும், மக்களையும் விட்டுட்டு வேறெங்கேயும் போனது இல்ல. பசியோட வர்ற பிள்ளைக வயிறு நிறையச் செய்யுறதுல மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு” நெகிழ்ந்து பேசுகிறார் விழுப்புரம் மாவட்டம், பனையபுரத்தைச் சேர்ந்த சாந்தி.
பனையபுரம் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இட்லி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இவர்களின் கடையில் இட்லியின் விலை ஒரு ரூபாய் மட்டுமே. சாம்பார், சட்னியுடன் ஆவி பறக்கப் பரிமாறப்படும் இட்லியை, வாங்கிச் சாப்பிட மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பம்பரமாகச் சுழன்று வியாபாரம் செய்த படியே நம்மிடம் பேச ஆரம்பித்தார் சாந்தி.

“மூணு தலைமுறையா இதே இடத்தில வியாபாரம் பண்றோம். எங்கப் பாட்டி காலத்துல ஆட்டுக்கல்லுலதான் மாவு அரைப் பாங்க. கரன்ட் பில் கிடையாது, அரிசி விலை கம்மி, அதனால காலணாவுக்கு இட்லி வித் தாங்க. பாட்டிக்கு அப்புறம் அம்மா காலத்துல, ஒரு இட்லி விலை ஐம்பது பைசா.
லாபம் இல்லைன்னாலும், அன்றாட செலவுக்கு காசு கிடைக் குதுன்னு அம்மா தொடர்ந்து இட்லி வியாபாரம் பண்ணிட்டு இருந்தாங்க. என்னை வெளியூர்ல கட்டிக்கொடுத்தாங்க. எனக்கு மக பிறந்து, ஆறு மாசத்துல வீட்டுக்காரர் தவறிட்டாரு. மகளைக் கூட்டிக்கிட்டு அம்மா வீட்டுக்கே வந்துட்டேன். அம்மா கூட சேர்ந்து இட்லி வியாபாரம் பண்ண ஆரம்பிச்சேன்.

விலைவாசி ஏறினதால இட்லி விலையை ஒரு ரூபாய் ஆக்கி னோம். அம்மாவுக்கும் வயசா யிடுச்சு, விலைவாசியும் நாளுக்கு நாள் அதிகமாயிட்டே போகுது... வியாபாரத்தை விட்டுரலாம்னு சொன்னா, ‘நான் உசுரோட இருக்குறவரை பிள்ளைகளுக்குப் பசி ஆத்துவேன். லாபமே இல்லைன்னாலும் பரவா யில்லை’னு சொன்னாங்க அம்மா.
எங்க ஊர் சத்துணவுக் கூடத் துல எனக்கு வேலை கிடைச்சுது. என் ஒரே மகளையும் என் தம்பிக்கே கட்டிக்கொடுத்துட் டேன். எனக்கு வேற செலவுகள் கிடையாது. அதனால என் வருமானத்துல பாதியை இட்லி வியாபாரத்துக்குச் செலவு பண்ண ஆரம்பிச்சேன்” - இட்லி வியாபாரத்துக்கும் தனக்குமான பந்தம் பகிர்ந்தபடி தொடர்கிறார் சாந்தி.
‘`நாலு வருஷத்துக்கு முன்னாடி அம்மா தவறினப்போ, ஊர்க் காரங்க எல்லாரும் இட்லி வியா பாரத்தை விட்டுருனு சொன் னாங்க. எங்க வீட்டைத் தேடி வர்ற மனுஷங்களை நான் ஏமாத்த விரும்பல. அதனால என் ஆயுசுக்கும் ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்கணும்னு முடிவு பண்ணினேன். இட்லிக்கான உளுந்தை விவசாயிகள்கிட்ட இருந்து நேரடியா வாங்குறேன்.

தினமும் காலையில நாலு மணிக்கு எந்திரிச்சு சாம்பார், சட்னி தயார் பண்ணுவேன். ஏழு மணிக்கு ஆரம்பிக்கிற இட்லி வியாபாரம் ஒன்பது மணி வரை போகும். கொரோனாவால கடந்த ரெண்டு வருஷமாவே பள்ளிக் கூடத்துல சமைக்குற வேலை இல்ல. பள்ளிக்கூட நேரம் போக, மாவு அரைக்கிறது, பாத்திரம் கழுவுறதுன்னு எல்லா வேலைகளையும் தனியாதான் பண்றேன்.
எனக்கும் 55 வயசுக்கு மேல ஆகுது. ஆனாலும், ஒரு நாளும் கடைக்கு லீவு விட்டது கிடையாது. வயித்துப் பொழப்புக்காக ஆரம்பிச்ச தொழில் இப்ப சேவையா மாறிருச்சு. என்னைத் தேடி வர்றவங்க வயிறு நிறைய சாப் பிட்டுட்டு, வாய் நிறைய வாழ்த்துறதைவிடவா காசு பணம் முக்கியம்’’ - படபடவென பேசிக்கொண்டே, பரபரவென அடுத்தடுத்த வேலைகளைத் தொடர்கிறார் சாந்தி.