லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

“வாழப்போறது கொஞ்ச காலம்... சந்தோஷமா கடப்போமே!” - தலசீமியாவை ஜெயிக்கும் பரமு

பரமு
பிரீமியம் ஸ்டோரி
News
பரமு

இந்தப் பிரச்னைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை பண்ணலாம். சர்ஜரி பண்ணாலும் பிழைக்கிறதுக்கு வாய்ப்பு கம்மின்னு சொன்னாங்க.

“எதிர்காலம் பற்றி பெரிய திட்டம்லாம் இல்ல. ஏன்னா நான் எந்தத் திட்டம் போட்டாலும் அது ஃபிளாப் ஆயிடும்” கலகலத்துப் பேசுகிறார் திருச்சியைச் சேர்ந்த யூடியூபர் பரமேஸ்வரி. வழக்கமான யூடியூபர்களிடமிருந்து சற்றே மாறு பட்ட கன்டென்ட் கிரியேட்டர்.

பிறவியிலிருந்தே `தலசீமியா' நோயால் பாதிக்கப்பட்டவர் பரமேஸ்வரி. ரத்தத்தில் தேவையான அளவைவிடக் குறைவாக ஹீமோ குளோபின் இருப்பதுதான் தலசீமியா. சிவப்பணுக்கள் விரைவாகச் சிதைந்து போவதே இதற்கு காரணம். தல சீமியாவால் பாதிக்கப்பட்டவர் களுக்கு கடுமையான ரத்தசோகை இருக்கும் என்பதால் தொடர்ந்து ரத்தம் செலுத்த வேண்டும்.

“என் அம்மா அப்பாவுக்கு முதல்ல ஒரு ஆண் குழந்தை பிறந்து மூணே மாசத்துல இறந்துடுச்சு. அடுத்து எங்க அக்கா ஆரோக்கியமா பிறந்தாங்க. மூணாவதா பிறந்த எனக்கு மூணு மாசத்துலயே காய்ச்சல், யூரின் போறப்போ எரிச்சலுணர்வு இருந் திருக்கு. செக் பண்ணதுல ஹீமோ குளோபின் அளவு ரொம்ப குறைவா இருந்ததாம். எங்கப்பாவோட தம்பி ஒன்பது வயசுலயே இறந்துட்டாராம். அவருக்கு தலசீமியா இருந்திருக்கு. மரபணு சார்ந்த குறைபாடுன்றதால பரம்பரையா அது எனக்கும் வந்திருக் குன்னு பிறகுதான் கண்டுபிடிச்சாங்க. அப்போலேருந்து இப்ப வரைக்கும் எனக்கு ரத்தம் ஏத்திட்டிருக்கோம்” எனும் பரமேஸ்வரி 23 வயதில் மூன்று பெரிய அறுவை சிகிச்சைகளைக் கடந்துள்ளார்.

தம்பி, தங்கைகளுடன்...
தம்பி, தங்கைகளுடன்...

“தொடர்ந்து ரத்தம் ஏத்துறதால 12 வயசுல இடுப்பு மூட்டு எலும்புக்குள்ள சீழ் வெச்சிருச்சுருச்சு. மேஜர் ஆப ரேஷன் பண்ணி சீழை வெளியே எடுத் தாங்க. கிட்டத்தட்ட ஒன்பது மாசம் படுக்கையில இருந்தேன். நடுவுல வலிப்பு வந்துச்சு, ஒருநாள் கோமாவுல இருந்தேன். பிழைக்கமாட்டேன்னுதான் சொன்னாங்க. ஆனாலும் எழுந்து வந் துட்டேன். ரத்தம் ஏத்தி ஏத்தி மண்ணீரல் ரொம்ப பெருசாகிடுச்சு. நடக்க முடியாது, மூச்சுவிடவே சிரமமா இருக்கும். அதனால 18 வயசுல ஆப ரேஷன் பண்ணி மண்ணீரலை எடுத் துட்டாங்க.

நான் பிறந்தப்பவே இதயத்துல துவாரம் இருந்துருக்கு. அப்போ தலசீமியாவால ரொம்ப பாதிக்கப் பட்டிருந்தால, சர்ஜரி பண்ணினா உயிர் பிழைக்கிறதுக்கான வாய்ப்பு குறைவுன்னு மருத்துவர்கள் சொல்லிட்டாங்க. சர்ஜரி பண்ண லைன்னா 30 வயசு வரை தான் உயிரோட இருப் பேன்னு சொல்லிட்டாங்க. அதனால ரிஸ்க் எடுத்து சமீபத்துலதான் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செஞ்சுகிட்டேன். இப்போ ஜம்முன்னு வந்துட்டேன் பாருங்க” பாசிட்டிவ்வாக பேசுகிறார் பரமு.

“இந்தப் பிரச்னைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை பண்ணலாம். சர்ஜரி பண்ணாலும் பிழைக்கிறதுக்கு வாய்ப்பு கம்மின்னு சொன்னாங்க. எங்கம்மாவும் என் பொண்ணு இருக்கிறவரை எங்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்துட்டுப் போகட்டும்னு சொல்லிட்டாங்க. இப்ப அந்த ட்ரீட்மென்ட் ரொம்பவே அட்வான்ஸ்டா மாறிடுச்சு. ஆனா எனக்கு அதைப் பண்றதுக்கான வயசு கடந்துருச்சு.

“வாழப்போறது கொஞ்ச காலம்... சந்தோஷமா கடப்போமே!” - தலசீமியாவை ஜெயிக்கும் பரமு

ரத்தம் ஏத்துறதால உடம்புல அதிகமா இரும்புச் சத்து சேரும். அதுக்காக சில மாத்திரைகள் எடுக் கணும். அதனால கண்கள் மஞ்சளாகிறது, சிறுநீர் மஞ்சள் நிறத்துல போறதுன்னு சின்னச் சின்ன பக்கவிளைவுகள் வரும். எலும்பு பலவீனத்துக்கும் மாத்திரைகள் எடுத்துக்க றேன். ஆறு மாசத்துக்கு ஒருமுறை இதயம், கல் லீரல்னு எம்.ஆர்.ஐ பரி சோதனைகள் செஞ்சு பார்க் கணும். ஏதாவது புதுசு புதுசா பிரச்னைகள் வந் துட்டே இருக்கும். அதனால தொடர் கண்காணிப்புலயே இருக்கணும்.

அடிக்கடி ரத்தம் ஏத் தணும்கிறதால ஸ்கூலுக்கு அதிக லீவ் போட வேண்டி வந்துச்சு. அதனால ஒன்பதாவதோட படிப்பை நிறுத்திட்டேன். ஒரு வருஷம் சும்மா இருந்தேன். என்னால வெளில போய் மத்தவங்க மாதிரி ஓடிஆடி எதுவும் பண்ண முடியாது. அதனால `பரமு தல்ஸ்’ (paramu thals) என்ற பெயர்ல யூடியூப் சேனல் ஆரம்பிச்சு என்னோட ஹெல்த் சம்பந்தமான ‘விளாக்' (Vlog) பண்ணுவோம்னு முடிவெடுத்தேன். சமூகத் துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தின மாதிரியும் இருக்குமே” என்றவர் தொலைநிலைக் கல்வி யில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தற்போது பி.காம் படித்து வருகிறார்.

“ஒருகட்டத்துல மருத்துவமனைக்குப் போகாத நாள்கள்ல நான் எப்படி சந்தோஷமா இருக்கேன்னு வீடியோ போட ஆரம்பிச்சேன். ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்காங்க. ராத்திரி தூங்கும்போது நாளைக்கு காலைல எழுந்து வீடியோ எடுக் கணும், உடனே எடிட் பண்ணி வீடியோ போட் டுறணும்னு நினைச்சிட்டுப் படுப்பேன். காலையில கண்ணு முழிக்கும்போதே மூட்டு வலிக்கும், எழுந் திருக்கவே முடியாது. மன சும் சோர்ந்துடும். அதுக்கப் புறம் ஒரு வாரம் வீடியோவே போட முடியாது. சேனலை தொடர்ந்து பார்க்குறவங்க வீடியோ போடுங்க வீடியோ போடுங்கன்னு உற்சாகப் படுத்துறதுதான் அடுத்தடுத்து ஓட வைக்குது.

குடும்பத்தினருடன்...
குடும்பத்தினருடன்...

என்னோட உயரம் நாலரை அடிதான். வீடியோவுல என்னைப் பார்த்துட்டு சிலர் உருவகேலி பண்ணுவாங்க. அவங்களே என்னோட ஹாஸ்பிட்டல் வீடியோஸ்லாம் பார்த்துட்டு கமென்ட்ல மன்னிப்பும் கேட்டி ருக்காங்க.

என்னோட உடல்நிலையினால நான் யாரையாவது சார்ந்துதான் இருக்கணும். யூடியூப் சேனல் தொடங்கினதுக்கு அப்புறம் பொருளாதார ரீதியாவாது நான் இண்டி பெண்டென்ட்டா இருக்கேன்றதுல எனக்கு சந்தோஷம்'' என்பவர் அவரே வீடியோ எடுத்து, எடிட் செய்து வெளியிடுகிறார்.

“ ‘இன்னும் கொஞ்ச நாள்ல இந்த ட்ரீட்மென்ட் வந்துரும், அந்த ட்ரீட்மென்ட் வந்திரும்னு, உனக்கு சீக்கிரம் சரியாகிடும்’னு அப்பா சொல்லிட்டே இருப்பாரு. ஆனா அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும் அதெல்லாம் வரப்போறதே இல்லைன்னு. அம்மா, நான் வருத்தப்பட்டா ஹாஸ்பிட்டல்ல தீவிர நோயாளிகள் இருக்குற வார்டுக்கு கூட்டிட்டுப் போய் ‘உன்னைவிட கஷ்டப் படுறவங்க எத்தனை பேரு இருக்காங்க. நீ எவ்ளோ நல்லா இருக்கன்னு யோசிச் சிக்கோ’ன்னு சொல்லுவாங்க. இந்த பாசிட்டி விட்டிதான் என் வாழ்க்கையை அழகாக்குது. வாழப்போற கொஞ்சகாலத்தை சந்தோஷமா கடப்போமே...” புன்னகையுடன் நிறைவு செய்தார் பாசிட்டிவ் மனிதி!