Published:Updated:

மிஸ்டர் கழுகு: முறுக்குக் கம்பி டெண்டர்... முறுக்கிக்கொண்ட அமைச்சர்... உள்ளே புகுந்த ஐ.டி!

உதயநிதி ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
உதயநிதி ஸ்டாலின்

‘‘என்ன ஓய்... என் மீது உமக்கு என்ன கோபம்? சென்ற இதழ் ‘மிஸ்டர் கழுகு’ பக்கத்தில் எனது படத்தையே வைக்காமல் விட்டுவிட்டீரே!” என்று செல்லமாகக் கோபித்தப்படியே உள்ளே நுழைந்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: முறுக்குக் கம்பி டெண்டர்... முறுக்கிக்கொண்ட அமைச்சர்... உள்ளே புகுந்த ஐ.டி!

‘‘என்ன ஓய்... என் மீது உமக்கு என்ன கோபம்? சென்ற இதழ் ‘மிஸ்டர் கழுகு’ பக்கத்தில் எனது படத்தையே வைக்காமல் விட்டுவிட்டீரே!” என்று செல்லமாகக் கோபித்தப்படியே உள்ளே நுழைந்தார் கழுகார்.

Published:Updated:
உதயநிதி ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
உதயநிதி ஸ்டாலின்

அவரைச் சமாதானப்படுத்தும் வரையில் காத்திருக்காமல், கடமையே கண்ணாகச் செய்திகளை வாசிக்கத் தொடங்கினார். ‘‘வேலுார் தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஸ்டாலினும் உதயநிதியும் தீவிரமாகக் களப்பணியில் இருக்கின்றனர். எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தீவிரமாக இருக்கிறார்’’ என்றார்.

‘‘தி.மு.க-வின் பிரசாரத்தில் அனல் பறக்கிறதே!’’

‘‘ஸ்டாலின், உதயநிதி இருவருமே வேலூரில்தான் தீவிர கவனம் செலுத்துகின்றனர். துர்கா ஸ்டாலின்தான் சாமி கும்பிட்டு நல்ல நாள், நேரம் பார்த்து, பொட்டு வைத்து மகனை அனுப்பிவைத்திருக்கிறார். உதயநிதி பிரசாரத்துக்கு அங்கே செம ரெஸ்பான்ஸ்!’’

“அதெல்லாம் இருக்கட்டும். வைட்டமின் ‘ப’ நிலவரம் எப்படி?’’

‘‘அதுதான் வெற்றியைத் தீர்மானிக்கும்போலிருக்கிறது. ஏற்கெனவே தி.மு.க தரப்பில் ஓட்டுக்கு ‘இருநூறு’ தடவை ‘கவனித்து’விட்டார்கள். இதுவே அ.தி.மு.க தரப்பில் ஐந்நூறு. இப்போது தி.மு.க தரப்பில் இன்னும் இருநூறு ‘கவனிக்கலாமா’ என்று ஆலோசனை நடக்கிறதாம். அப்படி கவனித்தால், அ.தி.மு.க தரப்பிலும் மற்றுமொரு கவனிப்பு இருக்குமாம்!’’

வேலூர் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின்
வேலூர் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின்

‘‘பி.ஜே.பி என்ன நினைக்கிறதாம்?’’

‘‘ `வேலூர் தேர்தல் முடிவைப் பொறுத்தே, அ.தி.மு.க தலைமை குறித்து பி.ஜே.பி முக்கிய முடிவு எடுக்கும்’ என்று கடந்த இதழில் நான் சொன்னது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. தவிர, ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பில் திளைக்கும் சில அமைச்சர்களிடம் அதிரடி காட்டி, பி.ஜே.பி-யின் கிளீன் இமேஜைத் தக்கவைப்பதற்கான முயற்சியும் தொடங்கப்போகிறதாம்!’’

‘‘ஓஹோ!’’

‘‘சமீபகாலமாக, அ.தி.மு.க அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி அதிக அளவு தகவல்கள் கசியத் தொடங்கியிருக்கின்றன. இனியும் வேடிக்கை பார்த்தால் நன்றாக இருக்காது என்ற முடிவுக்கு பி.ஜே.பி தலைமை வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஜூலை 26-ம் தேதி வருமானவரித் துறை, சென்னை சூளைமேடு, ஸ்ரீபெரும்புதூர், ஆந்திரம் ஆகிய இடங்களில் உள்ள சக்தி ஸ்டீல் என்கிற நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்கள், ஆலை ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. இதில் கட்டுக்கட்டாக ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன!’’

‘‘ம்!’’

‘‘அரசு ஒப்பந்தப் பணிகளுக்கு ‘செயில்’ நிறுவனத்தின் விதிப்படிதான் இரும்பு முறுக்குக் கம்பிகளைக் கொள்முதல் செய்யவேண்டும். ஆனால், இந்த விதிக்கு முரணாக 3,000 ரூபாய் அதிகம் கொடுத்து, ஒரு டன் 43,000 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாம். சக்தி ஸ்டீல் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர், ஆளுங்கட்சி உச்சப்புள்ளியின் வாரிசுக்கு நெருக்கமானவராம். மத்திய, மாநில அரசுகளின் திட்டங் களுக்குத் தேவைப்படும் இரும்புக் கம்பிகளை வருடத்துக்கு ஒரு லட்சம் டன்னுக்கு அதிகமாக அந்த நிறுவனம் சப்ளை செய்திருக் கிறது. அதன் பின்னணியில்தான் இந்த ரெய்டு என்கிறார்கள்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘அடேங்கப்பா!’’

‘‘கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருக்கும், இந்த நிறுவனத்துக்கும் இடையே ஏதோ ஒன்றில் பிரச்னை ஆகியிருக்கிறது. அதனால் கோவை, திருப்பூர் மாநகராட்சிகளுக்கு ‘சக்தியில் இருந்து கொள்முதல் செய்யாதீர்கள்’ என்று உத்தரவு போடப்பட்டதாம். அதற்குப் பதிலாக, காரைக்காலைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் கோபம் தணியாத அமைச்சர் தரப்பு வருமானவரித் துறைக்குப் போட்டுக்கொடுத்து விட, சக்தி நிறுவனத்தின் மீது ரெய்டு பாய்ந்திருக்கிறது என்கிறார்கள். தமிழக அரசின் ஒப்பந்தப் பணிகளுக்கு இரும்புக் கம்பிகளை சப்ளை செய்யும் மற்ற ஆறு நிறுவனங்கள் மீதும் வருமானவரித் துறையின் பார்வை திரும்பியிருக்கிறது.’’

மிஸ்டர் கழுகு: முறுக்குக் கம்பி டெண்டர்... முறுக்கிக்கொண்ட அமைச்சர்... உள்ளே புகுந்த ஐ.டி!

‘‘இதற்கு எதிர்வினை ஏதுமில்லையா?’’

‘‘எப்படி இல்லாமல்போகும்? அமைச்சர் தரப்பு புதிதாக ஆர்டர் கொடுத்துள்ள நிறுவனம், தி.மு.க பின்னணியுள்ள கோயம்புத்தூர்க்காரருக்குச் சொந்த மானதாம். இந்த விவரத்தையும், அந்த அமைச்சருக்குச் சொந்தமாக எத்தனை பினாமி நிறுவனங்கள் இருக்கின்றன, அவற்றில் நடக்கும் ஊழல், முறைகேடுகள் என்னென்ன என்று விலாவாரியாக எடுத்து தமிழக பி.ஜே.பி புள்ளி ஒருவர் மூலமாக டெல்லிக்கு அனுப்பும் வேலை நடக்கிறதாம்.’’

‘‘அடுத்தது?’’

‘‘கருணாநிதி ஆட்சிக்காலத்தில் ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்’ என்ற பெயரில் படித்த ஏழைப்பெண்களுக்கு நிதி உதவியோடு நான்கு கிராம் தங்கம் வழங்கியதை, ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ‘தாலிக்குத் தங்கம்’ என்ற பெயரிட்டு செயல்படுத்தினர். அந்தத் திட்டத்தின்கீழ் தற்போது எட்டு கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக டெண்டர் எடுக்கும் நிறுவனங் களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஓர் அமைச்சரின் தரப்பு, இரட்டை இலக்கத்தில் பெரும்தொகையைக் கேட்டதாம். ‘கட்டுப் படியாகாதே!’ என கையைப் பிசைந்தவர் களிடம், ‘தாலியில் செம்பைக் கலந்து விடுங்கப்பா. யாருக்கு என்ன தெரியப் போகுது?’ என தடாலடியாகக் கூறியதாம் அமைச்சர் தரப்பு. பதறிப்போன டெண்டர் பார்ட்டிகள், ‘ஆளைவிட்டால் போதும்’ எனப் பறந்துவிட்டார்களாம்’’ என்ற கழுகார், ‘‘தமிழும் சம்ஸ்கிருதமும் இரு கண்கள் போன்றவை என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரான மாஃபா பாண்டியராஜன் பேசியது பலத்த சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது பார்த்தீரா?’’ என்றபடி சிறகுகளை விரித்தார்.