Published:Updated:

மிஸ்டர் கழுகு: கராத்தே வீசிய அஸ்திரம்... ஆடிப்போன ஸ்டாலின்!

Vijayabaskar, edappadi palanisamy
பிரீமியம் ஸ்டோரி
News
Vijayabaskar, edappadi palanisamy

‘‘அவசர வேலை இருக்கிறது. சுருக்கமாகப் பேசிவிட்டுச் செல்கிறேன்’’ என்றபடியே உள்ளே நுழைந்தார் கழுகார். அவரிடம், ‘‘தி.மு.க எம்.பி-க்களை, இனி புத்தகங்களோடுதான் பார்க்க முடியும் போலிருக்கிறது?’’ என்ற கேள்வியை வீசினோம்.

மிஸ்டர் கழுகு: கராத்தே வீசிய அஸ்திரம்... ஆடிப்போன ஸ்டாலின்!

‘‘அவசர வேலை இருக்கிறது. சுருக்கமாகப் பேசிவிட்டுச் செல்கிறேன்’’ என்றபடியே உள்ளே நுழைந்தார் கழுகார். அவரிடம், ‘‘தி.மு.க எம்.பி-க்களை, இனி புத்தகங்களோடுதான் பார்க்க முடியும் போலிருக்கிறது?’’ என்ற கேள்வியை வீசினோம்.

Published:Updated:
Vijayabaskar, edappadi palanisamy
பிரீமியம் ஸ்டோரி
News
Vijayabaskar, edappadi palanisamy

‘‘ஓ... தி.மு.க எம்.பி-க்கள் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயத்தைப் பற்றி கேட்கி றீரோ? கட்சித் தலைவர் ஸ்டாலின், எம்.பி-களிடம் ‘லைப்ரரிக்கு அதிகம் செல்லுங்கள். நிறைய படித்து குறிப்பு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதற்குப் பிறகே நாடாளுமன்றத்தில் பேசுங்கள்’ என்று அறிவுரை சொல்லியுள்ளார். அத்துடன், ‘கிராமம் தோறும் செல்லுங்கள். மக்களின் குறைகளைக் கேட்டறியுங்கள். கட்சி நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்’ என்றெல்லாம் அட்வைஸ் செய்துள்ளார். டி.ஆர்.பாலு, சில வருத்தங்களை தனிப்பட்ட முறையில் ஸ்டாலினிடம் பகிர்ந் துள்ளார். ‘பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று ஸ்டாலின் சொல்லிவிட்டாராம்.’’

ஸ்டாலின், கராத்தே தியாகராஜன்
ஸ்டாலின், கராத்தே தியாகராஜன்

‘‘முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளாரே!’’

‘‘ ‘நான் முதலீட்டாளர்களைச் சந்திக்கச் செல்கிறேன். ஸ்டாலின் எதற்காக வெளிநாடு செல்கிறார்’ என்று முதல்வர் கேட்டது, ஸ்டாலினுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்திவிட்டதாம். அதனால்தான், நீண்டநெடிய அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டார். அதற்கு அ.தி.மு.க தரப்பிலிருந்து பதில் வரும் என எதிர்பார்த்தால், கராத்தே தியாகராஜனிடமிருந்து வெளியானது. அதை ஸ்டாலினே எதிர்பார்க்கவில்லையாம்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லண்டனில் எடப்பாடியுடன்  விஜயபாஸ்கர்
லண்டனில் எடப்பாடியுடன் விஜயபாஸ்கர்

‘‘சொல்லும்!’’

‘‘ஸ்டாலின் தனது அறிக்கையில், ‘சொந்த பயணத்தை, அரசுமுறைப் பயணமாகச் செல்லும் எடப்பாடி ஒப்பிடுவது அழகா?’ என்று கேட்டிருந்தார். கராத்தே தியாகராஜன் தனது அறிக்கையில், ‘துணை முதல்வராக ஸ்டாலின் இருந்தபோது, தன் நண்பருடன் அரசு தரப்புக்கே தகவல் சொல்லாமல் பாங்காங் போனாரே’ என்று புதிய திரியைக் கொளுத்திப்போட்டார். இது அ.தி.மு.க தரப்புக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸிலிருந்து கராத்தே சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு, தொடர்ந்து தி.மு.க-வுக்கு எதிராக அஸ்திரம் ஏவிவருகிறார். அ.தி.மு.க பக்கம் அவரை இழுக்கும் வேலைகள் நடப்பதன் அறிகுறிதான் இது என்கின்றனர்.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘உற்சாகமாக வெளிநாடு கிளம்பியுள்ளாரே முதல்வர்?’’

‘‘ஜெ. பாணியில் பிரமாண்ட வரவேற்பு, காலில் விழும் வைபவம் என எடப்பாடியைக் குளிரவைத்துவிட்டனர். எடப்பாடியுடன் அவருடைய செயலாளர்கள் நான்கு பேருமே சென்றுள்ளனர். அமைச்சர்களில் விஜயபாஸ்கர் மட்டுமே சென்றுள்ளார். ஆகஸ்ட் 31-ம் தேதி அமெரிக்காவுக்கு ஒரு டீம் செல்கிறது. அதில்தான் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் செல்கின்றனர். லண்டனில் வேஷ்டி-சட்டைக்கு குட்பை சொல்லிவிட்டு, கோட்-சூட்டுடன் வலம் வருகிறார் எடப்பாடி. லண்டனில் சர்ச்சைக்குரிய முக்கிய தொழிலதிபர் ஒருவரை எடப்பாடி தனியாகச் சந்திக்கும் திட்டத்தில் இருக்கிறாராம். அப்படியொரு சந்திப்பு நடந்தால், அதை அம்பலப்படுத்த தி.மு.க தரப்பும் உளவுபார்த்து வருகிறது. முதல்வரின் பயணத்திட்டத்தில் முதலில் துபாய் இடம்பெறவில்லை. ஆனால், கடைசியாக அந்த நாடும் இடம்பெற்றுள்ளது.’’

மிஸ்டர் கழுகு: கராத்தே வீசிய அஸ்திரம்... ஆடிப்போன ஸ்டாலின்!

‘‘அப்படியா?’’

‘‘சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ பிடி இறுகுகிறதே!’’

‘‘சி.பி.ஐ விசாரணையில் அவர்களையே கதறவிடுகிறாராம் சிதம்பரம். மறுபுறம், நீதிமன்றத் தில் அமலாக்கப் பிரிவு, ‘சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கினால், இந்த வழக்கையே விசாரிக்க முடியாது’ என்று வாதிட்டுள்ளது. அவருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்படும் என்றே சொல்கிறார்கள்.’’

‘‘ம்!’’

‘‘சிதம்பரம் சிறைக்குச் செல்ல காரணம், முன்ஜாமீன் வழக்கை தள்ளுபடி செய்ததுதான். அந்தத் தீர்ப்பை வழங்கிய 48 மணி நேரத்தில் பணி ஓய்வுபெற்றுள்ளார் நீதிபதி கவுர். அவருக்கு, சட்டவிரோத பணப்பரிமாற்றத் தீர்பாயத்தின் தலைவர் பதவியை அளித்துள்ளது மத்திய அரசு. தீர்ப்புக்குக் கிடைத்த பரிசு என்று சமூக வலைதளங்களில் பொங்கிவருகிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்’’ என்ற கழுகார் சிறகை விரித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘தலையை வெட்டியிருப்பேன்!’’

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக் குடிக்காட்டில், ஆகஸ்ட் 23-ம் தேதி த.மு.மு.க நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முகமது ஷரிப், முத்தலாக் தடைச் சட்டம், காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு நீக்கம் குறித்துப் பேசும்போது, ‘‘முஸ்லிம் பெண்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், மோடி மற்றும் அமித் ஷாவின் தலையை வெட்டியிருப்பேன்’’ என்று ஆவேசமாகப் பேசினார். இந்தப் பேச்சுக்காக, பெரம்பலுார் காவல்துறையினர் அவரை கைதுசெய்துள்ளனர். கட்சியிலிருந்தும் அவரை நீக்கியுள்ளது, த.மு.மு.க!

லண்டன் கூட்டத்தில் நடந்தது என்ன?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சமீபத்தில் லண்டனில் நடந்த ‘அமைப்பாய் திரள்வோம்’ என்ற அவரின் புத்தக திறனாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அதில், அவருக்கு எதிராக சிலர் கண்டனக் குரல் எழுப்பி, பிரச்னையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் காணொலிகள் பரவின.

அதுகுறித்துப் பேசிய திருமாவளவன், ‘‘லண்டன் கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுத்திய இருவரும், தமிழகத்தில் ஈழ அரசியலை மையமாகக்கொண்ட கட்சியின் பின்னணி கொண்டவர்கள் என்கின்றனர். நான் எதற்காக காங்கிரஸுடன் கூட்டணி வைத்தேன் என அவர்கள் மிக மூர்க்கமாகக் கேட்டதாலேயே, அந்த உண்மையைச் சொல்ல நேரிட்டது. ஆம்... அண்ணன் பிரபாகரனின் ஆலோசனையின் பேரில்தான் நான் அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தேன். லண்டன் கூட்டத் தில் நான் ஏதோ நிதி கேட்டதாக வதந்தி பரப்புகின்றனர். என்மீது சுமத்தப்படும் எத்தனையோ பழிகளில் இதுவு‌ம் ஒன்று என கடந்துசெல்கிறேன்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism