Published:Updated:

300 கிலோ தங்கம்; கவனிக்க 8 நர்ஸ்கள் இரட்டை பேரக்குழந்தைகளை வரவேற்று அம்பானி சிறப்புப் பூஜை

பேரக்குழந்தைகளுக்கு வரவேற்பு
News
பேரக்குழந்தைகளுக்கு வரவேற்பு

திருப்பதி பாலாஜி கோயில் உட்பட முக்கிய கோயில்களில் இருந்தும் பிரசாதம் வரவழைக்கப்பட்டுள்ளது.

Published:Updated:

300 கிலோ தங்கம்; கவனிக்க 8 நர்ஸ்கள் இரட்டை பேரக்குழந்தைகளை வரவேற்று அம்பானி சிறப்புப் பூஜை

திருப்பதி பாலாஜி கோயில் உட்பட முக்கிய கோயில்களில் இருந்தும் பிரசாதம் வரவழைக்கப்பட்டுள்ளது.

பேரக்குழந்தைகளுக்கு வரவேற்பு
News
பேரக்குழந்தைகளுக்கு வரவேற்பு

நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானிக்கு கடந்த நவம்பர் மாதம் 19ம் தேதி அமெரிக்காவில் இரட்டை குழந்தைகள் பிறந்தனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்த இரட்டை குழந்தைகள் மற்றும் ஈஷா அம்பானி, அவரின் கணவர் ஆனந்த் பிரமல் நேற்று சிறப்பு விமானத்தில் மும்பை வந்து சேர்ந்தனர். அவர்களை விமான நிலையத்தில் முகேஷ் அம்பானி தன் மகன் ஆகாஷ் அம்பானியுடன் சென்று வரவேற்றார்.

ஈஷா-ஆனந்த்
ஈஷா-ஆனந்த்

இரட்டை குழந்தைகளை முகேஷ் அம்பானியும், அவரின் மனைவியும் விமான நிலையத்தில் இருந்து காருக்கு அழைத்து வந்தனர். அவர்களை அமெரிக்காவிலிருந்து பத்திரமாக மும்பை அழைத்து வர மும்பையிலிருந்து பயிற்சி பெற்ற சிறப்பு டாக்டர்கள் குழு அமெரிக்கா சென்றிருந்தது. அதோடு அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற குழந்தைகள் நல மருத்துவர் கிப்சன் மற்றும் அமெரிக்க டாக்டர்கள் குழுவும் குழந்தைகளின் முதல் விமானப் பயணத்தில் உடன் வந்திருந்தனர்.

மேலும் அதே விமானத்தில் குழந்தைகளை கவனித்துக்கொள்ள பயிற்சி பெற்ற 8 நர்ஸ்கள் மற்றும் ஆயாக்களும் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்டனர். மும்பை ஒர்லியில் உள்ள ஈஷாவின் இல்லமான கருணா சிந்து கட்டடத்தில் குழந்தைகளுக்கு சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதோடு இன்று திருப்பதி பாலாஜி கோயில் உட்பட நாடு முழுவதும் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள மதகுருக்கள், சாமியார்கள் முன்னிலையில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அனைவரும் குழந்தைகளை ஆசிர்வதிக்கின்றனர். இதில் சாப்பாடு தயார் செய்வதற்காக உலகம் முழுவதும் இருந்து சமையல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்

திருப்பதி பாலாஜி கோயில் உட்பட முக்கிய கோயில்களில் இருந்தும் பிரசாதம் வரவழைக்கப்பட்டுள்ளது. இதில் முகேஷ் அம்பானி தனது பேரக்குழந்தைகளுக்கு 300 கிலோ தங்கம் வழங்குகிறார். அம்பானி தனது வீட்டிலும் பேரக்குழந்தைகளை வரவேற்க சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார். வீட்டில் சுழலும் படுக்கைகள் மற்றும் வெளியில் இருந்து குழந்தைகள் மீது சூரிய ஒளிபடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் அணிவதற்காக உலகம் முழுக்க மிகவும் பிரபலமான பிராண்ட் ஆடைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. அதோடு குழந்தைகள் அமருவதற்காக பி.எம்.டபிள்.யூ காரில் இருக்கைகள் கூட மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது.