Published:Updated:

மோடி பயணித்த மெட்ரோ ரயிலில் கோட் வேர்ட் எழுதிச்சென்ற மர்ம நபர்கள்... சதித்திட்டமா? அதிரடி விசாரணை

பிரதமர் மோடி | அகமதாபாத் மெட்ரோவில் பயணம்
News
பிரதமர் மோடி | அகமதாபாத் மெட்ரோவில் பயணம்

பிரதமரின் பயணத்துக்கு சிலமணி நேரத்துக்கு முன்னர்தான், மெட்ரோ ரயிலில் மூன்றெழுத்தை எழுதியுள்ளனர் என்பதை அறிந்து, பாதுகாப்புப் படையினர் உஷார்ப்படுத்தப்பட்டனர். இதில் ஏதேனும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கலாம் என்ற சந்தேகம் அச்சம் ஏற்பட்டது.

Published:Updated:

மோடி பயணித்த மெட்ரோ ரயிலில் கோட் வேர்ட் எழுதிச்சென்ற மர்ம நபர்கள்... சதித்திட்டமா? அதிரடி விசாரணை

பிரதமரின் பயணத்துக்கு சிலமணி நேரத்துக்கு முன்னர்தான், மெட்ரோ ரயிலில் மூன்றெழுத்தை எழுதியுள்ளனர் என்பதை அறிந்து, பாதுகாப்புப் படையினர் உஷார்ப்படுத்தப்பட்டனர். இதில் ஏதேனும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கலாம் என்ற சந்தேகம் அச்சம் ஏற்பட்டது.

பிரதமர் மோடி | அகமதாபாத் மெட்ரோவில் பயணம்
News
பிரதமர் மோடி | அகமதாபாத் மெட்ரோவில் பயணம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மெட்ரோ ரயில் பாகம் -1 திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் 30-ம் தேதி தொடங்கி வைத்தார். அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பாதையை அகமதாபாத் கல்வி சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவங்கினார்.

பிரதமர் மோடி | வந்தே பாரத் தொடக்கம்
பிரதமர் மோடி | வந்தே பாரத் தொடக்கம்

அதன் பின்னர் மெட்ரோ ரயிலில் ஏறி பயணம் மேற்கொள்ளவிருந்தார். பிரதமர் மோடி பயணிப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு, அவர் பயணிக்கத் திட்டமிட்டிருந்த மெட்ரோ ரயிலின் வெளிப்பகுதியில், வண்ணம் பூசப்பட்டு சில எழுத்துகளை யாரோ எழுதியுள்ளது தெரியவந்தது.

மோடி பயணிக்கவிருந்த மெட்ரோ ரயில் பெட்டிக்கு 2 பெட்டிகள் தள்ளி, TAS என எழுதப்பட்டிருந்தது. யார், எதற்காக இப்படி எழுதியுள்ளனர் என்பது தெரியாததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமரின் பயணத்துக்கு சிலமணி நேரத்துக்கு முன்னர்தான் மெட்ரோ ரயிலில் எழுதியுள்ளனர் என்பதை அறிந்து, பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர். இது, ஏதேனும் பயங்கரவாத அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற நோக்கில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிறப்பு பாதுகாப்புக் குழு (SPG), குஜராத் மாநில பயங்கரவாத தடுப்புக் குழுவுடன் இணைந்து, இது குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டது.  

மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணிக்க சிலமணி நேரமே இருந்த நிலையில், பாதுகாப்புக் குழுவினர் அதிரடியாக உச்சகட்ட விசாரணையை மேற்கொண்டு, தீவிரமாக சோதனை செய்தனர். அதில் பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதி செய்தனர்.

பிரதமர் மோடி |அகமதாபாத் மெட்ரோவில் பயணம்
பிரதமர் மோடி |அகமதாபாத் மெட்ரோவில் பயணம்

அந்தத் தகவலை அடுத்து, பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணித்தார். கலுப்பூர் நிலையத்தில் இருந்து தூர்தர்ஷன் கேந்திரா மெட்ரோ ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயிலில் ஏறி பயணம் மேற்கொண்டார். அவருடன் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பயணித்தனர்.

விசாரணையில், Take A Shot என்பதன் சுருக்கமே `TAS' அதாவது படமெடு என்ற பொருளில் எழுதப்பட்டிருந்தது. கேரளா, மராட்டிய மாநில மெட்ரோ ரயிலில்களிலும் மர்மநபர்கள் இப்படி எழுதிச் சென்றது தெரியவந்தது.

இப்படி எழுத என்ன காரணம் என்பதை அறிய பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழுவானது, குஜராத் மாநில பயங்கரவாத தடுப்புக் குழுவுடன் இணைந்து அதிரடி விசாரணை மேற்கொண்டது. அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை முழுமையாக ஆய்வு செய்தனர்.  

பாதுகாப்புப் படையினர் நடத்திய தீவிர விசாரணையில், மெட்ரோ ரயிலில் சர்ச்சைக்குரிய வகையில் எழுதியது இத்தாலியைச் சேர்ந்த நான்கு பேர்தான் என்பதைக் கண்டுபிடித்தனர்.

அகமதாபாத்தின் பல்டி நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் இவர்கள் தங்கி இருப்பதை அறிந்து, சுற்றி வளைத்து நான்குபேரையும் கைது செய்தனர்.

விசாரணையில், இவர்கள் சர்வதேச அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மெட்ரோ ரயில்கள் மற்றும் பிற பொதுச் சொத்துகளில் வண்ணம் தீட்டி, இப்படி எழுதுவார்களாம்... இப்படி எழுதுவது இவர்கள் வேலையாக இருந்தது தெரியவந்தது.

பிரதமர் மோடி | அகமதாபாத் மெட்ரோ
பிரதமர் மோடி | அகமதாபாத் மெட்ரோ

சரி... பிரதமர் மோடி பயணித்த மெட்ரோ ரெயிலில் TAS என எழுதப்பட்டதற்கு என்ன அர்த்தம் என்று கேட்தற்கு, Take a Shot  என்பதற்கு ``சிகரெட் புகைத்தல்” என்று அர்த்தம் என தெரிவித்துள்ளனர். அதுதான் உண்மையான அர்த்தமா? அந்த அர்த்தத்தில்தான் எழுதினோம் என்கிறார்கள் அந்த 4 பேரும்.

தொடர்ந்து போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். Take a Shot-ன் உண்மையான அர்த்தம் என்ன என்பது விசாரணை முடிவில் தெரியவரும்.