Published:Updated:

``நான் ஒருவன்தான் கட்சிக்காரர்களை மணல் அள்ள சொன்னேன்” - திமுக எம்.பி-யின் வீடியோ சர்ச்சை

கே.ஆர்.என்.ராஜாஸ்குமார்
News
கே.ஆர்.என்.ராஜாஸ்குமார்

தி.மு.க ராஜ்யசபா எம்.பியாகவும், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராகவும் இருப்பவர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார். இவரின் சொந்த ஊர் ராசிபுரம். அங்கே உள்ள அவரின் வீட்டில் வைத்துதான் மேற்படி சர்ச்சை பேச்சை பேசியதாக சொல்லப்படுகிறது.

Published:Updated:

``நான் ஒருவன்தான் கட்சிக்காரர்களை மணல் அள்ள சொன்னேன்” - திமுக எம்.பி-யின் வீடியோ சர்ச்சை

தி.மு.க ராஜ்யசபா எம்.பியாகவும், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராகவும் இருப்பவர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார். இவரின் சொந்த ஊர் ராசிபுரம். அங்கே உள்ள அவரின் வீட்டில் வைத்துதான் மேற்படி சர்ச்சை பேச்சை பேசியதாக சொல்லப்படுகிறது.

கே.ஆர்.என்.ராஜாஸ்குமார்
News
கே.ஆர்.என்.ராஜாஸ்குமார்

தி.மு.க ராஜ்யசபா எம்.பி ஒருவர், 'எந்த மாவட்டச் செயலாளரும் கட்சிக்காரங்களை மணல் அள்ளுங்கனு சொன்னதில்லை. நான் மட்டும்தான் சொல்கிறேன்' என்று பேசியதயாக வெளியாகியிருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. 'முன்னர் செந்தில் பாலாஜி, தற்போது இந்த எம்.பி மணல் விவகாரத்தில் ஏடாகூடமாக பேசி, எடக்குமடக்கா சர்ச்சையில் சிக்கியிருக்காங்க' என்று தி.மு.க தரப்பில் சொல்கிறார்கள்.

கே.ஆர்.என்.ராஜாஸ்குமார்
கே.ஆர்.என்.ராஜாஸ்குமார்

தி.மு.க ராஜ்யசபா எம்.பியாகவும், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராகவும் இருப்பவர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார். இவரின் சொந்த ஊர் ராசிபுரம். அங்கே உள்ள அவர் வீட்டில் வைத்துதான் மேற்படி சர்ச்சை பேச்சை பேசியதாக சொல்லப்படுகிறது. அந்த வீடியோவில், "எந்த மாவட்டத்திலும், எந்த மாவட்டச் செயலாளரும் இப்படி கட்சிக்காரங்களை கூப்புட்டு, 'நீங்க அள்ளுங்க'னு சொன்னதே கிடையாது. நான் ஒருத்தன்தான் சொன்னேன். மீதியெல்லாம் அந்த கம்பெனிகாரன்கிட்ட கொடுத்து, பணம் வாங்கிட்டுப் போயிட்டாங்க. நான் ஒருத்தன்தான் கட்சிகாரங்க சேர்ந்து எல்லாம் செய்ங்கனு சொல்லி, கட்சிக்காரன் கையில் கொடுத்தேன்" என்று ராஜேஸ்குமார் பேசியிருப்பதாக தெரிகிறது. இந்த வீடியோ வேகமாக பரவ, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கரூரில் தனது பேட்டியிலும் இதை குறிப்பிட்டு விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில், இதுகுறித்து பேசிய நாமக்கல் மாவட்ட தி.மு.கவினர் சிலர், "நாமக்கல் மாவட்டத்தில் பழைய கட்சிக்காரங்களை, கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களை ராஜேஸ்குமார் மதிப்பதில்லை. மாறாக, கிழக்கு மாவட்டம் முழுவதும் தனது ஆதரவாளர்களை போட்டு, கட்சியை தன்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துட்டார். கான்ட்ராக்ட் எல்லாம் அவர் சொல்ற ஆளுக்குதான் கொடுக்க வேண்டியிருக்கு. இந்த நிலையில்தான், கோபமான யாரோ அவர் பேசியதை வீடியோவா எடுத்து, அவருக்கு எதிராக திருப்பிட்டாங்க. கட்சி தலைமை அவரை கண்டிச்சு வைக்கணும். இல்லைன்னா, இவரால கட்சிக்குதான் கெட்டப் பெயர். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நடந்த கரூர் நிகழ்வில் பேசிய இப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி, 'தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், 11.55 க்கு மாட்டுவண்டி உரிமையாளர்கள், யாரையும் கேட்காமல், ஆற்றில் சென்று மணல் அள்ளலாம். எந்த அதிகாரியும் தடுக்கமாட்டார். அப்படி தடுக்கும் அதிகாரி இங்கே இருக்கமாட்டார்' என்று பேசியது, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போ இவர் மணலை பற்றி பேசி, கட்சிக்கு அவமானத்தைப் தேடிதந்துட்டார். செந்தில் பாலாஜி பேசியதுனாச்சு, தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு. ஆனால், ராஜேஸ்குமார் தி.மு.க ஆட்சியில் இருக்கும் இப்போது பேசி, மக்கள் மத்தியில் கட்சிக்கு ஓர் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார்" என்றார்கள்.

ராஜேஸ்குமார்
ராஜேஸ்குமார்
எம். விஜயகுமார்

இதுபற்றி, ராஜேஸ்குமாரிடம் பேச முயன்றோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. நம்மிடம் பேசிய அவரின் ஆதரவாளர்கள் சிலர்,

"எங்கண்ணன் அப்படி பேசவில்லை. அவர் பேசியதாக டெக்னாலஜியைப் பயன்படுத்தி, அவரின் அரசியல் எதிரிகள் விசயத்தை பூதாகரமாக்குறாங்க. அண்ணனை பத்தி கட்சி தலைமைக்கும், மக்களுக்கும் நன்றாக தெரியும். மத்தபடி, இது ஒரு விசயமில்லை" என்றார்கள்.