Published:Updated:

நாமக்கல்: பன்றிக்காய்ச்சலுக்குப் பெண் பலி - மருத்துவ முகாம் அமைத்து தீவிர பரிசோதனை

மருத்துவ முகாம்
News
மருத்துவ முகாம்

மல்லசமுத்திரம் பகுதியில் பன்றிக்காய்ச்சலுக்குப் பெண் ஒருவர் பலியானதையடுத்து, அந்தப் பகுதியில் மருத்துவக் குழுவினர் முகாம் அமைத்து, மக்களுக்குத் தீவிர பரிசோதனை நடத்திவருகின்றனர்.

Published:Updated:

நாமக்கல்: பன்றிக்காய்ச்சலுக்குப் பெண் பலி - மருத்துவ முகாம் அமைத்து தீவிர பரிசோதனை

மல்லசமுத்திரம் பகுதியில் பன்றிக்காய்ச்சலுக்குப் பெண் ஒருவர் பலியானதையடுத்து, அந்தப் பகுதியில் மருத்துவக் குழுவினர் முகாம் அமைத்து, மக்களுக்குத் தீவிர பரிசோதனை நடத்திவருகின்றனர்.

மருத்துவ முகாம்
News
மருத்துவ முகாம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள மல்லசமுத்திரம் வெங்கடேசபுரி ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கேப்ரியல். இவர், வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றிவருகிறார். இவரின் மனைவி கிளாரா (51). இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு, மல்லசமுத்திரம் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், அவரின் உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். இந்த நிலையில், அங்கு மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ஹெச் 1 என் 1 வைரஸ் தாக்குதல் பன்றிக்காய்ச்சல் என உறுதியான நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதையடுத்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், மல்லசமுத்திரம் எட்டாவது வார்டு வெங்கடேசபுரி ஆசிரியர் காலனி பகுதியிலுள்ள மக்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மருத்துவ முகாம்
மருத்துவ முகாம்

மல்லசமுத்திரம் பகுதியில் வட்டார மருத்துவ அலுவலர் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் வீடு வீடாகச் சென்று, பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகளாக சளி, காய்ச்சல், உடல் வலி, உடல் சோர்வு போன்ற தொந்தரவுகள் யாருக்கெல்லாம் இருக்கிறது என்று பரிசோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். மேலும், கிளாரா மேரியின் குடும்பத்தினர் ஏழு நபர்களுக்கு நோய்க்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மருத்துவ ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. பன்றிக்காய்ச்சலால் பெண் ஒருவர் இறந்த சம்பவத்தால், அப்பகுதி மக்களிடையே எழுந்திருக்கும் பயத்தைப் போக்கவும், அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளைத் தொடர்ந்து வழங்கவும், மருத்துவக் குழுவினர் ஈடுபட்டிருக்கின்றனர்.