நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

கேள்வி பதில் : தங்க நாணயம், தங்கக் கட்டி... ஜி.எஸ்.டி உண்டா? - பதில் சொல்கிறார் நிபுணர்...

ஜி.எஸ்.டி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.எஸ்.டி

கிரெடிட் கார்டு பயன்படுத்தி பொருள் அல்லது சேவையை வாங்கும்போது கடைக்காரர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது.

நான் கடந்த நான்கு ஆண்டுகளாக எஸ்.ஐ.பி முறையில் மாதம் ரூ. 1.000 ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்டில் முதலீடு செய்து வந்தேன். தற்போது அதன் மதிப்பு ரூ.10,000 குறைவாக உள்ளது. இப்போது நான் என்ன செய்வது?

ஜெயந்தன். நெல்லை

கேள்வி பதில் : தங்க நாணயம், தங்கக் கட்டி... ஜி.எஸ்.டி உண்டா? - பதில் சொல்கிறார் நிபுணர்...

‘‘பங்குச் சந்தைகள் குறிப்பாக, மிட் கேப் நிறுவனப் பங்குகள் 2018–ம் ஆண்டு தொடக்கத் திலிருந்து 2020–ம் ஆண்டில் அக்டோபர் வரை இறக்கத்தில் இருந்து வந்தது. இப்போது, அதிலிருந்து மீளத் தொடங்கியுள்ளது. அதனால், உங்கள் எஸ்.ஐ.பி முறையிலான முதலீடுகளைத் தொடர்வது நல்லது. வரும் ஆண்டு களில் மிட் கேப் ஃபண்டுகள் மூலம் நல்ல வருமானத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம்.’’

ஆயுள் காப்பீட்டில் பாலிசி டேர்ம், பிரீமியம் டேர்ம் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதைச் சொல்லுங்கள்.

கேள்வி பதில் : தங்க நாணயம், தங்கக் கட்டி... ஜி.எஸ்.டி உண்டா? - பதில் சொல்கிறார் நிபுணர்...

‘‘காப்பீட்டில் பாலிசி டேர்ம் (Policy Term) என்பது பாலிசி எத்தனை ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என்பதைக் குறிக்கும். பிரீமியம் டேர்ம் (Premium Term) என்பது இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு எத்தனை ஆண்டுகள் பீரிமியம் கட்ட வேண்டும் என்பதைக் குறிக்கும். பொதுவாக, இந்த இரண்டும் ஒரே கால அளவாக இருக்கும். யூலிப் (யூனிட் லிங்டு பாலிசி) மற்றும் சிறப்பு வகை எண்டோமென்ட் பாலிசிகளில் பிரீமியம் கட்டும் காலம் குறைவாகவும் பாலிசி மூலம் கவரேஜ் கிடைக்கும் ஆண்டுகள் அதிகமாகவும் இருக்கும்.

உதாரணமாக, யூலிப் பாலிசி ஒன்றில் பாலிசி டேர்ம் 30 ஆண்டுகள். பிரீமியம் டேர்ம் 10 ஆண்டுகள் என இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த பாலிசியில் முதல் 10 ஆண்டுகள் மட்டும் பிரீமியம் கட்டி நிறுத்திவிட்டால், அடுத்த 20 ஆண்டுகளுக்கு பிரீமியம் கட்டாமலே பாலிசியின் கவரேஜ் மற்றும் இதர அம்சங்கள் தொடரும். இதில் பீரிமியம் தொகை செலுத்தும் காலம் முடிந்த பிறகு, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகை உங்களின் ஆயுள் காப்பீட்டுக்காக பாலிசி காலம் முழுவதும் நீங்கள் செலுத்திய தொகையிலிருந்து யூனிட்டுகளை விற்பதன் மூலம் எடுத்துக்கொள்ளப்படும்.

கேள்வி பதில் : தங்க நாணயம், தங்கக் கட்டி... ஜி.எஸ்.டி உண்டா? - பதில் சொல்கிறார் நிபுணர்...

எண்டோமென்ட் பாலிசி எனில், பாலிசியில் அதுவரைக்கும் சேர்ந்திருக்கும் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகை ஆயுள் காப்பீடு கவரேஜுக்காகக் கழித்துக் கொள்ளப்படும். இதனால் பாலிசியின் இறுதியில் உங்களுக்குக் கிடைக்கும் தொகை குறைய வாய்ப்பு இருக்கிறது.

யூலிப் பாலிசியைப் பொறுத்தவரை, பங்குச் சந்தையின் செயல்பாட்டை பொறுத்து இறுதியாகக் கிடைக்கும் முதிர்வு தொகை இருக்கும்.’’

என் வயது 46. கடந்த ஆறு வருடங்களாக எஸ்.ஐ.பி முறையில் மாதம்தோறும் நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட், எல்&டி எமர்ஜிங் பிசினஸ்சஸ் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி ஸமால்கேப் ஃபண்ட, எஸ்.பி.ஐ ஸமால்கேப்ஃ பண்டுகளில் தலா ரூ.5,000 முதலீடு செய்து வருகிறேன். வரும் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் மகளின் உயர் கல்விச் செலவுக்காக மேலும் ரூ.10,000 எஸ்.ஐ.பி முறையிலும் மொத்தமாக ரூ. 2 லட்சம் தற்போது முதலீடு செய்ய முடியும் தகுந்த ஆலோசனை வழங்கவும்.

எல்.சுரேஷ், சுரண்டை

கேள்வி பதில் : தங்க நாணயம், தங்கக் கட்டி... ஜி.எஸ்.டி உண்டா? - பதில் சொல்கிறார் நிபுணர்...

‘‘எஸ்.ஐ.பி முறையில் மேலும் ரூ.5,000 வீதம் எஸ்.பி.ஐ ஸ்மால்கேப், நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் முதலீடு செய்யுங்கள். ரூ.1 லட்சம் டி.எஸ்.பி ஹெல்த்கேர் ஃபண்டிலும் ரூ.1 லட்சம் எஸ்.பி.ஐ டெக்னலாஜி ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்டிலும் முதலீடு செய்யுங்கள். 2022–ம் ஆண்டு இலக்கை அடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ஃபண்டுகளை மறுஆய்வு செய்து முடிந்தவரை பாதுகாப்பாக லிக்விட் ஃபண்டுகளுக்கு முதலீட்டை மாற்றிக்கொள்ளுங்கள். கல்விக் கட்டணத்தைக் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் கட்டியாக வேண்டும். ஆகவே, மிதமான அணுகுமுறையைக் கையாளுங்கள்.’’

கடந்த வாரத்தில் இரண்டு ஃப்ரிட்ஜ் வாங்கினேன். அதற்கான தொகைகளைச் செலுத்துவதற்காக என்னுடைய கிரெடிட் கார்டைக் கொடுத்தபோது பொருளின் மதிப்பில் 5% கூடுதலாக வசூலிக்கப்படும் என்று கடைக்காரர் சொன்னார். ஏன் என்று கேட்டதற்கு சரியான விளக்கம் இல்லை. உண்மையில் இதுபோன்ற பணப்பரிவர்த்தனைகளில் (கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும்போது) பொருளின் விலையைவிட கூடுதலான தொகையை வசூலிப்பதற்கு கடைக்காரருக்கு உரிமை உண்டா?

கார்த்திகேயன், கரூர்.

கேள்வி பதில் : தங்க நாணயம், தங்கக் கட்டி... ஜி.எஸ்.டி உண்டா? - பதில் சொல்கிறார் நிபுணர்...

‘‘கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பொருள் வாங்கும்போதோ, சேவையைப் பெறும்போதோ கடைக்காரர்கள் கூடுதலான கட்டணம் எதையும் வசூலிக்கக் கூடாது. இந்தக் கட்டணத்தின் ஒரு பகுதி (பொதுவாக 2%), கடைக்காரர்கள், கிரெடிட் கார்டு மெஷினைப் பயன்படுத்துவதற்காக வங்கிக்குக் கட்ட வேண்டிய கட்டணம் ஆகும். சில கடைக்காரர்கள் இந்தக் கட்டணத்தை நுகர்வோர் தலையில் கட்டப் பார்ப்பதால் வரும் விளைவுதான் இது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, கடைக்காரர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையே உள்ள ஒப்பந்தத்தில் கடைக்காரர்கள் நுகர்வோரிடம் இந்தக் கட்டணத்தை வசூலிப்பதற்கான அனுமதி இல்லை. அவ்வாறு வசூலிக்கும் கடைகளைப் பற்றி நுகர்வோர் புகார் அளிக்கும்பட்சத்தில், வங்கிகள் அக்கடைகளுடன் உள்ள கிரெடிட் கார்டு தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம். நுகர்வோராகிய நாம், கடைக்காரர்களிடம் இந்த விதிமுறைகளை மேற்கோள் காட்டி, கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்காக அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று வாதிட வேண்டும்.’’

நகைக்கடைகளில் தங்க நாணயம் (கோல்டு காயின்), தங்கக் கட்டி (கோல்டு) வாங்கும்போது ஜி.எஸ்.டி 3% உண்டா?

மலர்விழி, காரைக்குடி

கேள்வி பதில் : தங்க நாணயம், தங்கக் கட்டி... ஜி.எஸ்.டி உண்டா? - பதில் சொல்கிறார் நிபுணர்...

‘‘நகைக்கடையில் தங்க நகை, தங்க நாணயம், தங்கக் கட்டி என எது வாங்கினாலும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) 3% உண்டு. மேலும், வருகிற 2021 ஜனவரி முதல் ஹால்மார்க் முத்திரையுடன்கூடிய நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறைப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆகையால், நுகர்வோருக்கு தங்கத்தின் சுத்தம் பற்றிய தகவல் காட்டாயமாகத் தெரிந்துகொள்ள முடியும்.’’

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com