
வெளிநாட்டில் இறந்துபோன தன் கணவரின் உடல் கிடைக்க வேண்டி, அவரின் மனைவி உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கும் செய்தி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கொரோனா பிரச்னை இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், மோப்ப நாய்களின் மூலம் கொரோனா வைரஸைக் கண்டறியக் களமிறங்கியுள்ளது இந்திய ராணுவம். கேஸ்பர் என்ற ‘காக்கர் ஸ்பேனியல்’ (Cocker Spaniel) வகை நாய், ‘ஜெயா’, ‘மணி’ ஆகிய தமிழக ‘சிப்பிப்பாறை’ வகை நாய்கள் என மூன்று இந்திய ராணுவத்தின் மோப்ப நாய்களுக்கு கொரோனா வைரஸைக் கண்டறியும் முதற்கட்ட பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த இந்தப் பயிற்சியில், நோய்த் தொற்றாளர்களின் வியர்வை, சிறுநீர் மாதிரிகளைக்கொண்டு வைரஸைக் கண்டறியப் பழக்கியிருக்கிறார்கள். பயிற்சி முடிந்த பிறகு, மாதிரிகளைவைத்து நடத்திய சோதனையில் ஜெயாவும் கேஸ்பரும் சரியாகக் கண்டுபிடித்து அசத்தியிருக்கின்றன!

வெளிநாட்டில் இறந்துபோன தன் கணவரின் உடல் கிடைக்க வேண்டி, அவரின் மனைவி உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கும் செய்தி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தெலங்கானாவின் நிஸாமாபாத் மாவட்டம், சிர்னாபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வோன்டாரி நர்சாரெட்டி என்பவர், சவுதி அரேபியாவில் வேலை செய்துவந்தார். கடந்த நவம்பர் மாதம் 1-ம் தேதி, நர்சாரெட்டி இறந்துவிட்டதாக அவரது மனைவி லஷ்மிக்குத் தகவல் வந்தது. கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி, தொழிலாளர் நல அமைப்பொன்றின் உதவியுடன் டெல்லி வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் மனு கொடுத்தார். அதன் பிறகு பலரையும் சந்தித்துக் கோரிக்கை வைத்தும் எந்தப் பலனும் இல்லை. எவ்வளவு போராடியும், தற்போதுவரை அவரது கணவரின் உடல் அவருக்குக் கிடைக்கப் பெறவில்லை. 100 நாள்களைத் தாண்டிய பிறகும், தனது கோரிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், தற்போது உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் லஷ்மி.
கேரள மாநிலம், பாலக்காடு காவல்துறை கன்ட்ரோல் ரூமின் அவசர அழைப்பு எண்ணுக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு போன் கால் வந்திருக்கிறது. எதிர்முனையில் “என் பெயர் ஷஹிதா. நான் பூளக்காடு பகுதியிலிருந்து பேசுகிறேன். நான் இன்று காலை 3 மணியளவில் எனது ஆறு வயது மகனின் கழுத்தை அறுத்துவிட்டேன். அல்லாவுக்காக எனது மகனை பலி கொடுத்துவிட்டேன். நான் தற்போது என் வீட்டில்தான் இருக்கிறேன்” என எந்தச் சலனமும் இல்லாமல் தனது முகவரியைத் தெரிவித்திருக்கிறார். அதிர்ந்துபோன காவல்துறை, சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

வீட்டின் வாசலில் காவலர்களுக்காக ரத்தக்கறையுடன் காத்திருந்தார் மூன்று மாத கர்ப்பிணியான ஷஹிதா. காவலர்களைத் தன் வீட்டுக்குள் அழைத்து, பாத்ரூமில் ரத்தவெள்ளத்தில் கிடந்த தன் மகனின் சடலத்தைக் காண்பித்திருக்கிறார். ஷஹிதா லாக்டெளனுக்கு முன்பு வரை பூளக்காடு மதரசாவில் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். மத உணர்வைப் பயன்படுத்தி, வேறு யாரேனும் கொலை செய்யத் தூண்டினார்களா என ஷஹிதாவின் வாட்ஸ்அப் குரூப்களை ஆராய்ந்து விசாரணை நடத்திவருகிறது காவல்துறை.