அலசல்
Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
நேஷனல் ஹாட் பிட்ஸ்

நான்கு நாள்களில் 33 முறை அவரது ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்கப்பட்டு, மொத்தம் 1,30,000 ரூபாய் சுரண்டப்பட்டது தெரியவந்திருக்கிறது

* மத்தியப்பிரதேசத்திலுள்ள வனப் பகுதிகளில், பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கும் ‘ஷெர்னி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்து கொண்டிருக்கிறது. பல நாள்களாக அனுமதி பெற்று நடந்துவந்த படப்பிடிப்பை நிறுத்தக்கோரி மத்தியப்பிரதேச மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் விஜய் ஷா தரப்பிலிருந்து உத்தரவு பறந்திருக்கிறது. இந்த உத்தரவால், வாகனங் களோடு காட்டுக்குள் மாட்டிக்கொண்ட படக்குழு அதிர்ச்சியடைந்திருக்கிறது. திடீரென இந்த உத்தரவு வர என்ன காரணம் எனத் தவித்தது படக்குழு. ‘படப்பிடிப்புக்கு முதல்நாள் தனது இல்லத்துக்கு உணவு விருந்துக்கு வித்யா பாலனை அழைத்திருக்கிறார் விஜய் ஷா. ஆனால், வித்யா பாலன் அதில் கலந்து கொள்ள வில்லை. இதை மனதில் வைத்துக் கொண்டுதான் படப்பிடிப்பை அமைச்சர் நிறுத்தியிருக்கிறார்’ எனச் செய்திகள் கசியவே, வித்யா பாலன் மீது அதிருப்தியில் இருந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் சைலன்ட் மோடுக்குச் சென்றுவிட்டனர். #பாலிவுட் பாலிடிக்ஸ்

நேஷனல் ஹாட் பிட்ஸ்

* புனேவிலுள்ள யெர்வாடா காவல் நிலையத்தில், அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரிபவர் ஜமீல் ரெஹ்மான் ஷேக். சில வாரங்களுக்கு முன்பு, தனது மொபைல்போனை ரிப்பேருக்காகக் கடையில் கொடுத்திருக்கிறார். மூன்று நாள்களுக்குப் பிறகு மொபைலைச் சரிசெய்து சிம் கார்டைப் பொருத்தியவுடன், அடுக்கடுக்காக வங்கியிடமிருந்து மெசேஜ்கள் குவிந்துள்ளன. நான்கு நாள்களில் 33 முறை அவரது ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்கப்பட்டு, மொத்தம் 1,30,000 ரூபாய் சுரண்டப்பட்டது தெரியவந்திருக்கிறது. போலீஸிடமே கொள்ளை என்பதால், வெளியில் சொல்லாமல் தானாகவே விசாரித்திருக்கிறார். நவம்பர் 1-ம் தேதி ஷாப்பிங் சென்றபோது தன்னுடைய ஏ.டி.எம்-ஐ யாரேனும் நகலெடுத்திருக்கலாம் என்று கணித்து, சென்ற வாரம் சம்பந்தப்பட்ட ஏரியா காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். நகலெடுத்த அந்த ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தியே புனே மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏ.டி.எம்-களில் பணம் எடுக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்த காவல்துறை, வழக்கை சைபர் க்ரைம் வசம் ஒப்படைத்திருக்கிறது. #போலீஸ்கிட்டயேவா?

நேஷனல் ஹாட் பிட்ஸ்

* ஆந்திர மாநிலத்தின் தகவல் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பெர்னி நானி. சமீபத்தில் அவரது சொந்த ஊரான மச்சிலிப்பட்டினத்துக்கு அவருடைய தாயின் இறுதிச் சடங்கு நிகழ்வுக்காகச் சென்றார். சொந்த ஊரில் தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார் பெர்னி நானி. அப்போது பி.நாகேஸ்வர ராவ் என்ற கொத்தனார், பெர்னி நானியின் காலில் விழுந்து வணங்கியிருக்கிறார். பெர்னி அதைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டு ஆசீர் வதிப்பதுபோலக் குனியவே, காலில் விழுந்த அவர் சட்டென்று தான் மறைத்து வைத்திருந்த ‘கொத்தனார் கரண்டியை’ எடுத்து பெர்னி நானியைத் தாக்கினார். பெல்ட் பக்கிளில் தாக்கப்பட்டு சட்டை கிழியவே அமைச்சர் விலகியிருக்கிறார். மீண்டும் அந்த நபர் தாக்க முற்பட, அருகிலிருந்தவர்கள் உடனடியாகச் செயல்பட்டு அவரைத் தடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். சிசிடிவி காட்சிகளையும் ஆதாரமாகப் பெற்ற காவல்துறை, நாகேஸ்வர ராவ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்திருக்கிறது. #தொழுத கையுள்ளும்...