கட்டுரைகள்
Published:Updated:

நல்ல வேலை கிடைக்க, இதுவே நல்ல வேளை!

நல்ல வேலை
பிரீமியம் ஸ்டோரி
News
நல்ல வேலை

வேல்ஸ்

ரு நல்ல வேலைக்கு நம்மைத் தயார்படுத்திக்கொள்வது, அதாவது Job Ready ஆவதற்கு அசகாய சாதனைகளையெல்லாம் செய்ய வேண்டியதில்லை. சரியான துறையில், சரியான கம்பெனியில், சரியான வேலைக்கு முயற்சி செய்தால்... ‘டாப்பில் வர... ஆடி முடிஞ்சு ஆவணி வரும் வரை’ காத்திருக்க வேண்டியதில்லை. கிக்-ஸ்டார்ட் பண்ணாமல், செல்ப்-ஸ்டார்ட்டி லேயே நம் கரியரை டாப்-கியரில் எகிற வைக்கலாம்.

நல்ல வேலை கிடைக்க, இதுவே நல்ல வேளை!

இதில் நமக்குத் தெரியவேண்டிய தெல்லாம்... ‘எந்தத் துறையில் எந்த மாதிரி வேலைகளுக்குத் தேவைகள் இருக்கின்றன?’, ‘என்ன மாதிரி ‘ஸ்கில்-செட்ஸ்’ எதிர்பார்க்கிறார்கள்?’என்ற இரண்டே இரண்டு தகவல்கள்தான்.

கார்த்திக், அமீத் ராஜவாதே
கார்த்திக், அமீத் ராஜவாதே

முதல்கட்டமாக, ஆட்டோ மொபைல், தகவல் தொழில்நுட்பம் அதோடு சேர்த்து மோட்டார் ஸ்போர்ட்ஸ்... ஆகிய மூன்று துறைகளில் இப்போது என்னென்ன மாதிரியான வேலைகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்? இது பற்றி விவரமாகத் தெரிந்துகொள்ள மோட்டார் விகடன் கட்டணமில்லாத மூன்று பயிலரங்கங்களை நடத்துகிறது. நேர்முகத் தேர்வுகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் நடக்கின்றன என்பதால் இந்தப் பயிலரங்கமும் ஆங்கிலத்தில்தான்!

செப்டம்பர் 26-ம் தேதி நடக்கவிருக்கும் கட்டணமில்லாத இந்த Job opportunities in Automotive industry அறிமுகப் பயிலரங்கத்திற்குப் பதிவு செய்ய...https://bit.ly/35zncyH

ஆட்டோமொபைல் என்றால் முதலில் நினைவுக்கு வரும் பெயர் டிவிஎஸ்! இந்தக் கம்பெனியின் எச்.ஆர் பிரிவின் கார்த்திக்கிற்கு இந்தத் துறையில் இருக்கும் நெளிவுசுளிவுகள் அனைத்தும் அத்துப்படி. ‘‘இப்போதெல்லாம் வேலைக்கு ஆட்களை எடுக்கும் கம்பெனிகள் ஒருவருக்கு என்ன மாதிரி SKILLS இருக்கிறது என்று பார்ப்பதைப் போலவே, அந்த வேலையைச் செய்ய WILL இருக்கிறதா என்றும் முக்கியமாகப் பார்க்கிறார்கள்’’ என்ற ரகசியத்தை நம்மிடம் பகிர்ந்தவர், இதுபோன்ற பல ரகசியங்களை பயிலரங்கத்தின்போது சொல்லவிருக்கிறார். ‘‘ஸ்கூட்டர் டிசைனிங் என்பது லேசுப்பட்ட காரியமில்லை. கலை ஞானமும், பொறியியல் அறிவும் சமவிகிதம் தேவைப்படும் துறை இது. இதில் பிரகாசிக்க, பெளதிக சூத்திரங்களும் கணித சமன்பாடுகளும் மட்டும் போதாது. இடைவிடாத பயிற்சி அவசியம். சரி, என்ன பயிற்சி மேற்கொள்வது?’’ - டி.வி.எஸ். மோட்டார்ஸின் ஸ்கூட்டர் டிசைன் துறைத் தலைவராக இருக்கும் அமீத் ராஜவாதே பயிலரங்கத்தில் அதைச் சொல்லவிருக்கிறார். மேலை நாட்டினர் மட்டுமே கோலோச்சும் இந்தத் துறையில், ‘‘என்னாலும் சாதிக்க முடியும் என்று நம்புகிறீர்களா?’’ ஆம் என்றால் இந்தப் பயிலரங்கத்திற்கு உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

ங்கள் காரை இன்டெலிஜென்ட் கார் என்று பல கம்பெனிகள் விளம்பரப்படுத்துகிறார்கள். இதன் பின்னால் மெஷின் லேர்னிங், டேட்டா அனலிடிக்ஸ், ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப் பல தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. இதுதான் உங்கள் ஏரியா என்றால் அக்டோபர் 11-ம் தேதி நடக்கவிருக்கும் இந்தப் பயிலரங்கம் உங்களுக்குத்தான்.

நல்ல வேலை கிடைக்க, இதுவே நல்ல வேளை!

‘‘வொர்க் ப்ரம் ஹோம்’ என்பது வாழ்க்கையில், ‘வொர்க்-லைப் பேலன்ஸை’க் கொண்டு வந்திருக்கிறது. அதேசமயம் களைப்பு தரும் பயணங்களையும் போக்குவரத்துக்களையும் குறைத்து, செயல்திறனைக் கூட்டியிருக்கிறது. இந்தப் புதிய மாற்றங்களால் வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் திறமையான பல இளம் தாய்மார்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகவிருக்கின்றன.’’ - எப்போதும் இப்படி பாசிட்டிவ் எனர்ஜியோடு பேசுகிறவர் லக்‌ஷ்மணன் சிதம்பரம். டெக் மஹிந்திராவின் அமெரிக்கச் செயல்பாடுகளை முன்னின்று நடத்தும் ‘என்டர்பிரைஸ் பிசினஸ்’ பிரிவின் தலைவரான இவரது பேச்சே பல மேஜிக்குகளை நமக்குள் நிகழ்த்தும்.

லக்‌ஷ்மணன் சிதம்பரம்,  ஸ்ரீராம் கிருஷ்ணன், ராஜேஷ் தூடு
லக்‌ஷ்மணன் சிதம்பரம், ஸ்ரீராம் கிருஷ்ணன், ராஜேஷ் தூடு

திறமையான இளைஞர்களை வளர்த்தெடுப்பதையே தன் உப தொழிலாகச் செய்துவருபவர் ஸ்ரீராம் கிருஷ்ணன். ‘ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா அனலிடிக்ஸ்’ ஆகியவற்றை மட்டுமே சுவாசித்துக் கொண்டிருப்பவர். இந்த ஏரியாக்களில் கில்லியாக ஒருவர் என்ன படிக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும் என்பது பற்றிச் சொல்லவிருக்கிறார்.

அக்டோபர் 11, Job opportunities in IT Field.

https://bit.ly/33FkmWf

உலகத்திலேயே மிகப்பெரிய பிளாக் செயின் நெட்வொர்க்கைக் கட்டமைத்தவர் ராஜேஷ் தூடு. சைபர் செக்யூரிட்டி என்பது இவரது இரண்டாவது கோட்டை. ‘புதிதாக வருகிறவர்களைப் புண்படுத்தாதே, பண்படுத்து’ என்பதைத் தன் டேக் லைனாக வைத்திருக்கும் இவர் திறமை யான இளைஞர்களை ஊக்குவிப்பதில் உற்சாகம் கொள்பவர்.

இவரும் உங்களோடு உரையாட விருக்கிறார். All the Best!

ரேஸில் ஓர் அணியின் சார்பாகக் கலந்துகொள்வது ஒருவர்தான் என்றாலும் டீம் மேனேஜர் தொடங்கி, டயர் ஸ்பெஷலிஸ்ட், ஜெனரல் ஸ்பெஷலிஸ்ட், ட்யூனர், மெக்கானிக், பிட் க்ரூ, மார்ஷல்ஸ் என்று அவருக்குப் பின்னால் ஒரு பெரும் படையே சுறுசுறுப்பாய் இயங்குவதை தொலைக்காட்சியிலோ அல்லது சென்னை, கோவையில் உள்ள ரேஸ் மைதானத்திலோ பார்த்திருப்பீர்கள்.

நல்ல வேலை கிடைக்க, இதுவே நல்ல வேளை!
நல்ல வேலை கிடைக்க, இதுவே நல்ல வேளை!

Job opportunities in Motor Sports அக்டோபர் 10, 2020

பதிவு செய்ய... https://bit.ly/3c8eaK5

நம் நாட்டைப் பொறுத்தவரை இவற்றில் பல வேலைகள் பகுதிநேர வேலைகள்தான். ஆனால் மிகுந்த மனநிறைவைக் கொடுக்கும் வேலைகள். இத்துறையில் இருக்கும் வாய்ப்புகளைப் பற்றியெல்லாம் CRA மோட்டார் ஸ்போர்ட்ஸைச் சேர்ந்த தருண், அக்டோபர் 10-ம் தேதி நடக்கவிருக்கும் பயிலரங்கில் உங்களோடு பகிர்ந்து கொள்ளவிருக்கிறார். வேகம்தான் உங்கள் வேதம் என்றால், நீங்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டிய பயிலரங்கம் இது.