Published:Updated:

புத்தாண்டு: 32 பொருள்கள்; நதிகளின் புனித நீர்; தஞ்சாவூர் பெரிய கோயில் பெருவுடையாருக்கு அபிஷேகம்!

சிறப்பு அலங்காரத்தில் பெரிய கோயில் பெருவுடையார்
News
சிறப்பு அலங்காரத்தில் பெரிய கோயில் பெருவுடையார்

விவசாயம் செழிக்க வேண்டும், நோய் நொடி இல்லாத சிறப்பான வாழ்வை உலக மக்கள் பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு, தஞ்சாவூர் பெரிய கோயில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டித் தஞ்சாவூர் பெரியகோயில் மூலவரான பெருவுடையாருக்கு மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட 32 பொருள்கள் மற்றும் காவிரி, கங்கை, கோதாவரி உள்ளிட்ட புண்ணிய நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

உலக மக்கள் அனைவரும் நோய் நொடி இல்லாத வாழ்வைப் பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு ‘பெருவுடையாரே போற்றி’ என்னும் கோஷங்கள் முழங்க பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் பெரியகோயில்
தஞ்சாவூர் பெரியகோயில்

தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப்புகழ் பெற்றது. யுனஸ்கோவால் உலகப் பாரம்பர்ய சின்னமாக அறிவிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் வானுயர்ந்து நிற்கும் விமான கோபுரத்துடன் பிரமிக்க வைக்கும் அழகுடன் காட்சி தருகிறது. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத பேரானந்தத்தைத் தரக்கூடியது பெரிய கோயில் என சுற்றுலாப் பயணிகள் பலரும் மெய்சிலிர்க்கச் சொல்வார்கள்.

மூலவரான பெருவுடையார், மஹா நந்தி, வலது புறத்தில் பெரியநாயகி அம்மன், இடது புறத்தில் அமையப்பெற்றுள்ள வராஹி அம்மன் எனப் பெரியகோயில் வளாகத்தில் அடங்கியிருக்கும் சிறப்புகள் ஏராளம். தினமும் பெரியகோயிலை தரிசனம் செய்வதற்கு உலகம் முழுவதிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

பெரியகோயிலில் பக்தர்கள்
பெரியகோயிலில் பக்தர்கள்

இந்நிலையில் ஆங்கில வருடப்பிறப்பான நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் பெரியகோயிலில் சாமி தரிசனம் செய்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் பெருவுடையாரை தரிசித்துச் சென்றனர்.

2023 -ம் ஆண்டை வரவேற்கும் விதமாக மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பொருள்கள் மற்றும் காவிரி, கங்கை, கோதாவரி உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் ஆகியவற்றால் பெருவுடையாருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர்கள்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர்கள்

பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது உலகத்தில் அமைதி நிலவ வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும், நோய் நொடி இல்லாத சிறப்பான வாழ்வை உலக மக்கள் பெற வேண்டும் என பக்தர்கள் வேண்டிக்கொண்டனர்.