Published:Updated:

`இதுவே சரியான நேரம்’ - ராஜினாமா முடிவை அறிவித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்!

பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்
News
பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்.

Published:Updated:

`இதுவே சரியான நேரம்’ - ராஜினாமா முடிவை அறிவித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்!

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்.

பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்
News
பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென். லேபர் கட்சியைச் சேர்ந்த இவர், 2017-ல் அமைந்த கூட்டணி ஆட்சியில் தனது 37-வது வயதில் பிரதமராகப் பதவியேற்றார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தேர்தலில் அவரின் தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றிபெற்றது. தொடர்ந்து பிரதமராகச் செயல்பட்டுவந்த ஜெசிந்தா ஆர்டென் தலைமையிலான அரசு கொரோனா பரவல், பொருளாதார இழப்பு உள்ளிட்ட பிரச்னைகளைச் சிறப்பாக கையாண்டதாகப் பாராட்டப்பட்டது. மேலும், வெளிநாடுகளுடன் நல்ல உறவை பேணிக் காத்துவந்தது.

இந்த ஆண்டு நியூசிலாந்தில் பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதால், அனைத்துக் கட்சிகளும் தயாராகிவருகின்றன. இந்த நிலையில்தான் ஜெசிந்தா ஆர்டென் தனது பதவியை ராஜினாமா செய்வதாக லேபர் கட்சியின் உறுப்பினர்கள் கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். அந்தக் கூட்டத்தில் பேசிய ஜெசிந்தா ஆர்டென், "இந்தப் பதவி குறித்து நான் நன்கு அறிவேன்.

பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்
பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்
AP

இனி இதை தொடர என்னிடம் போதுமான ஆற்றல் இல்லை என உணர்கிறேன். நான் பதவி விலகுவதற்கான சரியான நேரம் இதுதான் என நினைக்கிறேன். நான் பதவியிலிருந்து வெளியேறாவிட்டால் அடுத்த தேர்தலில் நம்மால் வெற்றிபெற முடியாது என நம்புகிறேன். இனிவரும் தேர்தலிலும் நான் போட்டியிடப் போவதில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பின் மூலம் பிப்ரவரி 7-ம் தேதிக்குப் பிறகு அவரின் ராஜினாமா நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஜனவரி 22 லேபர் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறலாம் என்றும், இதையடுத்து இடைக்கால பிரதமர் தேர்வுசெய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.