
பொறியியல் மாணவர்களுக்குப் பொதுவாகவே ஒரு கர்வம் உண்டு. வேலையை எளிமையாக்கும் இயந்திரங்களை உருவாக்குவதால் உலகை மாற்றியெழுதியவர்கள் என்ற பெருமை.
ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் எல்லாத்துறைகளிலும் முன்னேறிவரும் காலம் இது. தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த வீரலட்சுமி தமிழகத்தின் முதல் பெண் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக கலக்கிக்கொண்டிருக்கிறார்.

“ஆம்புலன்ஸ் டிரைவர் வேலைக்கு வேகமா வண்டி ஓட்டுறது முக்கியம் இல்லைங்க, உண்மையில 80 கிமீ ஸ்பீடுக்கு மேல போக முடியாது, ஒரே ஸ்பீடுல போகணும், அதுக்கு விவேகம்தான் முக்கியம். அது பொண்ணுங்களுக்கு நிறையவே இருக்கு. ஆம்புலன்ஸ் டிரைவராகப் பணியாற்றுவது மிகவும் மனநிறைவா இருக்கு” என்கிறார். உண்மையிலேயே ‘வீர’ லட்சுமிதான்!

பொறியியல் மாணவர்களுக்குப் பொதுவாகவே ஒரு கர்வம் உண்டு. வேலையை எளிமையாக்கும் இயந்திரங்களை உருவாக்குவதால் உலகை மாற்றியெழுதியவர்கள் என்ற பெருமை. அதுவும், பெரிய ஆராய்ச்சிக்கூடங்கள் இல்லாமலே புதிதாக ஒன்றை உருவாக்கும்போது அந்தப் பெருமை பன்மடங்காகும்.

சேலம் மாவட்டம், மேட்டூர், கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது தட்சிணாமூர்த்திக்கு இப்போது அந்தப் பெருமைதான். டிப்ளோமா மாணவரான அவர், தண்ணீரில் ஓடும் பைக் ஒன்றை வடிவமைத்திருக்கிறார். கொரோனா ஊரடங்கில் போர் அடித்ததால் இதைச் செய்ததாகச் சொல்லும் தட்சிணாமூர்த்தி ஏற்கெனவே சுண்ணாம்புடன் நீர் சேர்த்து அதனால் வெளியாகும் வாயுவை எரிபொருளாகக் கொண்ட வாகனத்தையும் செய்திருக்கிறாராம். மேட்டூருல இருந்துட்டு ஸ்பார்க் இல்லாம இருக்க முடியுமா?

இந்திப் பிரச்னை விமானநிலையத்தைத் தாண்டி டி-ஷர்ட்டிலும் வந்தது. ‘இந்தி தெரிந்தால்தான் இந்தியனா?’ என்று இரண்டு வாரங்களுக்கு முன் அனல் பறந்தது என்றால் அடுத்த திரியைப் பற்றவைத்தது யுவன்ஷங்கர் ராஜா, மெட்ரோ சிரிஸ், சாந்தனு, கிகி விஜய் அணிந்த டி-ஷர்ட் வாசகங்கள். ‘இந்தி தெரியாது போடா’, ‘நான் தமிழ் பேசும் இந்தியன்’ என்று தமிங்கிலீஷில் எழுதப்பட்ட வாசகங்கள் சமூகவலைதளங்களில் பரபரவென்று பரவ, ஆளாளுக்கு அந்த டி-ஷர்ட் அணிந்து புகைப்படங்களைப் பதிவேற்றி #இந்திவேண்டாம் போடா என்ற ஹேஷ்டேக்கில் டிரெண்ட் அடித்தார்கள். சும்மா இருக்குமா எதிர்த்தரப்பு? இதற்குப் பின்னணியில் தி.மு.க இருக்கிறது என்ற தங்கள் பிரசாரத்துக்கு ஏற்ப, ‘தி.மு.க வேண்டாம் போடா’ என்று டிரெண்ட் அடித்தனர்.
அரசியல்வாதி வீட்டுப்பிள்ளைகள், “ஏய்... நான் யாரு தெரியுமா?’’ எனக் கண்ணை உருட்டி மிரட்டலாகக் கேட்பதெல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும் என நீங்கள் நினைத்திருந்தால், ஸாரி! சமீபத்திய செய்தி, ஊட்டியில் அ.தி.மு.க பிரமுகர் கோபால கிருஷ்ணனின் மகன், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரை நோக்கிக் கைவிரலை உயர்த்தி ஆபாச சைகை காட்டியிருக்கிறார்.

அதை வீடியோ எடுத்த போலீஸார், அந்த நபர்மீது வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய கோபால கிருஷ்ணன், ``என் மகன் அவர் நண்பர்களை வெல்கம் செய்யக் கைகாட்டியிருக்கார், இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல’’ என்கிறார். நாங்க நம்பிட்டோம்!