கட்டுரைகள்
Published:Updated:

நியூஸ் காக்டெயில்

நியூஸ் காக்டெயில்
பிரீமியம் ஸ்டோரி
News
நியூஸ் காக்டெயில்

தே.மு.தி.க இனிதான் நன்றாக வளரும். என்னைக் கேப்டனின் மகனாகப் பார்க்காதீர்கள். உங்கள் வீட்டில் ஒருவனாக, உங்கள் தோழனாக, உங்கள் சகோதரனாக, உங்கள் மச்சானாகப் பாருங்கள்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

தே.மு.தி.க-வினர் விஜயகாந்த்தை அதிகம் காண முடியாத ஏக்கத்தில் தவிப்பது தெரிந்த விஷயம்தான். அவர்களை உற்சாகப்படுத்த முன்வந்திருக்கிறார் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன். சென்னையில் நடைபெற்ற விழாவில் 100 இளைஞர்கள் தே.மு.தி.க-வில் இணைந்தனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய பிரபாகரன் ‘கொரோனா காரணமாக இந்த விழா சிறிய அளவில் நடைபெற்றாலும் 100 குடும்பங்கள் கட்சியில் இணைந்ததில் மகிழ்ச்சி.

நியூஸ் காக்டெயில்

தே.மு.தி.க இனிதான் நன்றாக வளரும். என்னைக் கேப்டனின் மகனாகப் பார்க்காதீர்கள். உங்கள் வீட்டில் ஒருவனாக, உங்கள் தோழனாக, உங்கள் சகோதரனாக, உங்கள் மச்சானாகப் பாருங்கள்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். ஓகே மாம்ஸ்!

நியூஸ் காக்டெயில்
நியூஸ் காக்டெயில்

ந்திய அரசு மருத்துவமனைகள் சுகாதாரமற்று இருப்பது இந்நாட்டின் சாபம். காய்ச்சல், தலைவலி என்றாலும், தங்களால் பொருளாதார ரீதியாகச் சமாளிக்க முடியாவிட்டாலும் மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்குப் படையெடுப்பதற்கு முக்கியமான காரணமே சுகாதாரம்தான். அரசு மருத்துவமனைகளின் இந்த ப் பாழடைந்த பிம்பத்தை உறுதிப்படுத்தும் வகையில் இரு சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. விருத்தாசலம் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில், கைக்குழந்தைகளோடு தாய்மார்கள் இருக்கும் வார்டில் எலிகள் சர்வ சாதாரணமாக ஓடும் வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோ கடலூர் மாவட்ட கலெக்டர் பார்வைக்குச் சென்றதும், ஒன்றரை மணிநேரத்தில், அனைவரும் வேறு அறைக்கு மாற்றப்பட்டு அங்கிருக்கும் எலி பொந்துகள் அடைக்கப்பட்டன. இதேபோல, ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சர்க்கரை நோயாளி ஒருவரின் காலை எலி கடித்துக் குதறியிருக்கிறது. நடவடிக்கை எடுக்கிறோம் என்று மருத்துவமனை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். நாய், பாம்பு, எலி... அடுத்து?

மணிரத்னம், ஷங்கரின் பிரசென்ஸ், கெளதம் மேனனின் பாடல், மிஷ்கினின் பிறந்த நாள் கொண்டாட்டம்!

செப்டம்பர் 20, 2020... இயக்குநர் மிஷ்கினின் 49வது பிறந்தநாள். எல்லா இயக்குநர்களுக்கும் மிஷ்கின் மிகவும் நெருக்கமானவர். அடிக்கடி நிறைய இயக்குநர்கள் மிஷ்கினின் அலுவலகத்தில் சந்தித்துக்கொள்வது வழக்கம். இயக்குநர் ஷங்கர் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மிஷ்கினின் அலுவலகத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் அனைவரும் கலந்துகொண்டு இயக்குநர் ஷங்கரைச் சிறப்பித்தனர். கலந்துகொண்ட அனைவரும் 'S25' என்று அச்சிடப்பட்ட டி ஷர்ட் அணிந்திருந்தது ஹைலைட்.

நியூஸ் காக்டெயில்
நியூஸ் காக்டெயில்

இப்போது மிஷ்கினின் பிறந்தநாளை முன்னிட்டு அதே மாதிரி ஒரு ஹைலைட்டான மீட்டிங் நடைபெற்றுள்ளது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் சமூக வலைதளங்களில் அன்றைய நாளில் வைரல் கன்டன்டாக மாறின. அந்தப் புகைப்படத்தில் இயக்குநர் மிஷ்கினுடன் இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், கெளதம் மேனன், வெற்றிமாறன், லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சசி ஆகியோர் இருந்தனர். ஒவ்வொருவரும் மிஷ்கினைக் கட்டியணைத்து கேக் ஊட்டிவிட்டனர். இந்தப் பிறந்தநாள் விழா யாருடைய ஏற்பாடு, விழாவின் ஹைலைட்டான விஷயங்கள் என்ன என்பதை விசாரித்தோம்.

நியூஸ் காக்டெயில்
நியூஸ் காக்டெயில்

இந்தப் பிறந்தநாள் விழா முழுக்க முழுக்க கெளதம் மேனனின் ஏற்பாடுதானாம். அவர்தான் மணிரத்னம், ஷங்கர் என எல்லா இயக்குநர்களிடம் பேசி அவர்களை தனது வீட்டிற்கு வரவழைத்திருக்கிறார். அன்றைய இரவு உணவும் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எல்லோரும் கெளதம் வீட்டிற்கு வந்த பிறகு, மிஷ்கினுக்கு கால் செய்து வாழ்த்துகள் சொன்னதோடு 'என் வீட்டில் ஒரு மீட்டிங் இருக்கிறது. இத்தனை மணிக்கு வாருங்கள்' எனக் கூறியிருக்கிறார். மிஷ்கின் வந்தவுடன் அவருக்கு சர்ப்பரைஸ் கொடுக்க எல்லா இயக்குநர்களும் தயாராக இருந்திருக்கிறார்கள். அனைவரையும் கெளதம் வீட்டில் ஒன்றாக பார்த்த மிஷ்கினுக்கு செம ஷாக். மொட்டைமாடியில் கேக் வெட்டி வாழ்த்து சொன்னதோடு மட்டுமல்லாமல் சினிமாவைப் பற்றி நிறைய பேசியிருக்கிறார்கள். பாடகர் கார்த்திக் ஒரு இசைக்குழுவுடன் வந்து, அங்கு வந்திருந்த எல்லா இயக்குநர்களுடைய படப்பாடல்களைப் பாடி அசத்தியிருக்கிறார். அவருடன் இணைந்து கெளதம் மேனனும் இளையராஜாவின் பாடல்களைப் பாடியிருக்கிறார். ஒவ்வொரு பாடலைப் பாடும்போதும் அந்தப் பாடல் உருவான விதத்தை அந்தந்த இயக்குநர்கள் பகிர்ந்துகொண்டனர். மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்த இந்தப் பிறந்தநாள் விழா நள்ளிரவுவரை சென்றிருக்கிறது. விழாவின் இறுதியில் 'நாயகன்' படத்தில் இடம்பெற்ற 'தென்பாண்டி சீமையிலே' பாடி மிக மகிழ்ச்சியோடு நிறைவு செய்திருக்கிறார்கள். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு 'பிசாசு 2' படத்தின் அறிவிப்பும் வந்திருக்கிறது. பிறந்தநாள் வாழ்த்துகள் மிஷ்கின்!

நியூஸ் காக்டெயில்
நியூஸ் காக்டெயில்

ல்வி இலவசம் என்றாலும் சீருடையும் புத்தகமும்கூட வாங்க வழியில்லாமல் பலர் இருந்தனர். அதையெல்லாம் இலவசமாக வழங்கி அவர்களின் கல்வி தடைப்படாமல் இருக்க உதவிய வரலாறு தமிழக அரசுகளுக்கு உண்டு. ஆனால் இன்று கொரோனா ஊரடங்கில் பள்ளிகள் எல்லாம் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடக்கின்றன. புத்தகம் வாங்கவே முடியாத மாணவர்கள் ஆன்லைனில் கல்வி பயில செல்போனிற்கு எங்கு போவார்கள்? ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்க இயலாத, சென்னைக் கொடுங்கையூரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் சாமுவேல் சாக்கடைக் கழிவகற்றும் பணிசெய்வதாகச் செய்தி வெளியானது. இதனையடுத்து அந்த மாணவனுக்கு தி.மு.க சார்பில் இலவச மடிக்கணினி வழங்கினார் உதயநிதி ஸ்டாலின். கல்வி எல்லோருக்கும் கிடைக்க எதுவும் தடையாக இல்லாத நிலையை இன்றைய அரசு உருவாக்க வேண்டும்.

நியூஸ் காக்டெயில்

விநோதமாக ஒன்றைச் செய்வது, அதை அப்படியே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்வது என்பது கொரோனாவைவிட வேகமாகப் பரவும் வியாதி. தாங்கள் செய்வது சரியா, தவறா என யோசனையெல்லாம் இவர்களுக்கு இருப்பது இல்லை. இப்படி ‘லைக், கமெண்ட், ஷேர்’ நோய்க்கு அடிமையான சேலம் மாவட்டம் மேட்டூரைச் சார்ந்த சுரேஷ் என்ற நபர், தான் செய்த குற்றச் செயலை வீடியோ எடுத்து வெளியிட, அவரைப் போலீஸ் கைது செய்திருக்கிறார்கள். சுரேஷ் மற்றும் அவரின் நண்பர்கள், ஆறடி நீளமுள்ள பாம்பை வெட்டி, மீன் போல சுத்தம் செய்து, மசாலா தடவிப் பொரித்து, மதுவிற்கு சைடிஷ்ஷாக சாப்பிட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவெற்றியுள்ளனர். வீடியோ வைரல் ஆக, சட்டத்திற்குப் புறம்பாக பாம்புக் கறி சாப்பிட்டதாக வழக்கில் சிக்கியுள்ளனர். எப்படியாவது பாம்பு பழி வாங்கிவிடும் என்பது உண்மைதான்போல.

நியூஸ் காக்டெயில்

கொரோனாவால் அதிகம் கவனம் பெற்ற மருத்துவர்களில் ஒருவர் சித்த மருத்துவர் வீரபாபு. ஜவஹர் பொறியியல் கல்லூரியில் கோவிட்-19 நோயாளிகளுக்காக சித்த மருத்துவ மையத்தை நடத்திவந்தவர். திடீரென அந்த மையத்திலிருந்து விலகி புதிய பயணம் தொடங்கியிருக்கிறார். தீவிர ரஜினி ரசிகரான இவர், அவரின் திரைப்படமான ‘உழைப்பாளி’ எனும் பெயரில் உணவகம் ஒன்றை கடந்த ஆண்டு தொடங்கி பத்து ரூபாய்க்கு உணவு வழங்கிவருகிறார். இப்போது உழைப்பாளி மருத்துவமனையைத் தொடங்கி பத்து ரூபாய்க்கு மருத்துவம் என அறிவித்திருக்கிறார். மெர்சல் மருத்துவர்!