Published:Updated:

``அக்னிபத் வீரர்களுக்கு, துணை ராணுவத்தில் 10% இட ஒதுக்கீடு" - மத்திய உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

மத்திய ஆயுத காவல்படை மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஆள் சேர்ப்பில், அக்னிபத் வீரர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது.

``அக்னிபத் வீரர்களுக்கு, துணை ராணுவத்தில் 10% இட ஒதுக்கீடு" - மத்திய உள்துறை அமைச்சகம்

மத்திய ஆயுத காவல்படை மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஆள் சேர்ப்பில், அக்னிபத் வீரர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது.

Published:Updated:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

இந்திய ராணுவத்தில் புதிய முறையில் ஆள் சேர்க்கும்விதமாக, `அக்னிபத்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள்முதலே, இந்தத் திட்டத்துக்கு பல தரப்புகளிலிருந்து ஆதரவுகளும் எதிர்ப்புகளும் வந்துகொண்டேயிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்தத் திட்டத்துக்கு எதிராக, இளைஞர்கள் போராட்டங்களும் நடத்திவருகின்றனர். அதிலும் பீகார், தெலங்கானா போன்ற மாநிலங்களில் போராட்டத்தில் ரயில்களுக்கு தீவைப்பு சம்பவம் எனப் போராட்டக்களம் கலவரமாக மாறியது.

இந்த நிலையில் இத்தகைய போராட்டங்கள், கலவரங்களுக்கு மத்தியில், துணை ராணுவமான மத்திய ஆயுத காவல்படையில் அக்னிபத் வீரர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.

அக்னிபத் - திட்டம்
அக்னிபத் - திட்டம்

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், ``மத்திய ஆயுத காவல்படை (CAPF) மற்றும்அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் பிரிவில் ஆள் சேர்ப்புக்காக, அக்னிபத் வீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பைத் தாண்டி மூன்று ஆண்டுகள் வயது தளர்வு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவுசெய்திருக்கிறது. முதல் பேட்ச் அக்னிபத் வீரர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பைத் தாண்டி ஐந்து ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படும். மேலும், மத்திய ஆயுத காவல்படை மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஆள் சேர்ப்பில், அக்னிபத் வீரர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கவும் உள்துறை அமைச்சகம் முடிவுசெய்திருக்கிறது" என அறிவித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism