Published:Updated:

முல்லைப்பெரியாறு அணையில் 16 மாதங்களுக்குப் பின் மூவர் குழு ஆய்வு!

எம்.கணேஷ்
முல்லைப்பெரியாறு அணையில் 16 மாதங்களுக்குப் பின் மூவர் குழு ஆய்வு!
முல்லைப்பெரியாறு அணையில் 16 மாதங்களுக்குப் பின் மூவர் குழு ஆய்வு!
முல்லைப்பெரியாறு அணையில் 16 மாதங்களுக்குப் பின் மூவர் குழு ஆய்வு!

முல்லைப்பெரியாறு அணையில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முல்லைப்பெரியாறு அணையில் 16 மாதங்களுக்குப் பின், இன்று, புதிய தலைவரைக் கொண்ட மூவர் கண்காணிப்புக் குழு ஆய்வு நடத்தியது. உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவின் புதிய தலைவரான மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் குல்சன் ராஜ் தலைமையில், தமிழக பொதுப்பணித்துறையின் முதன்மை அரசு செயலர் பிரபாகரன், கேரள நீர்வள ஆதார அமைப்பின் அரசு செயலர் டிங்கு பிஸ்வால் ஆகியோர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

மெயின் அணையில் முதலில் ஆய்வு நடத்திய கண்காணிப்புக் குழு அடுத்ததாகப் பேபி அணையிலும் ஆய்வு மேற்கொண்டது. பின்பு, சட்டர்களில் ஆய்வு நடத்தினர். முல்லைப்பெரியாறு அணையில் இதற்கு முந்தைய மூவர் கண்காணிப்புக் குழுவின் ஆய்வு கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏற்கெனவே கடந்த அக்டோபர் 16-ம் தேதி நடக்க இருந்த மூவர் குழுவின் ஆய்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முல்லைப்பெரியாறு அணையில் 16 மாதங்களுக்குப் பின் மூவர் குழு ஆய்வு!

இன்றைய ஆய்வு குறித்து இன்று மாலை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கண்காணிப்புக் குழு மேற்கொண்ட ஆய்வு குறித்து தெரியப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.