Published:Updated:

மனச்சிறையில் சில மர்மங்கள் - 8

மனச்சிறையில் சில மர்மங்கள் - 8
பிரீமியம் ஸ்டோரி
மனச்சிறையில் சில மர்மங்கள் - 8

நசையறு மனம் கேட்டாள்...டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

மனச்சிறையில் சில மர்மங்கள் - 8

நசையறு மனம் கேட்டாள்...டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

Published:Updated:
மனச்சிறையில் சில மர்மங்கள் - 8
பிரீமியம் ஸ்டோரி
மனச்சிறையில் சில மர்மங்கள் - 8
மனச்சிறையில் சில மர்மங்கள் - 8

“ஏய் ஏய் மீனா, ப்ளீஸ் நீ என் வீட்டுக்கு வராதே” என்று சொல்லிவிட்டாள் ஹேமா.

“ஏன்?” என்றாள் மீனா.

“உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எங்கம்மா என்னைத் திட்டிக்கிட்டே இருக்காங்க. நீ ரொம்ப குட் கேர்ளாம். நான் உன்னை மாதிரி ஏன் இல்லைன்னு டெய்லி திட்டுறாங்கப்பா. இனிமே நான் உங்க வீட்டுக்கு வர்றேன்” என்று ஹேமா சொல்லிவிட, மீனா அன்றிலிருந்து ஹேமா வீட்டுக்குப் போவதை நிறுத்திக்கொண்டாள்.

மகள் தனியே உட்கார்ந்துக்கொண்டிருப்பதைக் கவனித்த மீனாவின் அம்மா, “என்னாச்சுச் செல்லம், ஹேமா வீட்டுக்குப் போகலையா?” என்றாள்.

“அவ இனி வராதேனுட்டா” என்றாள் மீனா மரத்துப்போன குரலில்.

“ஏன்?”

மீனா நடந்ததைச் சொல்ல, அம்மா உடனே, “முதல்ல உனக்குச் சுத்திப்போடணும். ஊர் கண்ணெல்லாம் என் பிள்ளை மேலதான்” என்று உப்புக் கற்களால் மகளைச் சுற்றி எடுத்தாள். “சரி, நீ உன் பொம்மைகளோட போய் விளையாடு. நான் போன் பண்ணி ஹேமாவை இங்கே வரச் சொல்றேன்.”

ஹேமா வந்தாள். மீனாவுக்கு ஓர் அதிர்ச்சி தரலாம் என்று சத்தம்போடாமல் பின்னாலிருந்து, அவள் கண்களை மறைக்கத் திட்டம்போட்டு இரண்டு அடி அறையினுள் வந்ததும்தான் அதைக் கவனித்தாள்.

மீனா கைகளை அசைத்து யாரிடமோ பேசிக்கொண்டிருந்தாள், “விடு, என்கிட்ட இப்படிப் பேசாதேன்னு எத்தனை தடவை அம்மா சொல்லியிருக்கா. என்னால தாங்க முடியலையே” என்று அழுகையுடன் முகத்தை மூடிக்கொண்டாள் மீனா.

ஹேமா திடுக்கிட்டு அறையைச் சுற்றிப் பார்த்தாள், யாருமே இல்லை. பிறகு யாருடன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறாள் மீனா?

அப்போதுதான் அறையினுள் நுழைந்தவளைப் போல, “மீனா” என்று அழைத்தபடியே உள்ளே போனாள்.

மீனா கண்களைத் துடைத்துக்கொண்டு, எதுவுமே நடக்காததுபோல ஹேமாவைப் பார்த்தாள். அவள் கண்களில் நீர் ததும்புவதை ஹேமா கவனித்துவிட்டாள்.  “என்ன, யார்கிட்டப் பேசிக்கிட்டு இருந்தே?”

“இல்லையே, நான் யார்கிட்டயும் பேசலையே.”

“சரி... வா, வெளியேபோய் டென்னிஸ் ஆடலாம்.”

“இல்லை, நான் வரலை.”

“ஏன்?”

“டென்னிஸ் ஒரே போர். எனக்குப் பிடிக்காது.”

“சரி வா, நாம ரெண்டுபேரும் சேர்ந்து ஹோம் ஒர்க் பண்ணலாம்.”

“அதெல்லாம் வேண்டாம்” என்ற மீனா அந்த இடத்தைவிட்டு நகரவேயில்லை.

“நான் ஆன்ட்டிகிட்ட போய் ஜூஸ் வாங்கிட்டு வர்றேன்” என்று ஓடினாள். சமையல் அறையில் மீனாவின் அம்மாவை நெருங்கி, “மீனாவுக்கு என்னாச்சு ஆன்ட்டி?” என்றாள்.

“அவளுக்கு என்ன, நல்லாத்தானே இருக்கா…”

“ஸ்கூல் திறந்ததுலேர்ந்தே அவ சரியாவே இல்லை. மிஸ்ஸும் சொன்னாங்க…”

“என்ன சொன்னாங்க?”

“அவ கிளாஸை கவனிக்கலையாம், ஸ்டாண்ட் அப் ஆன் தி பென்ஞ்ச்னு சொல்லிட்டாங்க.

இன்னொருநாள், ஹோம் ஒர்க்கை செய்யலைன்னு கெட் அவுட் ஆஃப் தி கிளாஸ்னு சொல்லிட்டாங்க.”

அம்மாவால் இதை நம்பவே முடியவில்லை.  

“இப்படி எல்லாம் செய்யவே மாட்டாளே….” என்றபடி, மகளின் அறைக்குப் போனாள்.

அவள் ஸ்கூல் பையைத் திறந்து நோட்டுப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தாள். ஹேமா சொன்னது உண்மைதான் என்று புரிந்தது.

சில வாரங்களாகவே மீனா சாப்பிட ஆர்வமின்றி மிகவும் அமைதியாக இருந்ததும் நினைவுக்கு வந்தது.

அம்மா கவலையுற்று பால்கனியில் நின்றுகொண்டிருந்த மகளைக் கவனித்தாள். சோர்வாகச் சாய்ந்துகொண்டிருந்த அன்பு மகள் திடீரென்று, “சீ, போசாதே போ!” என்று விருட்டென திரும்பிக்கொண்டு, கண்கலங்கி காதுகளைக் கைகளால் பொத்திக்கொள்ள அம்மாவுக்கு பகீர் என்றது. 

உடனே, “மீனா” என்று அழைத்தாள்.

மீனா மிரண்டுபோய்த் திரும்பினாள், “என்ன பண்ணுது உனக்கு? ஏன் நீயாப் பேசிக்கிற?”

“இல்லையே, நான் பேசலையே…” என்று மீனா மேலும் மிரண்டு விழிக்க, உடனே தன் கணவனுக்கு போன் செய்தாள் தாய்.

‘‘என்னங்க... எனக்குப் பயமா இருக்கு. என் குழந்தைக்கு என்னமோ ஆயிடுச்சு” என்று விசும்பினாள்.

மாலை வீடு திரும்பிய கணவர், “எங்க பாட்டியும் எப்பயாவது இப்படித்தான், தானாகப் பேசிப்பாங்க. ஒண்ணும் பெரிய விஷயமில்லை, விடு” என்றார்.

“தானா பேசுறத விடுங்க. ஏன் கிளாஸ் ஒர்க், ஹோம் ஒர்க் எல்லாம் எழுதலை? ஏன் முன்னை மாதிரி கலகலப்பா இல்லை? எனக்கென்னவோ பயமா இருக்கு.  டாக்டர்கிட்டப் போகலாம்.”

“எதுக்கெடுத்தாலும் அபாயச் சங்கை ஊதுறதே வேலை உனக்கு” என்றபடி தன் வேலையில் மூழ்கினார்.

ஆனால், அம்மாவால் அமைதியாக இருக்க முடியவில்லை. மகளை இறுக்க அணைத்துக் கொண்டாள், “மீனா, நீ எவ்வளவு குட் கேர்ள்.  எல்லா வேலையும் நீயே செய்துடுவியே செல்லம். ஏன் வர வர ஹோம் ஒர்க்கைக்கூட எழுதுறதே இல்லை நீ?”

மீனா தன் தவற்றை மறைக்காமல், “மிஸ்கூட உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க” என்றாள்.

“ஓ!”

“போன மண்டேவே சொன்னாங்க. நான்தான் சொல்ல மறந்துட்டேன்.”

சற்றுநேரம் அமைதியாய் இருந்த மீனா, திடீரென்று, “அம்மா, நான் செத்துப் போயிடவா?” என்றாள்.

அம்மாவுக்குத் தூக்கிவாரிப்போட்டது. மகளைக் கட்டிக்கொண்டு அவள் முகத்தை உற்றுப் பார்த்தாள், “ஏம்மா அப்படிச் சொல்ற? என்னாச்சு உனக்கு?”

“எனக்கு லைஃப்பே பிடிக்கலை.  பயமா இருக்கு.  என்னாலதான் உங்களுக்குக் கஷ்டம்” என்று அழுதபடியே அம்மாவின் நெஞ்சில் முகத்தைப் புதைத்தாள்.

“சே... சே, என்ன பேச்சு இது?  அம்மா உன்மேல உயிரையே வெச்சிருக்கேன். அழாதே கண்ணு” என்று அம்மா அவளைத் தட்டிக்கொடுத்து, தூங்க வைத்தார். மறுநாள் காலை, முதல் வேலையாக டாக்டருக்கு போன் செய்து, பிரச்னையைக் கூறினாள்.

“எதற்கும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட்கிட்டக் கூட்டிட்டுப் போறதுதான் நல்லது” என்று அவர் சொல்ல, சைக்கியாட்ரிஸ்ட்டிடம் அழைத்துச் சென்றாள் அம்மா.

டாக்டர் எடுத்த எடுப்பிலேயே, “குழந்தைகிட்டத் தனியாப் பேசணும்” என்றார்.

“குழந்தைகளுக்குக்கூடவா மனநோய் வரும்?” என்ற எண்ணமே அவளைச் சஞ்சலப்படுத்தியது.

மீனாவை, டாக்டர் உள்ளே அழைத்துச் சென்றார்.  சிறிதுநேரம் கழித்து அம்மாவை உள்ளே அழைத்தார். டாக்டர் குழந்தையிடம், “உன் காதுல கேட்குற குரல்கள் ஹாப்பியா பேசுதா?... சோகமாப் பேசுதா?” என்று கேட்க, குழந்தை, “ஸேடா பேசுது, திட்டுது” என்றதைக் கேட்டதும் அம்மா குழம்பிப்போய் டாக்டரைப் பார்க்க குழந்தையிடம், “ஓகே, போய் ஒரு டிராயிங் வரைஞ்சிட்டு வாயேன்” என்று வெளியே அனுப்பிவிட்டு, தாயிடம் பேசினார் டாக்டர். “எத்தனைநாளா இப்படி டல்லா இருக்கா மீனா?”

“அவ எப்பவுமே கொஞ்சம் அமைதியான டைப்தான். ஒரு மாசமா இப்படி இருக்கிறா” என்றாள் அம்மா.

டாக்டர்,  “கவலைப்படாதீங்க.  சரி பண்ணிடலாம்” என்றதும், “இவளுக்கு என்ன பிராப்ளம் டாக்டர்?” என்றாள் அம்மா ஆதங்கமாய்.

“குழந்தை மன அழுத்தத்தில் இருக்கா. அதனால்தான் எதுலேயும் ஆர்வமில்லை, கவனமில்லை. தூக்கம், பசி, பிடித்ததுனு எல்லாமே குறைஞ்சிருக்கு.  இதைக் கவனிக்காம விட்டதுனால பிரச்னை கொஞ்சம் ஆழமாகி, அவ காதுல திட்டுற மாதிரி, மிரட்டுற மாதிரிக் குரல்கள் கேட்குது.  அதான் அவ ரொம்பப் பயந்துபோயிருக்கா.”

“அவ மூளையில் சுரக்கவேண்டிய சில சத்துக்கள் இப்பக் குறைவா இருக்கு. மாத்திரை சாப்பிட்டாச் சரியாப் போயிடும். சில வாரத்துல பழைய மாதிரியே குட் கேர்ள் ஆயிடுவா, டோண்ட் ஒர்ரி” என்று டாக்டர் மாத்திரைகளை எழுதித்தந்தார்.

மாத்திரைகள் கொடுத்ததும் படிப்படியாக, மீனா முன்னேறி வர அம்மாவுக்கு அப்போதுதான் நம்பிக்கையே வந்தது.  சில வாரங்களில் மீனா பழைய மாதிரியே சுயமுனைப்புடன் ஹோம் ஒர்க், கிளாஸ் ஒர்க் எல்லாமே சரியாக எழுதி, பரீட்சையிலும் நல்ல மதிப்பெண் வாங்கிவிட, சாக்லெட் சகிதம்போய் டாக்டருக்கு நன்றி சொன்னாள், “என் பொண்ணு நல்லாயிட்டா டாக்டர்.”

“வெரி குட்” என்று டாக்டர் மறுபடியும் மாத்திரை சீட்டை நீட்ட, “அவதான் நல்லாயிட்டாளே மேடம், இனிமே எதுக்கு மாத்திரை?” என்றாள் அம்மா.

மனச்சிறையில் சில மர்மங்கள் - 8

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“மருந்து ரத்தத்துல இருக்குறதனாலதான் மூளை சரியா இயங்குது.  இப்ப திடீர்னு மருந்தை நிறுத்திட்டா, மறுபடியும் பிரச்னை தலைதூக்கிடும். அதனால் நான் செக்பண்ணிச் சொல்றவரைக்கும் மருந்தை நிறுத்தக் கூடாது” என்று டாக்டர், அம்மாவுக்கு விளக்கம் சொல்லிவிட்டு மீனாவை அழைத்து, “இப்ப நீ ரொம்ப சூப்பரா படிக்கிறியாமே, வெரி குட் என மெல்லச் சிரித்துத் தலையாட்ட, “மீனா நல்லானதே போதும் டாக்டர்” என்று சீட்டுடன் கிளம்பினாள் அம்மா.

(மர்மம் அறிவோம்)