Published:Updated:

மனச்சிறையில் சில மர்மங்கள் - 9

மனச்சிறையில் சில மர்மங்கள் - 9
பிரீமியம் ஸ்டோரி
மனச்சிறையில் சில மர்மங்கள் - 9

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

மனச்சிறையில் சில மர்மங்கள் - 9

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

Published:Updated:
மனச்சிறையில் சில மர்மங்கள் - 9
பிரீமியம் ஸ்டோரி
மனச்சிறையில் சில மர்மங்கள் - 9
மனச்சிறையில் சில மர்மங்கள் - 9

வாசுவைப் பற்றி அவன் அம்மா எப்போதும் கவலைப்பட்டதே கிடையாது. மற்ற குழந்தைகளாவது மணலில் விளையாடுவது, கைகளை அழுக்காக்கிக் கொள்வது, ஹோம் ஒர்க் எழுதாமல் வம்பு செய்வது என்று இருப்பார்கள். ஆனால், வாசு ஒரு நாள்கூட அம்மாவுக்கு எந்தக் கஷ்டமும் கொடுத்ததே இல்லை.

தன் வேலைகளைத் தானே செய்துகொள்வான். அதேபோல், எல்லா விஷயத்திலும் ரொம்பவே சுத்தமாக இருப்பான். கழிப்பறைக்குப் போய் வந்தால் கையைச் சோப் போட்டு கழுவுவது, சுத்தமான மேசை நாற்காலிகளில் மட்டும் அமர்வது, யூனிஃபார்ம் சட்டையின் மடிப்புக்கூட கலையாமல் வீட்டுக்கு வருவது என்று எல்லாவற்றிலுமே சுத்தத்தைக் கடைப்பிடிப்பான். அதுவும் ஏழு வயசிலேயே.

வாசு, சமீபகாலமாய் ரொம்பவே அதிகமாகச் சாமி கும்பிட ஆரம்பித்திருந்தான்.

பள்ளிக்கூடத்திலும் அதிகபட்ச பக்தியைக் கடைப்பிடித்தான். எந்த அளவுக்கு என்றால், ஒவ்வொரு முறை எழுத ஆரம்பிக்கும்போதும் பிள்ளையார் சுழி போட வேண்டும் என்று ஆரம்பித்தவன், ஒரு சுழிக்குப் பதிலாக 11 சுழிகள் போட ஆரம்பித்தான். அவன் பிள்ளையார் சுழிகள் போடுவதற்குள்... மிஸ், போர்டில் எழுதியதை அழித்துவிட்டு, அடுத்த பத்தியை எழுதிவிடுவார். இதனால், கிளாஸ் ஒர்க் நோட்டை அவனால் சரியாக நிரப்ப முடியவில்லை.

இதற்கிடையில், பள்ளிக்கூடத்தில் சுகாதாரம் பற்றி வகுப்பு நடத்தினாலும் நடத்தினார்கள், இவன், கிருமிகள் பரவி இருப்பதாக நினைத்து நினைத்துப் பயப்பட ஆரம்பித்தான். மற்ற மாணவர்கள் தன்னைத் தொட்டால் அவனுக்குப் பிடிக்காமல் போனது, யார் அருகிலும் உட்கார்ந்து சாப்பிடவும் அவனுக்குப் பிடிக்கவில்லை. மற்றவர் மூச்சுக்காற்று தன் மீது பட்டால் தனக்கு ஏதாவது நோய் ஏற்பட்டு விடுமோ என்று பயந்து, உடனே ஓடிப்போய் தன் கைகளைக் கழுவ ஆரம்பித்தான். அதுவும் ஒரு தடவை, இரண்டு தடவை இல்லை. சரியாக 11 முறை கழுவினால்தான் சுத்தமாகிவிட்டதாய் அவனுக்குத் தோன்றியது. 

“பாத்ரூம் போய் இவ்வளவு நேரமாச்சு, இன்னும் அங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கே” என்று அம்மாவும், அப்பாவும் எவ்வளவோ திட்டியும் விட்டார்கள், அதுபற்றிக் கவலையேபடாமல் தனக்குத் திருப்தி வரும்வரை குளித்துக்கொண்டே இருந்தான் வாசு.  

ஏன் இப்படி இருக்கிறான், எப்படி அவனிடம் இதுபற்றிக் கேட்பது என்று யோசிக்கும்போதே, வாசு அம்மாவை உலுக்கிக்கேட்டான். “அம்மா, நான் நல்ல பையன்தானே? என்னை நல்ல பையன்னு சொல்லுங்களேன்.”

மனச்சிறையில் சில மர்மங்கள் - 9

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஆமாண்டா, நீ ரொம்ப நல்ல பையன்தான்” என்று அம்மா அவனைத் தன் நெஞ்சோடு அணைக்க, வாசு திமிறிக்கொண்டு விலகினான். “என்னைக் கட்டிப் பிடிக்காதீங்க… எனக்குக் கெட்டகெட்ட எண்ணங்களா வருது.”

அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. “சேசே, நீ எவ்வளவு குட்டிப்பையன். உனக்கு அப்படி எல்லாம் வராதுடா.  யூ ஆர் எ குட் பாய்.”

வாசு அழவே ஆரம்பித்துவிட்டான். “இல்லை. நான் குட் பாய் இல்லை. எனக்கு ரொம்ப ரொம்ப பேட் தாட்ஸ் எல்லாம் வருது. என்னால அதை நிறுத்தவே முடியலை. எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு.”

வாசுவின் அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன பேட் தாட்ஸ்? அம்மாகிட்டச் சொல்லு. நான் சரி பண்றேன்.”

“என்னை பேட் பாய்ன்னு நினைக்கக் கூடாது.”

“இல்லை, நினைக்கமாட்டேன். தைரியமாச் சொல்லு.”

வாசு தயங்கிதயங்கிச் சொன்னான், “நீங்களும் அப்பாவும் ஒண்ணா இருக்குறதைப் பார்த்தா எனக்கு பேட் தாட்ஸ் எல்லாம் வருது.”

அய்யய்யோ!  பார்க்கக் கூடாத எதையாவது பார்த்துவிட்டு பயந்திருக்கிறானோ. இருக்காதே, உச்சகட்ட எச்சரிக்கையைத்தானே இதுவரை கடைப்பிடித்து வருகிறோம். அம்மா என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க, பையன் அழுதபடியே தூங்கிப்போனான். அடுத்தநாள் மாலை வாசுவின் ஸ்கூல் டீச்சர், அவனின் டைரியில், “பேரன்ட்ஸ் வந்து பார்க்கவும்” என்று எழுதி அனுப்பியிருந்தார்.

“இது என்ன, புது பிரச்னை?” என்று பெற்றோர் இருவரும் மறுநாள் டீச்சர் எதிரில் ஆஜராகினர்.

வாசுவைப் பற்றி டீச்சர் வண்டி வண்டியாய் புகார்களை வாரி இறைத்தார். “வாசு கிளாஸை கவனிக்கிறதே இல்லை.  எப்பப் பார்த்தாலும் நோட் புக்ல எதையாவது கிறுக்கிக்கிட்டு இருக்கான். கிளாஸ் ஒர்க், ஹோம் ஒர்க் எதையுமே சரியா கம்ப்ளீட் பண்ணுறதே இல்லை. மத்த பசங்க தன்னைத் தொட்டவுடனே ஆத்திரத்தோட கையத் தொடச்சிக்கிறான், ஊதி விட்டுக்குறான். எல்லாப் பசங்களும் அவனைப் பத்தி கம்ப்ளைன்ட் பண்ணுறாங்க. இவன் யாரோடவும் சேர மாட்டேன்றான். தனியா உட்கார்ந்து சாப்பிடுறான். உங்க பையன் சரியா இல்லை. அவனை நீங்க திருத்தி மத்த பசங்ககிட்ட சேர்ந்து பழக வெக்கலைன்னா இந்த ஸ்கூலை அவன் கன்டினியூ பண்ணுறது ரொம்பக் கஷ்டம்.”

டீச்சர் சொல்வது எதுவும் பொய் அல்ல  என்று வாசுவின் அப்பா, அம்மா இருவரின் உள்ளுணர்வும் சொல்லியது.

வீட்டில் அம்மாவுக்கு வேலையில் மனசே ஓடவில்லை. அவளைப் பார்க்க வந்த தோழி, “என்னடி... இப்படி டல்லா இருக்கே?” என்று கேட்க, தன் மகனைப் பற்றிச் சொன்னாள். “உன் பையனை ஒரு சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட கூட்டிட்டுப் போயேன்” என்றாள்.

வாசுவை சைக்கியாட்ரிஸ்ட்டிடம் கூட்டிப் போயினர். டாக்டரிடம் அவன் நிறையப் பேசினான். “என் மனசு என்னை எப்பவுமே பேட் பாய்னே சொல்லுது டாக்டர். நான் குட் பாயா இருக்கணும்னுதான் ட்ரை பண்றேன். ஆனா, கெட்டகெட்ட தாட்ஸா வருது. என்னால அதை கன்ட்ரோலே பண்ண முடியலை.”

மனச்சிறையில் சில மர்மங்கள் - 9

வாசுவின் பெற்றோருக்கு பல சந்தேகங்கள் இருந்தன. “என்ன டாக்டர் பிராப்ளம் அவனுக்கு?”

“ஓ.சி.டி-னு சொல்வோம். அப்ஸெசிவ் கம்பல்சிவ் டிஸ்ஸாடர். அதாவது ஒரே எண்ணம் திரும்பத்திரும்ப மனசுல சுழன்றுக்கிட்டே இருக்கும். அது அனாவசிய சிந்தனை. அதை நிறுத்திட்டு, வேற வேலையப் பார்க்கலாம்னு அவங்களுக்கே தெரியும். இருந்தாலும், அவங்க கன்ட்ரோலையும் மீறி அந்த எண்ணம் மனசுலேயே ஒட்டிக்கிட்டு இருக்குறதைத்தான் அப்செஷன்னு சொல்வோம். பொதுவா இந்த மாதிரி அஞ்சு ரக அப்செஷன்ஸ் இருக்கலாம். சுத்தம், அசுத்தம் என்பதைப் பற்றிய யோசனை ஒரு டைப். கடவுள் வழிபாடு பத்தின யோசனை ரெண்டாவது டைப். வன்முறையைப் பற்றிய யோசனை மூணாவது ரகம். இது சரியா, தவறா என்பது மாதிரியான நியாய தர்மச் சிந்தனைகள் இன்னொரு டைப். செக்ஸ் சம்பந்தமான யோசனைகள் ஐந்தாவது டைப்.”

“இந்த மாதிரி எண்ணங்கள் வர்றதை நிறுத்தணும்னுதான் வாசுவும் ட்ரை பண்றான். இத்தனை தடவை சாமி கும்பிடணும், இத்தனை தடவை கை கழுவணும்னு எல்லாம் அவனே சில சம்பிரதாயங்களைச் செய்யுறான். இந்தச் சம்பிரதாயங்களைச் செய்தே தீரணும்னு அவன் மனசு கட்டாயப்படுத்துது.  செய்யலைன்னா மனசு அமைதியே ஆகமாட்டேங்குதுனுதான் தனக்குப் பிடிக்கலைனாலும், வேறு வழியே இல்லாம கட்டாயத்துனால சில காரியங்களை அவன் திரும்பத்திரும்பச் செய்றான்.  இதைத்தான் கம்பல்சிவ் பிஹேவியர்னு சொல்வோம். திரும்பத்திரும்ப ஒரே அப்ஸெசிவ் எண்ணம், திரும்பத்திரும்ப ஒரே கம்பல்சிவ் செயல்கள்னு இருக்குறதனாலேதான் இதை அப்ஸெசிவ் கம்பல்சிவ் டிஸ்ஸாடர்னு சொல்றோம்.”

“ஏன் டாக்டர் இவனுக்கு இப்படி எல்லாம் வருது?”

டாக்டர் தலையசைத்தார். “ஆனா இதைவிட மோசமான, வைத்தியமே பண்ண முடியாத வியாதி எல்லாம் எவ்வளவோ இருக்கே. இவனுக்கு இருக்குறது ஒரு சிம்பிள் ரசாயனக் குறைபாடு. நம்ம மூளையில செரடோனின்ங்குற ஒரு ரசாயனம் இருக்கு. இதுதான் நம்ம மனசோட அம்மா மாதிரி. இதைச் செய், இதைச் செய்யாதே, இப்படி இரு, இருக்காதேன்னு எல்லாம் நம்ம மனசைக் கன்ட்ரோல் பண்ணுறதே இந்த செரடோனின்தான். இந்த செரடோனின் சரியான அளவுல சுரந்தா மனசு சரியா இயங்கும், கட்டுப்பாட்டோட இருக்கும். ஆனா, சில பேருக்கு இந்த செரடோனின் அளவு குறைவா இருக்குறதுனால அவங்க மனசு இந்தச் சுயக் கட்டுப்பாட்டை இழந்திடுது. அதனாலதான் மனசு தறிகெட்டு ஏதோதோ வேண்டாத விஷயங்களைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சிடுது.”

“வாசுவுக்கு இந்த செரடோனினை சரியான அளவுக்குக் கொண்டு வர முடியாதா டாக்டர்?”

“அதுக்குதான் இந்த மாத்திரை. இது வாசுவோட மூளையில வேலை செய்து செரடோனின் அளவை அதிகரிக்கும். செரடோனின் அதிகமாகி, இயல்பு அளவைத் தொட்டதும் இந்த அப்ஸெசிவ் எண்ணங்கள், இந்த கம்பல்சிவ் செயல்கள் எல்லாமே நின்னுடும். கவலைப்பட வேண்டாம்.”

(மர்மம் அறிவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism