Published:Updated:

மனச்சிறையில் சில மர்மங்கள் - 10

மனச்சிறையில் சில மர்மங்கள் - 10
பிரீமியம் ஸ்டோரி
மனச்சிறையில் சில மர்மங்கள் - 10

தொடர்டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்

மனச்சிறையில் சில மர்மங்கள் - 10

தொடர்டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
மனச்சிறையில் சில மர்மங்கள் - 10
பிரீமியம் ஸ்டோரி
மனச்சிறையில் சில மர்மங்கள் - 10
மனச்சிறையில் சில மர்மங்கள் - 10

கெட்டவார்த்தை படலம்

‘‘பெற்றால்தான் பிள்ளையா, தத்தெடுத்துக்கொள்ளலாமே” என்ற முடிவுக்கு வந்தார்கள் ஷோபாவும் ராஜுவும். குழந்தைகள் காப்பகத்துக்கு முதல் முறை போனபோதுதான் அவர்கள் குட்டி சூரியை சந்தித்தனர். சூரி தன் பெரிய கண்களும், பொக்கை வாயுமாகச் சிரித்த அந்த முதல் கணத்திலிருந்தே அவன்மீது ஒரு தனிப்பட்ட பிரியம் பீறிட ஆரம்பித்தது. அவனைவிட்டு வரவே மனமின்றி, “ப்ளீஸ் இப்பவே எங்ககிட்டக் குடுத்துடுங்க” என்று கெஞ்சினாள் ஷோபா. ஆனால், சட்டப்படி குழந்தையைத் தத்தெடுக்க கொஞ்சம் காலம் ஆனது. கடைசியாக, ஒரு நாள் சூரியை அவர்களிடமே ஒப்படைத்தார்கள். அன்றைக்குத்தான் ஷோபாவின் வாழ்வில் பொன்நாள்.

அன்றிலிருந்து சூரியை அன்பில் அபிஷேகித்து, ஆசையுடன் பராமரித்தாள் ஷோபா. நாளடைவில் சூரியின் மீதான அந்தப் பிரியம் மிக வலிமையான ஒரு பந்தமாகவே மாறிவிட, அவன் மேல் உயிரானாள் ஷோபா. “ரொம்ப செல்லம் கொடுத்துக் கெடுக்குற!” என்று பிறர் முகம் சுளித்ததையும் பொருட்படுத்தாமல், சூரியை ஒரு ராஜகுமாரன் மாதிரி சகல வசதிகளுடன் வளர்த்தாள். சூரியும் மிகவும் சுட்டி. மளமளவென வளர்ந்து தாயை மகிழ்வித்தான். போகப்போக எல்லோரும் அவனை “எங்க வீட்டுப் பிள்ளை” என ஏற்றுக் கொண்டுவிட்டனர்.

அந்தச் சமயத்தில்தான் பள்ளி ஆசிரியை, “சூரி அம்மா, உங்களோட கொஞ்சம் தனியாப் பேசணும். டைம் கிடைக்கும்போது ஸ்கூலுக்கு வாங்க” என்று போன் செய்தார்.

இரண்டு நாட்கள் கழித்து, பள்ளி ஆசிரியரைப் போய் பார்த்தபோது, ஒரு பெரிய குண்டைத் தூக்கி போட்டார் டீச்சர். “நானும் ரொம்ப நாளா கவனிச்சிக்கிட்டே வர்றேன், உங்க பையனோட நடத்தையே சரியில்லை. கிளாஸ் டைம்ல உடம்பை எப்படி எப்படியோ வளைச்சு காமெடி பண்றான். எல்லா பசங்களும் அவனை ஜோக்கர் மாதிரி பார்த்துச் சிரிக்கிறாங்க. கிளாஸோட அமைதியே போயிடுது. அதுகூடப் பரவாயில்லை. ஆனா ஐ ஆம் வெரி சாரி டூ டெல் யூ திஸ். உங்க பையன் ரொம்பக் கெட்ட வார்த்தை பேசுறான். காதுல கேட்க முடியாத அளவுக்கு ரொம்ப அசிங்கமாப் பேசுறான். நான் ஏற்கெனவே கூப்பிட்டு ரெண்டு தடவை வார்ன் பண்ணிட்டேன். அப்படி இருந்தும் துணிச்சலா அவன் பாட்டுக்கு என் முன்னாடியே அசிங்கமாப் பேசிக்கிட்டே போறான்.”

“இருக்கவே இருக்காது. நான் நம்பவே மாட்டேன். என் சூரி ரொம்ப நல்ல பையனாச்சே. அவனாவது கெட்ட வார்த்தையாவது” என்று ஆட்சேபிக்க வாயைத் திறந்த அம்மாவுக்கு சட்டென அப்போது தான் நினைவுக்கு வந்தது, வீட்டு வேலைக்காரியும், டிரைவரும்கூட இதுபற்றி முன்பு சாடை மாடையாகப் புகார் சொன்னது.

“இதுதான் லாஸ்ட் அண்ட் ஃபைனல் வார்னிங். உங்க பையன் இனி ஸ்கூல்ல இப்படிச் சில்மிஷம் பண்ணான்னா, பிரின்சிபல்கிட்ட ரிப்போர்ட் பண்றதைத் தவிர எனக்கு வேற வழியே இல்லை” என்றார் டீச்சர் மிகக் கோபமாய்.

அயர்வுடன் போய் சூரியை அழைத்துக் கொண்டாள் அம்மா. மகன் வண்டியில் ஏறும்வரை காத்திருந்துவிட்டு, “ஸ்கூல்ல கெட்ட வார்த்தை பேசினியாமே?” என்று கேட்கும்போதே அவள் குரல் நடுங்கி, கை உதறியது. அவனை அடிக்க கை துடித்தது. ஆனால், இதுவரை எதற்குமே அடித்திராத தன் அன்பு மகனை எப்படித் திடீரென்று அடிப்பது? எதுவாக இருந்தாலும், அன்பாய் பேசிச் சரி செய்யலாம் என்று தோன்றியது. அதற்குள் கண்களில் நீர் கரைபுரள, அதைத் துடைத்துக்கொண்டு, “ஏன் அப்படிப் பண்ணே?” என்றாள் கம்மியக் குரலில்.

சூரியின் கண்கள் பதற்றத்தில் அதிகமாய் படபடத்தன. அவன் கை பரபரப்பில் தானே லேசாய் காற்றில் கையெழுத்து போட்டு அடங்கியது.

“அம்மா கேக்குறேனில்லை, பதில் சொல்லு சூரி?”

அவன் சற்றுநேரம் பயந்து விழித்துவிட்டு, “எனக்கே தெரியலை மம்மி. தானா வாய்லேர்ந்து என்னென்னமோ வார்த்தை வந்துடுது. சாரி” என்றான்.

“அதெப்படி, உனக்கே தெரியாம தானா கெட்ட வார்த்தை வரும்?”

சூரி எதுவும் பேசாமல் முகத்தைக் கவிழ்த்துக்கொண்டான். அன்றெல்லாம் அம்மா பக்கத்திலேயே போகவில்லை.  சாப்பிடவில்லை. விளையாடப் போகவில்லை. அம்மாவும் கோபமாகவே இருந்ததால் அவனைச் சமாதானப்படுத்த முயற்சிக்கவில்லை. இரவு அவன் அவள் பக்கத்தில் வந்து படுத்து, வழக்கம்போல, அவள் இடுப்பின் மேல் முழங்காலைப் போட்டு வளைந்து சுருள, அந்த அணைப்பில் அவள் அவனை மன்னித்துவிட்டாள். “என் மேல பிராமிஸ் பண்ணு. இனி இப்படிக் கெட்ட வார்த்தை பேசக் கூடாது.”

“பிராமிஸ்” என்று சின்னக் குரலில் சொல்லிவிட்டு அவள் முதுகில் முகம் புதைத்தான் மகன்.

ஆனால், ஒரே வாரத்தில் ஆசிரியை முன்பைவிட அதிகக் கோபத்துடன், “உங்களோட பேசணும்” என்று சொல்ல, என்ன பிரச்னையோ என்று பயந்துகொண்டே பள்ளிக்கூடம் போனாள் அம்மா.

“நான் ஏற்கெனவே சொன்னேனில்லையா சூரி மம்மி. அவன் இன்னும் கெட்ட வார்த்தை பேசுறதை நிறுத்தலை. நாளைக்கு நீங்க வந்து பிரின்ஸிபாலை பாருங்க” என்று டீச்சர் கோபமாகப் போய்விட, சூரியைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கி, “ஏன் இப்படி எல்லாம் செய்து அம்மாவைக் கஷ்டப்படுத்துற” என்று மனம் உடைந்து கடிந்தாள் அம்மா.

“நான் வேணும்னு சொல்லலை மம்மி. வாய்லேர்ந்து அதுவாவே.’’

“ஷட் அப்! பொய் பேசாதே!” என்று அம்மா கத்திவிட, கோபித்துக்கொண்டு போய் சோஃபாவில் படுத்துக்கொண்டான் சூரி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனச்சிறையில் சில மர்மங்கள் - 10

மறுநாள் ஷோபாவிடம், ‘‘அவனை கண்டிச்சீங்களா?” என்றார் பிரின்சிபால்.

“பேசி பார்த்தேன் மேடம். அவன் வேணும்னே அப்படிச் செய்யலை, வாய்லேர்ந்து அவனை அறியாம அப்படியெல்லாம் வார்த்தைகள் வந்துடுறதா சொல்றான். ஸோ சாரி” என்றாள் அம்மா தலைகுனிந்து. 

“நான் சொன்னா நீங்க தப்பா நினைக்கக் கூடாது. இந்த பையனுக்கு டீசி கொடுக்க எனக்கு மனசில்லை. அதே சமயம் இந்த மாதிரி தப்பான நடவடிக்கையை சரிபடுத்தாம விட முடியாதே. நீங்க வேண்ணா சூரியை ஒரு சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட கூட்டிட்டுப் போங்களேன்” என்றார் தலைமை ஆசிரியை.

டாக்டர் என்றதுமே சூரிக்கு பயம் தலைக்கேறியது. அதுவும் டாக்டர் அவன் அம்மாவை அனுப்பிவிட்டு, “இங்கே வாயேன்” என்று அவனைப் பக்கத்தில் உட்கார வைக்க, அவனை அறியாமல் கண்ணிமைகள் படபடக்க ஆரம்பித்தன.

“உனக்குக் கப்பல் செய்யத் தெரியுமா?” என்று டாக்டர் காகிதத்தை நீட்டி, “எங்கே ஒரு கத்திக் கப்பல் செய் பார்ப்போம்’’ என்றார்.

டாக்டர், தொடர்ந்து கத்திக் கப்பல், பாய்மரக் கப்பல், ராக்கெட் என்று ஏதோதோ செய்ய ஊக்குவிக்க, ‘‘சரிதான் இந்த டாக்டர் ஊசி போடமாட்டாங்கபோல” என்று ரிலாக்ஸாகி, பயத்தை மறந்து ஆர்வமாய், மிக்கி மவுஸ், போக்கே மேன், டோரா புஜ்ஜி எல்லாம் வரைந்து காட்ட ஆரம்பித்தான். 

டாக்டர் சொன்ன கதையைக் கேட்டு முடித்து, பதிலுக்கு இவனும் ஒரு கதை எல்லாம் சொல்லி முடித்து, “வெரி குட் வெளிய போய் ராக்கெட் விடேன். நான் அம்மாகிட்ட பேசுறேன்” என்றார் டாக்டர்.

ஷோபாவிடம், “உங்க பையன் சாதாரணமா இருக்கும்போதும், தன்னை அறியாம ஏதோ சத்தம் போட்டுக்கிட்டே இருக்குறானே, அது எத்தனை நாளா இருக்கு?” என்றார் டாக்டர்.

“சத்தம் போடுறானா? நான் கவனிச்சதே இல்லையே!” என்று அதிர்ந்தாள் அம்மா.

“ம், லைட்டா சின்னச்சின்ன மிஷின் சத்தம், மிருக சத்தங்கள், கனைக்கிற, உருமுற சத்தம்…”

“ஓ, அது சும்மா விளையாட்டா அப்படித்தான்... அது ரொம்ப நாளா, கிட்டத்தட்ட ஒண்ணு ஒன்றரை வருஷமா….”

“ஐ ஸீ, திடீர்திடீர்னு கையை அசைக்கிறது? தோளைக் குலுக்குறது, டேபிளை இப்படி ஒரு மாதிரி தட்டுறானே, அது?”

“அதுவும் எப்பயாவது விளையாட்டாச் செய்வான் டாக்டர்?”

‘‘எத்தனை நாளா?”

“நான் சரியாக் கவனிக்கலை. ரொம்ப நாளா, ரெண்டு வருஷத்துக்கு மேலகூட இருக்கும். ஏன் டாக்டர் அதனால என்ன? அவன் என் தத்துப் பிள்ளை டாக்டர். அதனால அவனுக்கு மனசுல ஏதாவது பிரச்னையா? அவன் நிஜ அம்மாவை மிஸ் பண்றானா?”

“சே...சே. நத்திங் லைக் தட். நீங்க சொல்றது, அவன் டீச்சர் சொல்றது, நேர்ல பரிசோதனை செய்து பார்த்தது, இதை எல்லாம் வெச்சு பார்க்கும்போது உங்க பையனுக்கு ‘டொரெட் டிஸாடர்’ இருக்கும்னு தோணுது. இது ஒரு விதமான நரம்பு ரசாயனக் கோளாறு. இவனை மாதிரி சின்ன வயசு ஆம்பளை பசங்களுக்கு வர்ற பிராப்ளம். இந்த மாதிரி திடீர் திடீர்னு தன்னை அறியாம கெட்ட வார்த்தை பேசுறது, தன் கட்டுப்பாட்டை மீறி உடம்பு அசஞ்சி டிக்ஸ் ஏற்படுறது, அர்த்தமில்லாத சத்தங்கள் எழுப்புறது... எல்லாமே டொரெட்ல ஏற்படுற அறிகுறிகள்தான்.”

“தன்னை அறியாம கெட்ட வார்த்தை பேசுற மாதிரிகூட ஒரு வியாதி இருக்கா டாக்டர்? அதிசயமா இருக்கே!”

“ஆமா. இதுக்குனு சில மாத்திரைகள் இருக்கு. அதைச் சாப்பிட்டா இந்த மாதிரி பிரச்னையைக் கட்டுப்படுத்திடலாம்” என்று டாக்டர் மருந்துகளை எழுதி கையோடு பள்ளிகூடத்துக்கு ஒரு கடிதமும் எழுதித்தர, மறுநாள் சூரி, கடிதம் சகிதம் பள்ளிக்கூடம் போனான்.

இரண்டு மூன்று வாரங்களிலேயே அவனுடைய கெட்ட வார்த்தை பேசும் படலம் நின்றுவிட, “அப்பாடா, என் பிள்ளை பிழைத்தானே” என்று நிம்மதியுற்றாள் அவன் தாய். ஆனால், இப்படி எல்லாம் ஒரு வியாதியா என்கிற அவள் ஆச்சர்யம் மட்டும் தீர ரொம்ப நாளானது.

(மர்மம் அறிவோம்)