Published:Updated:

மனச்சிறையில் சில மர்மங்கள் - 11

மனச்சிறையில் சில மர்மங்கள் - 11
பிரீமியம் ஸ்டோரி
மனச்சிறையில் சில மர்மங்கள் - 11

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

மனச்சிறையில் சில மர்மங்கள் - 11

டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

Published:Updated:
மனச்சிறையில் சில மர்மங்கள் - 11
பிரீமியம் ஸ்டோரி
மனச்சிறையில் சில மர்மங்கள் - 11

அடைக்கும் தாழ்!

னநல மருத்துவர் பேச ஆரம்பித்ததுமே, தன் மொத்தக் கதையையும் சொல்லிப் புலம்பி அழுதாள் மாதவி. “அவர்மீது நான் உசுரையே வெச்சி தொலச்சிட்டேன் டாக்டர். இப்படிச் சொல்லாமக் கொள்ளாம ஊரைவிட்டே போயிட்டாரே. அவர் இல்லாம என்னால் இனிமே எப்படி வாழ முடியும்?”

“ரொம்ப நல்லவன்தான்... இன்னொருத்தன் பொண்டாட்டியை இப்படி ஏமாத்தி யூஸ் பண்ணிப்பானா?”

“அவர் என்னை யூஸ் பண்ணலை டாக்டர். உண்மையிலேயே அவர் என்மீது பிரியமாதான் இருந்தாரு” என்று மீண்டும் குமுறி குமுறி அழுதாள் மாதவி.

வெளியே அவள் கணவனும் குழந்தைகளும் அவள் சீக்கிரம் சரியாக வேண்டும் என்று ஆஸ்பத்திரி அரசமரத்தடியில் இருந்த பிள்ளையாரிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.

மாதவி அழுது முடிக்கும்வரை காத்திருந்துவிட்டு மருத்துவர் அவளுக்கு எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“அந்த ஆறுமுகம் உண்மையிலேயே உன்னை லவ் பண்ணி இருந்தா உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டிருப்பான். ‘என்னோட வந்துடு, நீ இல்லாம என்னால இருக்க முடியாதுனு’ சொல்லி இருப்பான். அந்த மாதிரி ஏதாவது சொன்னானா?”

மாதவிக்கு அப்போதுதான் அது உரைக்கவே செய்தது. “இல்லை. அப்படி ஒரு தடவைகூடச் சொன்னதில்லை.”

“உனக்கு ஆம்பளைங்களப் பத்தி என்ன தெரியும்?” என்றார் டாக்டர்.

“ஒண்ணுமே தெரியாது டாக்டர். 10-வது முடிச்ச உடனே கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. என் வீட்டுக்காரர், பசங்க, இது மட்டும்தான் என் உலகம். ஆறுமுகம் அண்ணாச்சி கடைக்குப் போனபோது என்கூட நல்லாப் பேசுவார். போகப்போக இப்படி...”

மனச்சிறையில் சில மர்மங்கள் - 11

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாதாரணமாய் பெண்களைவிட ஆண்களுக்குத்தான் கலவியல் தேவை அதிகம். காரணம், அவர்கள் உடலில் ஓடும் டெஸ்டோஸ்டீரோன் எனும் ஹார்மோன். அதனால் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் லேசு பாசாய் ரூட்விட்டுப் பார்ப்பது பல ஆண்களுக்கு இயல்பு. ஆனால், பொதுவாய் பெண்கள் மிக உஷாராய் இருப்பார்கள்.

ஆண், பெண்ணுக்குச் சம்பாதித்துத் தரவோ, அவளுக்குச் சாப்பாடு போடவோ தயாராக இருந்தால்தான் அவன் மனைவி அவனோடு கூடுவதற்குத் தயாராகிறாள். இப்படி எந்த விதத்திலும் பெண்ணுக்கு அனுகூலம் இல்லாதவன் என்றால், பெண்கள் பொதுவாய் அவனைச் சீண்டுவதே இல்லை. அது கட்டிய கணவனாக இருந்தாலும்கூட அவனை விலக்கி வைத்துவிடுகிறாள். இதனால் ஒரு சில ஆண்கள், கலவியல் தொழிலாளர்களை நாடிச் செல்கின்றனர்.

வேறு சிலர், ஓர் ஏமாளிப் பெண்ணைப் பிடித்து, ஆசை வார்த்தை பேசி, அவளைத் தன் வசப்படுத்திக்கொள்வான். இப்படித் தன் தேவைக்காக நயவஞ்சகமாய் ஏமாற்றும் ஆண், மாதவி மாதிரி அடக்க ஒடுக்கமான வெளி உலகம் அறியாத குடும்பத்துப் பெண்ணைத்தான் தேர்ந்தெடுப்பான். அவனுக்கு ஆகப் போகும் ஒரே செலவு, ‘‘உன் உதடுகள் ரொம்ப செக்ஸியா இருக்கு’’ என்பது போன்ற தித்திப்பாய் சில வார்த்தைகள்.

இதில்தான் பெண்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். பொதுவாய் ஆண்களுக்கு அழகாக, தித்திப்பாக, அலங்காரமாக, நுணுக்கமாக எல்லாம் பேசவே வராது. வெட்டு ஒன்று... துண்டு இரண்டு என்று சுவாரஸ்யமே இல்லாமல்தான் பேசுவார்கள். காரணம், ஆணின் மூளையில் மொழிக்குண்டான மையம் மிகவும் சின்னதாக இருக்கிறது. பெண்ணுக்குத்தான் மூளையின் மொழி மையம் மிகப் பெரிதாக இருக்கும். அதனால்தான் பெண்கள் பிறவியிலேயே பேச்சில் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். 

இப்படிச் சின்னதாய் இருக்கும் இந்த மொழி மையத்தை வைத்துக்கொண்டு ஒரு சராசரி ஆண் சாதாரணமாய் பேசுவதே பெரிய விஷயம். இந்தக் குட்டி மொழி மையத்தை வைத்துக்கொண்டு ஒருவன் சுவாரஸ்யமாய், அலங்காரமாய் பேசுகிறான் என்றால், அவன் பல பெண்களிடம் இப்படிப் பேசிப்பேசி ரொம்பவே பிராக்டீஸ் ஆனப் பேர்வழி. இப்படி வார்த்தை ஜாலம் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு பெண்களை வேட்டையாடும் பல ஆண்கள் இருக்கிறார்கள்.அவர்களிடம் பெண்கள் உஷாராக இருப்பது அவசியம்.

ஆறுமுகம் அண்ணாச்சியின் மனைவி அரசு வேலையில் இருந்தாள். அவன் நடத்திவரும் கடையை ஒழுங்காய் கவனிக்காமல், அடுத்தவன் மனைவியோடு சல்லாபிக்கவே நேரத்தைச் செலவழித்தான். கடைசியில், மாதவியின் மனதில் ஆசையை வளர்த்து, அவன் இல்லாமல் அவளால் இருக்க முடியாது என்ற நிலைக்கு அவள் மனதை மயக்கி, கடைசியில் தன் மனைவியின் பின்னால் போய் ஒளிந்துகொண்டான் ஆறுமுகம்.

இவனை மாதிரி வெட்டி ஆஃபீசர்கள்தான் பொழுதுபோக்காகக் கண்டவன் மனைவிக்குக் கடலை போடுகின்றனர். ஆக, உருப்படாத, முதுகெலும்பு இல்லாத, தன் மனைவியோடு ஈடுகொடுக்க முடியாதவர்கள்தான் அடுத்தவன் மனைவிக்கு இப்படித் திருட்டுத்தனமாய் ரூட் விடுகிறார்கள். இதை எல்லாப் பெண்களும் புரிந்துகொண்டால், மாதவி மாதிரி ஏமாறாமல் இருக்கலாம்.

மாதவியின் ஒரே பலவீனம், அவளுக்கு ஆறுமுகம் ஆடிய ஆட்டம் புரியாத அறியாமைதான். அவளுக்கு ஆண்களின் அந்தரங்க ஆட்ட முறைகள் தெரிந்திருந்தால் ஆறுமுகத்தின் வலையில் அவள் விழுந்திருக்க மாட்டாள்.

மனச்சிறையில் சில மர்மங்கள் - 11

இந்த எல்லா விளக்கங்களையும் கேட்ட பிறகுதான் மாதவிக்கு, தான் ஏமாந்த விஷயமே புரிந்தது. புரிந்தபிறகு இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தாள்.

 “அப்படினா... அவன் என்மீது அன்பே வெக்கலையா?  எல்லாம் என் உடம்புக்காகத்தானா? அய்யோ... என் புருஷன் முகத்துல நான் இனிமே எப்படி முழிப்பேன்? அவரு எவ்வளவு நல்லவரு. இவ்வளவும் தெரிஞ்சுமே இதுவரைக்கும் என்னை ஒரு வார்த்தைகூட சீ...ன்னு சொல்லலையே?”
“ஆமா, உன் ஹஸ்பண்ட் ரொம்ப நல்லவர். நிஜமான ஆம்பளை. அதனால்தான் அவருக்கு பாயின்டு பாயின்டா பேச வரலை. அதனால்தான் அவரால் உன் உதடுகள் செக்ஸியா இருக்குனு எல்லாம் ஸ்வீட்டா பேசத் தெரியலை. அவருக்கு அப்படி எல்லாம் ஜாலியா பேச வரலைனாலும், உன் உடம்புக்கு ஒண்ணுன்னா அவர்தானே பதறுறாரு. தினமும் ஐ லவ் யூன்னு சொன்னாதான் அன்பா? இப்படி உனக்காகத் தவிக்கிறாரே, அதுதான் உண்மையான அன்பு.”

‘‘ஆமா டாக்டர், அவருக்கு என் மேல் ரொம்ப அன்பு. எனக்கு ஒண்ணுன்னா அவரால் தாங்கவே முடியாது.”

“அப்படிப்பட்ட ஹஸ்பண்ட் கிடைச்சும் எவனோ ஒருத்தனுக்காகச் சாகப் போயிட்டியே... நடந்தது நடந்துச்சு. இனிமே உன் வீட்டுக்காரரோட சந்தோஷமா இருக்கப் பாரு.” 

“இனிமே கண்டவனை நம்பி ஏமாறக் கூடாது. வீட்டுக்காரரோட இனி சந்தோஷமாய் இருக்கணும். இவ்வளவையும் மீறி என்னை ஏத்துக்குற மனுஷனை எவ்வளவு தாங்குனாலும் தகும்” என்று நினைத்துக்கொண்டே எழுந்தாள் மாதவி.

(மர்மம் அறிவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism