Published:Updated:

காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு இரண்டாவது கூட்டம் எப்போது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு இரண்டாவது கூட்டம் எப்போது?
காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு இரண்டாவது கூட்டம் எப்போது?

காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு இரண்டாவது கூட்டம் எப்போது?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் இரண்டாவது கூட்டம் ஜூலை19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும்  காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவை மத்திய அரசு அமைத்தது. இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் கடந்த 2-ம் தேதி அதன் தலைவர் மசூத் ஹுசேன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்துக்கு ஜூலை மாதத்துக்கு 31 டி.எம்.சி தண்ணீரைத் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி டெல்லியில் காவிரிநீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நவீன்குமார் தலைமையில் 3 மணி நேரம் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் செந்தில்குமார் பங்கேற்றார். இதேபோல் புதுச்சேரி, கேரள, கர்நாடக அரசுகளின் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். கர்நாடக அணைகளின் நீர் இருப்பு, வெளியேற்றம் பற்றி இதில் விவாதிக்கப்பட்டது. தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறந்துவிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவின் இரண்டாவது கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு