Published:Updated:

`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை!
`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை!

`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை!

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். 

`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள சென்னை மெட்ரோ குடிநீர் வழங்கல் வாரியத்தில், ஆன்லைன் மூலம் குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அந்தத் திட்டத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், 'தற்போதுள்ள நடைமுறைப்படி, குடிநீர் இணைப்பு பெறுவதற்கு சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள குடிநீர் அலுவலகத்துக்கு நேரில் வந்து கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டிய சூழல் உள்ளது. சராசரியாகத் தினமும் 100 விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 

`சென்னையை மிரட்டும் குடிநீர் பிரச்னை’ - வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை!

அந்த விண்ணப்பங்கள் அந்தந்த பகுதி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்டு இணைப்பு வழங்குவதற்கு 30 நாள்கள் வரை ஆகின்றன. தற்போது சென்னையின் பரப்பளவு 426 சதுர கி.மீட்டராக விரிவடைந்துள்ளது. நீண்ட தொலைவில் இருப்பவர்கள் விண்ணப்பிப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியது உள்ளது. முதற்கட்டமாகச் சென்னையில் இரண்டு மாடி வரை உள்ள கட்டடங்கள் குடிநீர் இணைப்பு பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையம் மூலம் கட்டணம் செலுத்துதல், இணைப்பைப் பெறும் வரை விண்ணப்பத்தின் நிலையை இணையத்திலேயே தெரிந்துகொள்ளுதல் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கத்திவாக்கம், வளசரவாக்கம், போரூர், அம்பத்தூர், ஆலந்தூர், காரம்பாக்கம் உள்ளிட்ட 12 பகுதிகளில் 533 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நெற்குன்றம், மாதவரம், ராமாவரம், கடம்பாக்கம், மணலி ஆகிய விரிவுபடுத்தப்பட்ட 24 பகுதிகளில் 555 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் பகுதிகளில் இதுவரை 30,300 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 2,00,600 இணைப்புகள் வழங்கப்படவுள்ளன. 3.10.2018-ல் சென்னை உயர் நீதிமன்றம், சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதைத் தடை செய்து, நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்வதை முறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனியார் லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். தனியார் லாரிகள் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகள், பள்ளிகள், தனியார் கட்டடங்களுக்கு உடனடியாகத் தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீர் லாரிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு