Published:Updated:

பேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்!

பேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்!
பேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்!

தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாகத் தமிழ்நாடு குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் போராட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளனர்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதைத் தடுக்க கோரிய சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வணிக நோக்கத்துடன் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதற்குத் தடை விதித்தும், இதை முறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து போராட்டத்தில் இறங்கினர். 3-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்து வருகிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நீர் தட்டுப்பாட்டால், பல்வேறு பகுதிகளில் வணிக வளாகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அதேபோல, நிலத்தடி நீர் எடுக்க விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் தண்ணீர் கேன் உற்பத்தியாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கேன் தண்ணீரையே நம்பியுள்ள குடும்பங்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக, சங்கங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், கேன் தண்ணீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கேன் உற்பத்தியாளர்கள், அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதால் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்தனர். ஆனால், தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.