Published:Updated:

`ஒரு வருஷம் ஆகுது, ஒரு செங்கல்லைக்கூட எடுத்துவைக்கல!'- தமிழக அரசு மீது பாயும் பொன். மாணிக்கவேல்

`ஒரு வருஷம் ஆகுது, ஒரு செங்கல்லைக்கூட எடுத்துவைக்கல!'- தமிழக அரசு மீது பாயும் பொன். மாணிக்கவேல்
`ஒரு வருஷம் ஆகுது, ஒரு செங்கல்லைக்கூட எடுத்துவைக்கல!'- தமிழக அரசு மீது பாயும் பொன். மாணிக்கவேல்

``புராதன கோயில்களில் உள்ள சிலைகளைப் பாதுகாக்கச் சிலை பாதுகாப்பு பெட்டகம் அமைக்க வேண்டும் என அறிக்கை அளித்து ஒன்றரை வருடமாகியும் அரசு இதுவரை ஒரு செங்கல்லைக்கூட எடுத்துவைக்கவில்லை" என ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் வேதனை தெரிவித்தார்.

அரியலூர் அருகே கீழப்பழுவூரில் உள்ள ஆலந்துறையார் கோயிலில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் ஆய்வு மேற்கொண்டார். கோயிலில் உள்ள பழங்கால ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். கோயில் பிரகாரத்தைச் சுற்றியுள்ள சாமி சிலைகள் புதிதாக வைக்கப்பட்டுள்ள சிலைகள் குறித்து ஆய்வு செய்து சிலைகளின் பாதுகாப்பு குறித்தும் அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், ``சிலைக் கடத்தல் பிரிவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் தற்போது ஆய்வு செய்து வருகிறோம். இந்த ஆய்வு திங்கட்கிழமையும் தொடரும். ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள சிலை பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. அதைப் பாதுகாப்பாக வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இக்கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் உள்ளன. உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிலை பாதுகாப்பு பெட்டகம் எவ்வாறு அமைக்க வேண்டும் என்று வரையறுத்து எனது மேற்பார்வையில் கட்ட உத்தரவிட்டுள்ளது. அது குறித்த அறிக்கை அரசுக்கு அளிக்கப்பட்டும் ஒன்றரை ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளது.

மாதத்துக்கு ஒரு பெட்டகம் கட்டியிருந்தால்கூட 16 கோயில்களில் பாதுகாப்பு பெட்டகம் கட்டியிருக்கலாம். ஆனால், இதுவரை ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கவில்லை. கூடிய விரைவில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எந்தக் கோயில்களில் எங்களுடைய வழிகாட்டுதலின்படி சிலை பாதுகாப்பு பெட்டகம் இல்லாமல் உள்ள சுமார் 36,000 கோயில்களில் 2,000 கோடி மதிப்பில் சிலை பாதுகாப்பு பெட்டகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைக்கப்படும் சிலை பாதுகாப்பு பெட்டகம் பெரிய அளவில் வெடிவிபத்து ஏற்பட்டால்கூட பாதுகாப்பானதாக இருக்கும். நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி எங்களது விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" எனக் கூறினார்.