Published:Updated:

மோடி பிறந்தநாள் வேலைவாய்ப்பு முகாம்; 1,898 பழங்குடியின பெண்களுக்கு வேலை வழங்கிய டாடா குழுமம்!

பிரதமர் மோடி - ரத்தன் டாடா ( ட்விட்டர் )

மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளில், ஜார்க்கண்டின் குந்தி, சரைகேலா, சாய்பாசா மற்றும் சிம்தேகா மாவட்டங்களில், இரண்டு நாள்கள் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

மோடி பிறந்தநாள் வேலைவாய்ப்பு முகாம்; 1,898 பழங்குடியின பெண்களுக்கு வேலை வழங்கிய டாடா குழுமம்!

மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளில், ஜார்க்கண்டின் குந்தி, சரைகேலா, சாய்பாசா மற்றும் சிம்தேகா மாவட்டங்களில், இரண்டு நாள்கள் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

Published:Updated:
பிரதமர் மோடி - ரத்தன் டாடா ( ட்விட்டர் )

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில், ஜார்கண்ட்டைச் சேர்ந்த சுமார் 1,898 பழங்குடியினப் பெண்களுக்கு, டாடா எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக அறிக்கை வெளியாகியிருக்கிறது.

முன்னதாக மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளில், ஜார்க்கண்டின் குந்தி, சரைகேலா, சாய்பாசா மற்றும் சிம்தேகா மாவட்டங்களில், இரண்டு நாள்கள் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் அந்தந்த மாவட்டங்களின் கிராமப்புறங்களிலிருந்து 2,600-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

டாடா
டாடா

இந்த நிலையில், வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டவர்களிலிருந்து, 1,898 பேரை டாடா எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் தேர்வு செய்திருப்பதாகப் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மேலும், தேர்வு செய்யப்பட்ட பெண்கள், தமிழ்நாட்டின் ஓசூரிலுள்ள நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

மோடி, அர்ஜுன் முண்டா
மோடி, அர்ஜுன் முண்டா
twitter

இது குறித்து பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, ``இளம் பழங்குடியினப் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதுதான் இதன் நோக்கம். அதோடு அவர்களுக்கு, வேலை செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கியதற்கும் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும், டாடா எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டுக்கு நன்றி" எனத் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல், முதற்கட்டமாக ராஞ்சியிலிருந்து ஓசூருக்கு 822 பழங்குடியினப் பெண்களை ஏற்றிச் செல்லும் சிறப்பு ரயிலை அர்ஜுன் முண்டா இன்று கொடியசைத்து துவக்கி வைக்கிறார். மீதமிருப்பவர்கள் இரண்டாம் கட்டமாக அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் இதற்காக, டாடா கம்யூனிகேஷன் லிமிடெட் மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் அதிகாரிகள் குழு ராஞ்சியில் முகாமிட்டு பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.