லஞ்சம் வெறு!

நோயாளியின் அர்த்தமற்ற சொற்கள்தான் நோயாளியின் இயல்பு (தாவர, விலங்கு, தாது என்ற இனங்களுக்குள்), எதைச் சேர்ந்தது என்பதை வெளிப்படையாகக் காட்டும்.

மனித இனத்தைப் பொறுத்தவரை அந்தச் சொற்கள் சிறிதும் பொருத்தமே இல்லாமல்தான் அமைந்திருக்கும். அதனாலேயே, அந்தக் குரலைப்பற்றிய ஆராய்ச்சியை உண்மை பிடிபடும் வரை தொடர வேண்டும். இதில் வெற்றி பெற்றுவிட்டால், அதுதான் விழிப்பு உணர்ச்சி தரும் பாதை என்பதைப் புரிந்துகொள்வோம். ஆனால், இந்தத் தெளிவை அடைவது மிகவும் கடினம். பெரு முயற்சி செய்ய வேண்டும். அதுவே நலமடைவதற்கு வழிகாட்டக்கூடிய தனி அனுபவமாக இருக்கும்.

தானாகவே, தன்னைத் தன்னில் இருந்து வேறு படுத்தி ஒரு பார்வையாளராக மட்டும் கவனித்து வந்தால், அதுவே ஒரு தனி அனுபவமாக இருக்கும். அது எளியதல்ல. தற்சமயம் எது நம்மைக் கஷ்டப்படுத்திக்கொண்டு இருக்கிறது என்பதை

முதலில் நாம் கண்டுபிடிக்க வேண்டும். அது உடலைச் சார்ந்த நோயாக, வலியாக, கட்டியாக, பக்கவாதமாக எதுவாகவும் இருக்கலாம். இல்லையெனில், மனதைச் சார்ந்த உணர்ச்சியைத் தூண்டும் ஒரு நிகழ்ச்சியாகவும் இருக்கலாம். ஆன்மிக எண்ணங்களால் ஏற்பட்ட குழப்பங்களாகக்கூட இருக்கலாம். எதுவானாலும், அதுவே நம்மைக் கூர்ந்து கவனிக்கக்கூடிய தொடக்கமாக அமையும்.

நான் எந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு இருக்கிறேன் என்ற கேள்வியைத்தான் முதலில், நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். அந்த அனுபவத்தை அடுத்தடுத்த மட்டங்களில் பார்த்துக்கொண்டே வந்து, ஆழ்மனதின் அருகே சென்றுவிட வேண்டும். அங்கே எத்தகைய உணர்ச்சி உண்டாகிறது என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், அந்த ஆழ்மனதில் ஏற்படும் கிளர்ச்சி என்ன? வரும் உருவங்கள் எவை? எத்தகைய சலனங்கள் ஏற்படுகின்றன? என்னென்ன வண்ணங்கள், ஒலிகள் காணப்படுகின்றன? இவையெல்லாம் தெரிந்துகொள்வதற்கு, நாம் மனமென்னும் ஒன்றைக் கடந்து, மனமென்பதே இல்லாத, எண்ணங்கள் எதுவுமே இல்லாத நிலைக்குப் போக வேண்டும். இந்த அனுபவம் நமக்குப் பிடிக்காத, பயத்தைத் தரக்கூடிய, மனதைச் சங்கடப்படுத்தும் கிளர்ச்சிகளையும் உருவங்களையும் காணும்படிச் செய்யலாம்.

எனினும், இதையெல்லாம் அனுபவிப்பவன் அவனது பயணத்தை விடாமல் தொடர வேண்டும். எந்த முடிவும் எடுக்காமல், எந்தச் செயலிலும் இறங்காமல் சாட்சி பூதமாக, நிகழும் எல்லாவற்றையும் பேசாமல் பார்த்துக்கொண்டு இருப்பதைப்போன்றது அது. இதனால் உடல் முழுவதும் கிளர்ச்சி வெளிப்பாட்டின் ஆற்றல் உணரப்படும் அனுபவம் உண்டாகிறது. வாழ்க்கையின் இடையில் பலவகையான சூழ்நிலைகளில் பலப்பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் அல்லவா? அந்த நினைவுகளெல்லாம் இதனால் தூண்டப்படலாம். எனினும், ஏற்படும் கிளர்ச்சிகளால் உண்டாகும் அனுபவத்தில் மிக நீண்ட நேரம் திளைத்துக்கொண்டே இருந்தால், அந்தக் கிளர்ச்சியின் ஆற்றல் மனிதனைப் பாதித்தபோதிலும், மனிதனிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டே நிற்பதைப் புரிந்துகொள்வோம்.

இத்தகைய கூர்ந்த நோக்கு, நெருக்கடிகள் ஏற்படும் சமயங்களில் பெரிதும் கைகொடுக்கும். நெருக்கடியான நிலைமைகளில்தான் நமது ஆழ்மனம் பெரிதும் தூண்டப்பட்டு மிகத் தெளிவாகத் தெரியும். அந்த சமயத்தில் எழும் கிளர்ச்சியின் வெளிப்பாட்டையும் அதற்கு அடிப்படையாக அமைந்த ஆற்றலின் வகையையும் கூர்ந்து கவனித்தாலே விழிப்பு உணர்ச்சி அதிகரித்துவிடும். ஒவ்வொருவருக்கும் அடிநாதத்தின் குரல் அப்போது மிகத் தெளிவாகக் கேட்கும்.

இந்த விழிப்பு உணர்ச்சி உடனடியாக வந்துவிடாது. ஒரே ஒரு முறை வரக்கூடியதும் அல்ல. பல நாட்கள் ஆகலாம். இந்த முறையைப் பின்பற்றி தன்னைத்தானே ஆராயக்கூடியவர்கள், மனிதனுக்கு உரியதல்லாத குரலைத் தங்களுக்குள்ளே கேட்கிறார்கள். இவர்கள் மற்றவர்களைவிட நல்லபடியாக நிகழ்காலத்தில் வாழக்கூடியவர்களாக, உடலும் உள்ளமும் நலமுடன் இருக்கிறார்கள். மற்ற இனங்களின் வேண்டாத தன்மை தானாகவே விலகிவிடுகிறது. அவர்களும் எந்தத் தடையுமில்லாமல் எல்லா உயிரினங்கள் மீதும் மேலும் அன்பு செலுத்திக்கொண்டு வாழ்வாங்கு வாழ்கிறார்கள். அதற்கும் மேலே ஆன்மிக எண்ணங்களை மேம்படுத்திக்கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். உள்ளத்தில் இறுக்கம் தளர்வதால், வேறு நல்ல செய்திகளைச் சிந்திப்பதற்கும் உள் இடம் (space) பெறுவதற்கும் இடம் உண்டாகிறது. அதுவே அப்போதைய வாழ்வை அனுபவித்து மகிழச் செய்கிறது. அது கிளர்ச்சி நிலைக்கும், கற்பனை நிலைக்கும் அப்பாற்பட்டது. மற்ற எல்லா மட்டங்களையும் கடந்த அற்புதமான அனுபவம். நமது பல்வேறு உள்ளக் குழப்பங்களுக்குக் காரணம் தெரிந்துவிட்டால் போதுமே. பிறகு அவற்றை நீக்குவது தானாகவே சாத்தியமாகிவிடுவதால் அதற்கு மேற்பட்ட ஆன்மிக உணர்ச்சிக்கும், எல்லாவற்றையும் இணைத்துக்கொள்ளும் ஒன்றுபட்ட மனநிலைக்கும் இடம் ஏற்படுவது இயல்பாகிறது.

இந்த விழிப்பு உணர்ச்சி இயற்கையில் காணும் எல்லா நிகழ்வுகளும், தானுமே நிலையில்லாதவை என்ற உண்மையையும் புரியவைக்கிறது. அதனாலேயே இத்தகைய அறிவு பெற்றவர்கள் பிறர் நலம் கருதி வாழ்வதையே நோக்கமாகக்கொள்கிறார்கள்.

தன்னைத்தானே ஆராய்தல் - கவனித்தல்!

ஒருநாள் எனக்கு வெளியில் போக வாடகை கார் தேவைப்பட்டது. அதை

அனுப்பும் நிறுவனத்துக்கு, குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பும்படி சொல்லப்பட்டது. அதன்படி கார் வரவில்லை. மறுபடி யும் கேட்டதில் அவர்கள் என்மருத்துவ மனையில் இருந்து யாரோ அதை அனுப்ப வேண்டாம் என்று சொல்லி விட்டதாகச் சொன்னார்கள். அது முழுப் பொய்.

இன்னொரு காரைப் பிடித்தேன். அதை ஓட்டுபவர் இரண்டு மடங்கு பணம் கேட்டார். எனது தேவையைப் புரிந்துகொண்டு அக்கிரமம் செய்கிறார் என்று தோன்றியதால், நானே சென்று சாலையில் வேறு ஒரு காரைப் பிடித்தேன். அந்தக் காரோட்டி '550 ரூபாய் தருவீர்களா?' என்றான். எனக்கு அவசரத் தேவை. சரியென்று ஏறிக்கொண்டேன். மறுபடியும் அவன். ''சார்! 550 ரூபாய்!'' என்று நினைவூட்டினான். 'தெரியுமப்பா! ஆனால், மீட்டர் காட்டுகிறபடிதானே நீ வசூலிக்க வேண்டும்?' என்றேன்.

'இல்லீங்க! நான் ஒரு பெரிய உணவு விடுதியுடன் தொடர்புடையவன். அங்கெல்லாம் நாங்கள் சொல்வது தான். மீட்டர் போட மாட்டோம்!' என்றான். நான் எரிச்சலுடன் 'ஊரில் வாடகை வண்டி ஓட்டும் எல்லோருக்கும் ஒரேவிதச் சட்டம்தான். மீட்டர் படிதான் பணம் வசூலிக்க வேண்டும். நீங்களாகவே ஒரு சட்டம் போடுகிறீர்களே. உங்களை என்ன செய்வது? எங்களுக்கு அவசியம் இருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பேசாமல் கேட்டதைக் கொடுத்துத் தொலைக்க வேண்டி இருக்கிறது!' என்று கோபத்துடன் பயமுறுத்துவதுபோல் பேசினேன். இதைக் கேட்டுக் காரோட்டி சற்று திடுக்கிட்டார்.

பின்பு நிதானமாக எண்ணிப் பார்க்கையில் நான் ஒரு ஏமாளிபோல் நடந்துகொண்டது தெரிந்தது. நீயா? நானா? என்ற சவால் போன்று அந்த நிகழ்ச்சி இருந்தது. அவன் என் அவசர நிலையைப் பயன்படுத்திக் கொள்கிறான். என்னால் எதுவும் செய்ய முடியாததால் கோபம் வந்தது. அவன் பயப்படும்படிப் பேசினேன். இதில் விலங்கினத்துக்கு உரிய முறையில்தான் என்னுடைய எதிர்செயல் அமைந்தது.

அவனிடம் நல்ல முறையில் பேசி, சில உவமை களை அல்லது எடுத்துக்காட்டுகளைச் சொல்லி அவன் தவறைச் சுட்டிக்காட்டி இருக்கலாம். அது அவனுடைய நல்ல இயல்பை சிறிதளவாவது தூண்டியிருக்கக்கூடும்.

இதுபோலத்தான், கார் ஓட்டும் அனுமதி அட்டை பெற அதற்குரிய அலுவலகத்துக்குப் போனால், அங்கு நான்கு மடங்கு பணம் லஞ்சமாகக் கேட்கிறார்கள். சமுதாயத்தில் ஒவ்வொருவரும் லஞ்சம் கொடுக்க மாட்டோம் என்ற உறுதியுடன் இருந்துவிட்டால், நிலைமை தானே சரியாகிவிடும். நமது நாடும் உருப்படும். இப்படிச் செய்வதில் எந்தக் கடுமையான எதிர்ப்பும் வர முடியாது. உள்ளதை உள்ளபடி அறிந்து அதற்கேற்ப ஒரு தீர்வு காணும் வழியில் நடந்துகொள்வது மட்டுமே இருக்கிறது.

இதுபற்றிச் சிந்திப்பதிலும் நமக்கு மனதில் எந்த இறுக்கமும் வருவதில்லை. இது என் கடந்தகால, எதிர்காலங்களை எந்த வகையிலும் பாதிக்கப் போவ தில்லை. தற்போதைய சிக்கலைக் கூர்ந்து பார்ப்பதும், அதனைச் சரிசெய்வது எப்படி என்று சிந்திப்பதும் மட்டுமே நாம் செய்கிறோம். இத்தகைய நல்லதொரு மனநிலை நமக்குள்ளே ஒலிக்கும் இரண்டாவது குரலால் மூடப்பட்டுவிடுவதால் நெருக்கடியான சூழ்நிலைகள் வரும்போது நாம் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறோம்.

நல்லதொரு மனநிலை இருந்தால், நெருக்கடியான சூழ்நிலைகளிலும், நமக்குள் ஒலிக்கும் இரண்டாவது குரலை அடக்கி நம் சிந்தனையைச் செலுத்தி நிலைமையை நல்ல முறையில் சரிசெய்ய அத்தகைய சூழ்நிலைகள் வாய்ப்பளிப்பதாகக்கொள்ள வேண்டும்.

அந்தந்தச் சமயத்தில் காணும் உண்மை நிலைக்கு ஏற்ப வளைந்துகொடுப்பதும், தக்க முறையில் செயல்படுவதும், உடலும் உள்ளமும் நலமுடன் இருப்பதையே குறிக்கின்றன. அத்தகைய மனிதர்கள் நெருக்கடிகளைச் சமாளித்துக்கொண்டு வெளிவர அந்தந்த நேரத்தில் என்ன தேவையோ, அதைப் பொறுத்தே அவர்களது மட்டங்களும் அனுபவமும் மாறிக்கொண்டு வரும்.

உதாரணமாக, ஒருவன் கணக்கு வழக்குகளைப் பரிசோதிக்கும்போது விவரங்கள் என்ற மட்டத்தில் இருப்பான். குழந்தைகளிடம் அன்பு காட்டும்போது உணர்ச்சி மட்டத்திலும், கவிதை எழுதும்போது அல்லது திரைப்படம் பார்க்கும்போது கற்பனை மட்டத்திலும், இயற்கைக் காட்சிகளில் ஈடுபடும்போது கிளர்ச்சி மட்டத்திலும், பாடும்போதும் நடனமாடும்போதும் ஆற்றல் வெளிப்பாட்டு நிலையிலும், தியானம் செய்கையில் ஏழாவது நிலையிலும் இப்படியாக, அந்தந்த நேரத்தில் அதற்குரிய அனுபவம் பெற்று வாழ்வதுதான் மனித இயல்பு.

இவ்வாறு அந்தந்தத் தருணங்களில் வாழ்க்கையை அனுபவிப்பதற்கு மனிதனுக்கு முழு சுதந்திரமும் உண்டு; உரிமையும் உண்டு. அதுதான் உடல் நலம், அதுதான் மன நலம்!