Published:Updated:

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட 75 நாள் சிகிச்சை... எய்ம்ஸ் மருத்துவக்குழுவின் அறிக்கை சொல்வதென்ன?!

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம்!

ஜெயலலிதாவின் சிகிச்சை மற்றும் மரணம் குறித்த விசாரணை அறிக்கையை எய்ம்ஸ் தற்போது வெளியிட்டிருக்கிறது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட 75 நாள் சிகிச்சை... எய்ம்ஸ் மருத்துவக்குழுவின் அறிக்கை சொல்வதென்ன?!

ஜெயலலிதாவின் சிகிச்சை மற்றும் மரணம் குறித்த விசாரணை அறிக்கையை எய்ம்ஸ் தற்போது வெளியிட்டிருக்கிறது.

Published:Updated:
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கேள்விகள் எழ, இதுதொடர்பாக விசாரிக்க அப்போதைய அதிமுக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. அதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த தடை விதித்ததையடுத்து 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச்சில், அப்போலோ மருத்துவர்கள், ஓ.பி.எஸ் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி ஆகியோரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது.

அப்போலோ
அப்போலோ

பின்னர் விசாரணை முடிந்த நிலையில், அதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் கால அவகாசம் கேட்டிருந்தது. இந்த நிலையில், இதில் ஏற்கெனவே விசாரணை நடத்துமாறு அகில இந்திய மருத்துவவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) இயக்குனரகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஜெயலலிதாவின் சிகிச்சை மற்றும் மரணம் குறித்த விசாரணை அறிக்கையை எய்ம்ஸ் தற்போது வெளியிட்டிருக்கிறது.

எய்ம்ஸ்
எய்ம்ஸ்

டாக்டர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவ குழு தாக்கல் செய்த இந்த அறிக்கையில், ஜெயலலிதாவை 2019 செப்டம்பர் 22 அன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் 2019 டிசம்பர் 5 அன்று இரவு 11.30 மணிக்கு அவர் இறந்தது வரையில் என்னென்ன சிகிச்சைகள் தரப்பட்டது என்று கூறப்பட்டிருக்கிறது.

எய்ம்ஸ் அறிக்கை
எய்ம்ஸ் அறிக்கை

மேலும், ஆகஸ்ட் 4 என தேதியிடப்பட்டிருந்த இந்த அறிக்கையில், ``ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியான மருத்துவ நடைமுறையின்படியே இருந்தது. அதில் எந்த பிழையும் இல்லை. மேலும், அவருக்கு உடலில் கட்டுப்பாடற்ற நீரிழிவு, இருதய செயலிழப்புக்கான ஆதாரமும் இருந்தது" என கூறப்பட்டிருக்கிறது.