Published:Updated:

`Alt news’ இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது - மதரீதியாக மக்களின் மனதைப் புண்படுத்தியதாக வழக்கு

முகமது ஜுபைர்

``டெல்லி காவல்துறையினர் 2020-ம் ஆண்டு பதியப்பட்ட மற்றொரு வழக்கைப் பற்றி‌ விசாரிக்கவே ஜுபைரை அழைத்துச் சென்றனர்.” - அல்ட் நியூஸின் மற்றொரு நிறுவனர்.

`Alt news’ இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது - மதரீதியாக மக்களின் மனதைப் புண்படுத்தியதாக வழக்கு

``டெல்லி காவல்துறையினர் 2020-ம் ஆண்டு பதியப்பட்ட மற்றொரு வழக்கைப் பற்றி‌ விசாரிக்கவே ஜுபைரை அழைத்துச் சென்றனர்.” - அல்ட் நியூஸின் மற்றொரு நிறுவனர்.

Published:Updated:
முகமது ஜுபைர்

மதரீதியாக மக்களின் மனதைப் புண்படுத்தியதாகக் கூறி Alt news என்னும் செய்தி நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான முகமது ஜுபைர் (Mohamed Zubair) டெல்லியில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

ஜுபைரை நீதிமன்ற அனுமதியுடன் டெல்லி காவல்துறையினர் ஒரு நாள் ரிமண்டில் எடுத்துள்ளனர். ஸுபைர் சார்பாக பெயில் கோரிய மனுவும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

முகமது ஜுபைர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பற்றி இழிவாகப் பேசியதாக ட்விட்டர் பயனாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த ட்விட்டர் பதிவு 2018-ம் ஆண்டு ஜுபைரால் ட்விட்டரில் பதியப்பட்டது எனக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறையினர், "ஜுபைரால் பதியப்பட்ட அந்தக் குறிப்பிட்ட பதிவு ஒரு மதத்தினரைக் காயப்படுத்துவதாகவும், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் இருக்கிறது. அந்த வெறுப்புணர்வு சமூகச் சீர்கேட்டை ஏற்படுத்தலாம். இது வேண்டுமென்றே செய்யப்பட்டிருக்கிறது. விசாரணை சமயத்தில் போதுமான ஒத்துழைப்பு இல்லாததால் தற்போது ஜுபைரைக் கைதுசெய்திருக்கிறோம்" எனக் கூறினர்.

ஜுபைர் கைது
ஜுபைர் கைது
representational image

ஜுபைர் கைது பற்றிப் பேசிய Alt நியூஸின் மற்றொரு நிறுவனர், "டெல்லி காவல்துறையினர் 2020-ம் ஆண்டு பதியப்பட்ட மற்றொரு வழக்கைப் பற்றி‌ விசாரிக்கவே ஜுபைரை அழைத்துச் சென்றனர். தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வேறொரு‌ புதிய வழக்கைப் பதிந்து கைதுசெய்துள்ளனர். பலமுறை நாங்கள் கேட்டும் இந்தப் புதிய வழக்கின் முதல் தகவல் அறிக்கை பிரதி எங்களுக்குக் கொடுக்கப்படவில்லை" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2020-ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கு ட்விட்டரில் ஒரு பெண்ணை துன்புறுத்தியது தொடர்பானது. இந்த விவகாரம் தொடர்பாக பதியப்பட்ட வழக்கில் ஜுபைருக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என ஏற்கெனவே காவல்துறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 முகமது ஜூபைர்
முகமது ஜூபைர்

இந்தச் சம்பவம் குறித்து ட்விட்டரில் ‌பதிவிட்ட ராகுல் காந்தி, "பாஜக-வின் வெறுப்பு மற்றும் பொய்கள் குறித்து வெளி உலகுக்குக் கூறும் ஒவ்வொருவரும் அவர்களுக்கு எதிரிகள். உண்மையைக் கூறும் ஒரு குரலைத் தடுக்க நினைத்தால் அதுபோல ஆயிரம் குரல்கள் எழும்" எனக் கூறியிருக்கிறார்.

பாஜக நிர்வாகி நுபுர் ஷர்மா, நபிகள் நாயகம் குறித்துப் பேசிய விவகாரத்தில் அவருக்கு எதிராகக் கண்டனங்களை எழுப்பி, தன் கருத்துகளைப் பதிவிட்டதில் முகமது ஜுபைரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.