Published:Updated:

அக்னிபத்: ``வன்முறை வருத்தமளிக்கிறது; அக்னிவீரர்களை மஹிந்திரா வரவேற்கிறது”- ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

``இந்தத் திட்டம் கடந்த ஆண்டு முன்மொழியப்பட்டபோதே நான் கூறினேன். அக்னிவீரர்கள் பெறும் ஒழுக்கம் மற்றும் திறன்கள் அவர்களைச் சிறந்த வேலைவாய்ப்புக்கு ஏற்றதாக மாற்றும்." - ஆனந்த் மஹிந்திரா

அக்னிபத்: ``வன்முறை வருத்தமளிக்கிறது; அக்னிவீரர்களை மஹிந்திரா வரவேற்கிறது”- ஆனந்த் மஹிந்திரா

``இந்தத் திட்டம் கடந்த ஆண்டு முன்மொழியப்பட்டபோதே நான் கூறினேன். அக்னிவீரர்கள் பெறும் ஒழுக்கம் மற்றும் திறன்கள் அவர்களைச் சிறந்த வேலைவாய்ப்புக்கு ஏற்றதாக மாற்றும்." - ஆனந்த் மஹிந்திரா

Published:Updated:
ஆனந்த் மஹிந்திரா

ஜூன் 14 அன்று மத்திய அமைச்சரவையின் ஒப்புதலோடு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய ராணுவ ஆள் சேர்ப்பு முறையான `அக்னிபத்' திட்டத்துக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் என நாடெங்குமிருந்து எதிர்ப்புகள் வந்தவண்ணமே உள்ளன. மேலும், இந்தத் திட்டத்துக்கு எதிராக இளைஞர்களின் போராட்டம் தீவிரமானதையடுத்து, துணை ராணுவப்படையில் அக்னிபத் வீரர்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிப்பதாக உள்துறை அமைச்சகம் கூறியது. அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில், ராணுவ விவகாரத்துறையின் கூடுதல் செயலர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி , ``முப்படைகளில் இளைஞர்களை அதிக அளவில் சேர்ப்பதற்காகவே `அக்னிபத்' திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அரசின் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுவருபவர்களுக்கு ராணுவத்தில் ஒருபோதும் இடமளிக்கப்படாது" என நேற்றுக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, அக்னிபத் வீரர்களைத் தனது நிறுவனத்தில் பணியமர்த்த வரவேற்பதாக இன்று காலை ட்வீட் செய்திருக்கிறார்.

அக்னிபத் - திட்டம்
அக்னிபத் - திட்டம்

ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், ``அக்னிபத் திட்டத்தைச் சுற்றி நடந்த வன்முறையால் நான் வருத்தமடைந்தேன். இந்தத் திட்டம் குறித்து கடந்த ஆண்டு முன்மொழியப்பட்டபோதே நான் கூறினேன். இப்போதும் அதையே மீண்டும் கூறுகிறேன், அக்னிவீரர்கள் பெறும் ஒழுக்கம் மற்றும் திறன்கள் அவர்களைச் சிறந்த வேலைவாய்ப்புக்கு ஏற்றதாக மாற்றும். அத்தகைய பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களை பணியமர்த்தும் வாய்ப்பை மஹிந்திரா குழுமம் வரவேற்கிறது" என ட்வீட் செய்திருந்தார். ஆனந்த் மஹிந்திரா-வின் இந்தப் பதிவுக்கு ட்விட்டரில் ஒருவர், ``மஹிந்திரா குழுமம், அக்னி வீரர்களுக்கு என்ன பதவியில் வேலை வழங்கும்?" எனக் கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு ஆனந்த் மஹிந்திரா, ``கார்ப்பரேட் துறையில், அக்னி வீரர்களுக்கான வேலைவாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. மேலும், அக்னி வீரர்கள், தலைமைப் பண்பு, குழுவாகச் செயல்படுதல் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றுடன் தொழில்துறையின் சந்தைக்கு ஏற்ற தொழில்முறைத் தீர்வுகளையும் வழங்குகிறார்கள். இது நிர்வாகம் மற்றும் விநியோகச் சங்கிலி வரை அனைத்தையும் உள்ளடக்கியது" என பதிலளித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism