Published:Updated:

'நீட் தேர்வு ரத்து குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை' - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

பேட்டியளிக்கும் அன்பில் மகேஷ்
பேட்டியளிக்கும் அன்பில் மகேஷ்

நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுரையின்படி தனியார் பள்ளிகள் 75 சதவீத கட்டணம் மட்டுமே பெற்றோரிடமிருந்து வசூலித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கரூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை தந்தார். க.பரமத்தி, நரிக்கட்டியூர் உள்ளிட்டப் பகுதிகளில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்தார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,``தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். குறிப்பாக, அங்கு படிக்கும் மாணவிகளுக்கு தேவையான கழிவறைகள், காற்றோட்டமான வகுப்பறைகள், கணிப்பொறி வசதியுடன் கூடிய வகுப்பறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட நூலகங்களில் உள்ள புத்தகங்களின் இருப்பு, அதை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு நவீன வசதிகளை வழங்கி மேம்படுத்துவது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். 'கல்வி கட்டணம் வசூலிப்பதில் பெற்றோரை தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது' என அரசு வலியுறுத்தியது. இது தொடர்பாக, தனியார் பள்ளிகள் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடுத்தனர். அதையொட்டி, நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுரையின்படி 75 சதவிகித கட்டணம் மட்டுமே பெற்றோரிடமிருந்து வசூலித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதுவும், தவணை அடிப்படையில் 30 முதல் 45 சதவிகிதம் என கட்டணத்தை தனியார் பள்ளிகள் பிரித்து வசூலிக்க அறிவுரை வழங்கியுள்ளது. இது தொடர்பாக, அதிக புகார்கள் பெறப்பட்டு உள்ளதால், நீதிமன்ற நடைமுறையை பின்பற்றாத தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கரூர்: 'பெட்ரோல், டீசல் விற்பனையில் ரூ.20 லட்சம் கோடி முறைகேடு!' பா.ஜ.க-வைச் சாடும் ஜோதிமணி எம்.பி!

'பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி சென்னை பத்மா சேஷாத்ரி தனியார் பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் குற்றசாட்டு விவகாரத்தில், தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால், தி.மு.க ஆட்சியைக் கவிழ்ப்போம்' என்று தெரிவித்திருந்தார். ஆனால், தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை மேற்கொண்டு, உண்மைத்தன்மை இருந்ததால், அதுகுறித்து சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறைக்கு பரிந்துரை செய்துள்ளனர். அதனடிப்படையில், தற்போது வழக்கு பதிந்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

உயர்கல்வி மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்து ஏ.கே.ராஜன் தலைமையிலான கமிட்டி அறிக்கையை சமர்ப்பிக்க ஒரு மாதம் அவகாசம் கோரியுள்ளது. இதுகுறித்த அறிக்கை பெறப்பட்டவுடன் மாணவர்களின் எதிர்கால நலனை கருதி, விரைவில் தமிழக முதலமைச்சரை ஆலோசித்து அறிவிக்கப்படும். பள்ளிக் கல்வித் துறையில் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை பாடப்புத்தகங்கள் வழங்க, தமிழக முதலமைச்சர் இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவார். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி எப்பொழுது வழங்கப்படும். அதேபோல, கரூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு