Published:Updated:

36 பவுன் தங்க கிளாரினெட்டை தேசப் பாதுகாப்பு நிதியாக கொடுத்த ஏ.கே.சிக்கு பத்மஸ்ரீ விருது! யார் இவர்?

ஏ.கே.சிக்கு பத்மஸ்ரீ விருது

'நாதபிரம்மம்' உட்பட பல பட்டங்கள். தற்போது 'பத்ம ஸ்ரீ விருது' பெறவிருக்கிறார். இசை உலகில் இசைபட வாழ்ந்துகொண்டிருக்கும் கிளாரினெட் வித்வான் ஏ.கே.சி.நடராஜனை கெளரவிக்கும் வகையில் பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு.

36 பவுன் தங்க கிளாரினெட்டை தேசப் பாதுகாப்பு நிதியாக கொடுத்த ஏ.கே.சிக்கு பத்மஸ்ரீ விருது! யார் இவர்?

'நாதபிரம்மம்' உட்பட பல பட்டங்கள். தற்போது 'பத்ம ஸ்ரீ விருது' பெறவிருக்கிறார். இசை உலகில் இசைபட வாழ்ந்துகொண்டிருக்கும் கிளாரினெட் வித்வான் ஏ.கே.சி.நடராஜனை கெளரவிக்கும் வகையில் பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு.

Published:Updated:
ஏ.கே.சிக்கு பத்மஸ்ரீ விருது

இளமைக் காலத்திலிருந்து ஏராளமான கச்சேரிகள். அதன் மூலம் 'ராஜரத்தினா விருது', 'கிளாரினெட் எவரெஸ்ட்', 'கிளாரினெட் சாம்ராட்', 'நாதபிரம்மம்' உட்பட பல பட்டங்கள். தற்போது 'பத்ம ஸ்ரீ’ விருது பெறவிருக்கிறார். இசை உலகில் இசைபட வாழ்ந்து கொண்டிருக்கும் கிளாரினெட் வித்வான் ஏ.கே.சி.நடராஜனை கெளரவிக்கும் வகையில் பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ள மத்திய அரசு. யார் இந்த ஏ.கே.சி. அவரைப் பற்றி ஒரு சின்ன ப்ளாஷ்பேக்.

திருச்சி
திருச்சி

திருச்சி, பெரிய கடை வீதி, சுண்ணாம்புக்காரத் தெருவைச் சேர்ந்தவர் ஏ.கே.சி.நடராஜன். 1931-ம் ஆண்டு, மே 30-ம் தேதி கிளாரினெட் கலைஞர் ஏ.கே.சின்னிகிருஷ்ண நாயுடுவுக்கும் ருக்மணி அம்மாளுக்கும் மகனாய்ப் பிறந்தார் நடராஜன். தனது 10-வது வயதிலேயே ஆலந்தூர் வெங்கடேச ஐயரிடம் கர்நாடக இசையைப் பயின்றார். அதன் பிறகு இலுப்பூர் நடேச பிள்ளையிடம் நாதஸ்வரம் கற்றார். தனித்துவமான அடையாளத்திற்காக மேற்கத்திய இசைக்கருவியான கிளாரினெட்டைத் தேர்வு செய்தார் நடராஜன். கிளாரினெட் கலைஞரான அவரின் தந்தையே நடராஜனை வழிநடத்தினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாதஸ்வரம் கற்க தீவிர சாதகம் செய்வதிலேயே நேரம் போனதால் மூன்றாவது வகுப்போடு பள்ளிப்படிப்பு முடிந்துபோனது. 18-வது வயதிலேயே டெல்லி அகில இந்திய வானொலியில் நிலையக் கலைஞரானார். அவரின் அக்கா மரணமடைந்த செய்தி வந்த நிலையிலும் வானொலி நிலையத்தார்

நடராஜன்
நடராஜன்

அவருக்கு விடுமுறை கொடுக்க மறுத்ததால், வேலையை ராஜினாமா செய்தார் நடராஜன். தஞ்சையை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜி, சுவாட்ஸ் பாதிரியாரிடமும் சென்னை புனித ஜார்ஜ் பள்ளியிலும் படித்த நடராஜனுக்கு அப்போது, மேற்கத்திய செவ்வியல் இசை மிகவும் கவர்ந்தது.

தனது முதல் கச்சேரியை 1946-ல் சென்னை ஜெகநாத பக்த சபாவில் அரியக்குடி, டி.என்.ஆர், பாலக்காடு மணி ஐயர் போன்ற ஜாம்பவான்கள் முன்னிலையில் செய்துள்ளார். ஜாஸ் இசைக்குழு வோடு இணைந்தும் மேடையேறியுள்ள ஏ.கே.சி அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, நியுசிலாந்து, ஜெர்மனி போன்ற பல நாடுகளின் அழைப்பை ஏற்று நம் இசையின் உயர்வை ரசிக்கவைத்துள்ளார்.

திருச்சி திருவரங்கம் கோயில் (தற்போது)
திருச்சி திருவரங்கம் கோயில் (தற்போது)

டிஸ்னி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வில்லியம்ஸ் ஏ.கே.சி-யின் சாதனைகளையும் கற்பிக்கும் முறைகளையும் 1994-ல் ஆய்வுசெய்தார். பல விருதுகளைக் குவித்துள்ள ஏ.கே.சி, 1958-ல் ஆரிய வைஸ்யா சபா தனக்கு விருதாகத் தந்த 36 பவுன் தங்க கிளாரினெட்டை தேசப் பாதுகாப்பு நிதிக்கு அன்றைய முதல்வர் பக்தவத்சலத்திடம் கொடுத்துவிட்டார்.

இவருக்குத் தமிழ் இசைச் சங்கம் இசைப் பேரறிஞர் விருது வழங்கியது. முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மா 'சங்கீத நாடக அகாடமி விருது' வழங்கினார். மியூசிக் அகாடமி 'சங்கீத கலாநிதி' விருது இவருக்கு வழங்கியது. 2003-ல் புகழ்பெற்ற திருவையாறு தியாகராஜர் உற்சவத்தை ஏ.கே.சி.நடராஜன்தான் தொடங்கிவைத்தார்.

ஏ.கே.சி.
ஏ.கே.சி.

திருவாடுதுறை ஆதீனம் நாதஸ்வரக் கலையை போஷித்ததோடு, குளிக்கரை பிச்சையப்பாபிள்ளையும் 20 ஆண்டுகள் ஆதீன வித்வான்களாகவும் இருந்தவர் ஏ.கே.சி. அந்த 20 ஆண்டுகளில் கீர்த்தனை எப்படி வாசிக்கணும், சுரம் எப்படி வாசிப்பது, ராக ஆலாபனை எப்படிச் செய்வது போன்ற விஷயங்களை முழுமையாகக் கற்றுக்கொண்டவர். தற்போதைய 90 வயதில் 75 ஆண்டுகள் இசையோடு வாழ்ந்து வருகிறார் ஏ.கே.சி.நடராஜன். இப்படிப்பட்ட பல பெருமைகளுக்குச் சொந்தகாரர் ஏ.கே.சி க்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கெளரவித்துள்ளது மத்திய அரசு.